கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளுக்கு 3ம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்படி இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை புதன்கிழமை (26) காலை 8:00 மணி முதல் வியாழக்கிழமை (27) இரவு 8:00 மணி வரை அமுலில் இருக்கும்.
கண்டி மாவட்டத்தின் உடதும்பர பிரதேச செயலகப் பிரிவு (DSD) மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் , நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, நில்தந்தஹின்ன, மதுரட்ட மற்றும் ஹங்குராங்கெத்த பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் 3ம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.