சுகாதார சேவையில் 294 புதிய தாதியர்களை உள்வாங்குவதற்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் விழா நாளை (10) இடம்பெறவுள்ளது.
இந் நியமனங்கள் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தலைமையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவின் முதல் மாடியில் உள்ள கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
இதன்போது 9 பேச்சு பயிற்சியாளர்கள் மற்றும் 6 மருந்தாளுனர்களை சுகாதார சேவையில் இணைப்பதற்கான நியமனக் கடிதங்களும் அமைச்சரின் தலைமையில் இங்கு வழங்கப்பட உள்ளன.
2019 ஆம் ஆண்டு மாணவர் தாதியர் குழுவின் கீழ் மூன்று ஆண்டு தாதியர் பயிற்சி பாடநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவகளே தரம் lll தாதியர் அதிகாரிகளாக நியமிக்கப்படும் இந்த புதிய தாதியர் அதிகாரிகளாவார்.
சிறந்த சுகாதார சேவையை தொடர்ந்து வழங்கும் நோக்கத்துடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை முன்னுரிமையாகக் கொண்டு, அரசின் கீழ் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள மாகாண சபையின் கீழ் உள்ள வைத்தியசாலைகளில் தற்போதுள்ள வெற்றிடங்களுக்கு இந்தப் புதிய அதிகாரிகள் பணியமர்த்தபட உள்ளனர்.