300-க்கும் மேற்பட்ட கேபிள் டிவி உரிமையாளர்கள் பாதிப்பு

இலங்கையில் இரு பிரதான நிறுவனங்களின் சுயநலப் போக்கினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கேபிள் தொலைக்காட்சி சேவை உரிமையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். தமக்கான நீதியை அரசாங்கம் தாமதமின்றி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அகில இலங்கை கேபிள் டிவி ஓப்பரேட்டர்கள் சங்கப் பிரதிநிதிகள் இவ்விடயத்தைத் தெரிவித்தனர்.

இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில், “சுமார் இரு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையின் பல பாகங்களிலும் நாம் கேபிள் தொலைக்காட்சி சேவையை முன்னெடுத்து வருகின்றோம். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் 110 பேரும், மலையகத்தில் 54 பேரும் உள்ளடங்கலாக நாடளாவிய ரீதியில் 300-க்கும் மேற்பட்டோர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

இருப்பினும், இலங்கையில் இரு குறிப்பிட்ட நிறுவனங்களைத் தவிர ஏனையோருக்கு இதற்கான முறையான உரிமங்கள் (Licenses) வழங்கப்படுவதில்லை. இதனால் எமது தொழில் நடவடிக்கைகள் முற்றாகப் பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது,” என்றனர்.

தேசிய தொலைத்தொடர்பு ஆணைக்குழுவிடம் (TRC) உரிமம் கோரி விண்ணப்பித்தும் இதுவரை தகுந்த தீர்வு கிடைக்கவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டினர்.

“உரிமக் கட்டணமாக சுமார் 70 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்ட தொலைத்தொடர்பு ஆணைக்குழு, அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது. ஆனால், குறித்த இரு பெரு நிறுவனங்களின் அழுத்தம் காரணமாக அந்த நடைமுறை இடைநிறுத்தப்பட்டுள்ளது. பல கோடி ரூபாய்களை முதலீடு செய்துள்ள நாம், தற்போது தொழிலும் இன்றி முதலீட்டையும் இழந்து நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்,” என அவர்கள் ஆதங்கம் வெளியிட்டனர்.

குறித்த இரு நிறுவனங்களின் பிடியில் சிக்குண்டுள்ள கேபிள் தொலைக்காட்சிச் சேவையை மீட்டு, சிறிய அளவிலான உரிமையாளர்களின் நலன்களைப் பாதுகாக்க உரிய தரப்பினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

ddd

குருக்கள் மடத்தில் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி!

March 17, 2026

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருக்கள் மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி பிரதேசத்தை ஆராயும் முகமாக களுவாஞ்சிக்குடி நீதவான நீதிமன்ற

Ottawa

ஒட்டாவாவில் பனிப்புயலால் மின்வெட்டு; நெடுஞ்சாலைகளும் மூடல்

March 17, 2026

ஒட்டாவா–ஹெட்டினோ பகுதியை கடுமையான பனிப்புயல் தாக்கியதால் இன்று செவ்வாய்க்கிழமை காலை பத்தாயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் மின்சாரம் இன்றி சிரமத்துக்காளாகினர் எனவும் நெடுஞ்சாலை

Manocha

பிரிட்டிஷ் கொலம்பியாவில் இந்திய மாணவன் கொலை!

March 17, 2026

இந்தியாவைச் சேர்ந்த ஒரு சர்வதேச மாணவர் கடந்த வெள்ளிக்கிழமை பிரிட்டிஷ் கொலம்பியா வடகிழக்கு பகுதியில் கொல்லப்பட்டுள்ளார். றோயல் கனேடியன் மவுண்டட்

Pera

நாட்டில் அதிகரித்த வெப்பநிலையிலிருந்து தப்புவது எப்படி?

March 17, 2026

நாட்டில் அதிகரித்த வெப்பநிலையால் சிறுவர்கள், நோயாளர்கள், வயோதிபர்கள் அவதானமாக இருக்கவேண்டும் என யாழ். போதனா வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர்

nalintha-1

பொதுப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படுகின்றது

March 17, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை முகாமைத்துவம் செய்யும் வரை, நாளை (18) முதல் ஒவ்வொரு புதன்கிழமையும் பொதுப் போக்குவரத்துச் சேவைகளை

Publi

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை; புதிய சுற்றுநிருபம் வெளியீடு

March 17, 2026

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையின் கீழ் எரிபொருள் இருப்புகளை சேமிப்பதற்காக, அரச அலுவலகங்களை நடாத்திச் செல்வது குறித்து பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள்,

Ali Larijani

ஈரானின் முக்கிய பாதுகாப்புத் தலைவர் பலி

March 17, 2026

ஈரானின் முக்கிய பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி (Ali Larijani) கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அவர்

Education

தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குமாறு கோரிக்கை

March 17, 2026

புதன்கிழமைகளில் தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குமாறு கோரிக்கை ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அரச பாடசாலைகளுக்கு விடுமுறை

heal

எரிபொருள் நெருக்கடி; சுகாதார அமைச்சின் சில பிரிவுகளுக்கு ’வீட்டிலிருந்து வேலை’

March 17, 2026

சர்வதேச ரீதியில் நிலவும் எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, உள்நாட்டில் எரிபொருள் நுகர்வைக் குறைக்கும் அரசாங்கத்தின் கொள்கைக்கு இணங்க, சுகாதார

jud

பாரிய பண மோசடி: கைது செய்யப்பட்ட பெண் 40 மில்லியன் ரூபாய் பிணையில் விடுவிப்பு

March 17, 2026

போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 66 வயதுடைய பெண் ஒருவரை,

alagana

பம்பரக்கலை கிராமத்தில் பாரிய அபிவிருத்திப் பணிகள்

March 17, 2026

‘கிளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமான ‘நாட்டை மேம்படுத்தும் அழகான கிராமம்’ எனும் கருப்பொருளின்

Omar hospital

காபூல் மருத்துவமனை மீது வான்வழித் தாக்குதல் : 400 பேர் பலி

March 17, 2026

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லைகளுக்கு இடையே கடந்த மூன்று வாரங்களாக நீடித்து வரும் மோதல், தற்போது பெரும் மனிதநேயப் பேரழிவாக