40 அடிப்படை உரிமை மனுக்கள் தள்ளுபடி

ண்மையில் பொலிஸ் சேவையின் பல்வேறு தரநிலைகளுக்காக வழங்கப்பட்ட பதவி உயர்வுகளை சவாலுக்கு உட்படுத்தி, பதவி உயர்வு கிடைக்கப்பெறாத சுமார் 1050 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களால் தாக்கல் செய்யப்பட்ட சுமார் 40 அடிப்படை உரிமை மனுக்களை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, நீதியரசர்களான ஜயந்த ஜயசூரிய மற்றும் சம்பத் விஜேரத்ன, நீதியரசர் மஹிந்த ஆகியோர் நேற்று இந்த தீர்ப்பை வழங்கியிருந்தனர். மூவரடங்கிய நீதியரசர்கள் அமர்வின் இணக்கத்துடன், உயர் நீதிமன்ற நீதியரசர் மஹிந்த சமயவர்தனவினால் இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

கடந்த 2019, 2020, 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில், அப்போதைய முன்னாள் பொலிஸ் மா அதிபர்களான பூஜித் ஜயசுந்தர, சி.டி. விக்கிரமரத்ன மற்றும் தேசபந்து தென்னகோன் ஆகியோரின் பதவிக் காலத்தில் வழங்கப்பட்ட பதவி உயர்வுகளே இந்த மனுக்கள் மூலம் சவாலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தன. பொலிஸ் கான்ஸ்டபிள் பதவியிலிருந்து பொலிஸ் சார்ஜன்ட் ஆகவும், பொலிஸ் சார்ஜன்ட் பதவியிலிருந்து உப பொலிஸ் பரிசோதகர் ஆகவும், உப பொலிஸ் பரிசோதகர் பதவியிலிருந்து பொலிஸ் பரிசோதகர் வரை வழங்கப்பட்ட பதவி உயர்வுகளுக்கு எதிராக, பதவி உயர்வு கிடைக்கப்பெறாத ஆண் மற்றும் பெண் பொலிஸ் அதிகாரிகளால் இந்த 40 அடிப்படை உரிமை மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

தீர்ப்பை அறிவித்து நீதியரசர்கள் அமர்வு தெரிவி்க்கையில், பதவி உயர்வுகளை வழங்கும்போது முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக நீதிமன்றம் திருப்தியடையக்கூடிய வகையிலான சான்றுகளையோ அல்லது தகவல்களையோ சமர்ப்பிக்க மனுதாரர்கள் தவறியுள்ளதாக சுட்டிக்காட்டியது. அதற்கமைய, அரசியலமைப்பின் 12(1) உறுப்புரையின் பிரகாரம் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுவதற்கான அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதை உறுதிப்படுத்த மனுதாரர்கள் தவறிவிட்டதாகத் தெரிவித்த உயர் நீதிமன்றம், அதனடிப்படையில் இந்த மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

b

குற்றக் கும்பல்களுக்குக் கைக்குண்டு கிடைத்தது எப்படி?

September 13, 2026

தெஹிவளை வீடொன்று மீது அண்மையில் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பல முக்கியமான தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

bom

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 6 குண்டுத் தாக்குதல்கள்

September 13, 2026

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் திட்டமிட்ட குற்றக் கும்பல்களினால் 6 குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றில் மூன்று தாக்குதல்கள் கல்கிஸ்ஸை பொலிஸ்

pa

காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை

September 13, 2026

இலங்கைச் சுங்கத் திணைக்களத்தினால் ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை” குறித்து

thal

தலைமன்னார் கடலில் மணல்மேட்டில் வழிதவறியவரை மீட்ட கடற்படையினர்

September 13, 2026

இலங்கை கடற்படையினர் தலைமன்னாருக்கு அப்பால் உள்ள கடலில் மணல்மேட்டில் வழிதவறிய நபர் ஒருவரை மீட்டதுடன், அந்த நபருக்கு தேவையான மனிதநேய

dailythanthi_2026-09-12_o3yec9f7_Chennai-mayor

“என் தலைவரைச் சீண்டினால் யாராக இருந்தாலும் விடமாட்டோம்!” – முதலமைச்சர் விஜய்க்கு மேயர் பிரியா ஆவேச எச்சரிக்கை

September 12, 2026

சென்னை: சட்டப்பேரவையில் மிசா சட்டம் மற்றும் மு.க. ஸ்டாலின் குறித்து முதலமைச்சர் விஜய் பேசியதைக் கண்டித்து, சென்னையில் நடைபெற்ற திமுக

1693_12_3_2021_19_53_17_1_MALLAI_SATHYA_MDMK_MADURANTAGAM

இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: திராவிட வெற்றிக் கழகத் தலைவர் மல்லை சத்யா அறிவிப்பு!

September 12, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிப்பதாகத் திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவர் மல்லை சத்யா

13

“ப்யூஸ் போன தவெக அரசு”: மின்வெட்டு மற்றும் ஆவின் பால் விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கடும் சாடல்!

September 12, 2026

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் பால் தட்டுப்பாடு உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல், மக்களைத்

vanniyarasu (1)

“சமூகநீதி குறித்துத் திருமாவளவனுக்குப் பாடம் எடுக்க யாருக்கும் தகுதி இல்லை” – அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

September 12, 2026

சென்னை: சமூகநீதி விவகாரங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்குப் பாடம் எடுக்க எவருக்கும் தகுதி இல்லை எனச்

1200-675-27618532-thumbnail-16x9-kovai-bus

கோவையில் அதிர்ச்சி: அரசுப் பேருந்தின் தானியங்கி கதவில் சிக்கிய மூதாட்டி – ரத்தம் வழிந்ததால் பயணிகள் கொந்தளிப்பு!

September 12, 2026

கோயம்புத்தூர்: கோவையில் பயணிகள் முழுமையாக ஏறுவதற்குள் அரசுப் பேருந்தின் தானியங்கி கதவு திடீரென மூடப்பட்டதில், மூதாட்டி ஒருவரின் முகம் கதவில்

1200-675-26640765-thumbnail-16x9-shanmugam (1)

இடைத்தேர்தலில் சிபிஎம் யாருக்கு ஆதரவு? நாளை திருச்சியில் முடிவு – பெ.சண்முகம்!

September 12, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து நாளை திருச்சியில்

27617897_a

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்: தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரிப் போராட்டம் – 50-க்கும் மேற்பட்டோர் கைது!

September 12, 2026

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கை நீதிமன்ற உத்தரவின்படி தமிழிலும் சமமாக நடத்த வலியுறுத்தி, தடையை மீறிப் போராட்டத்தில்

ctr-2025-12-22-14-41-49

தமிழகத்தில் திடீர் மின்வெட்டுக்கு என்ன காரணம்? – மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

September 12, 2026

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் ஏற்பட்டு வரும் தொடர் மின்தடைக்கான காரணங்களை விளக்கி மின்துறை