25க்கும் மேற்பட்ட சாரதிகளுக்கு அபராதம்

கிண்ணியா நகரப் பகுதியில் நிலவிவரும் கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு, போக்குவரத்து விதிகளை மீறும் வாகன சாரதிகளுக்கு எதிராக பொலிஸார் இன்று (02.3.2026) விசேட அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

தற்போது புனித ரமலான் காலம் என்பதால், கிண்ணியா பிரதான வீதியில் பொதுமக்களின் நடமாட்டமும் வாகனப் போக்குவரத்தும் அதிகரித்துக் காணப்படுகின்றது.

போதிய அகலமின்மை காரணமாக இப்பாதையில் அடிக்கடி சன நெரிசலும், நீண்ட வாகன நெரிசலும் ஏற்பட்டு வருகின்றது.

இதனைச் சீர்செய்யும் நோக்கில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து விதிமுறைகளை அமுல்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஒற்றை – இரட்டை நாள் விதிமுறை குறிப்பாக, பிரதான வீதியில் வாகனங்களை நிறுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள “ஒற்றை நாள் – இரட்டை நாள்” (Odd – Even Day Parking) முறையைச் சரியாகப் பின்பற்றாத சாரதிகள் மீது இதன்போது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த விதியை மீறி வாகனங்களை நிறுத்திய 25-க்கும் மேற்பட்ட சாரதிகளுக்கு இன்று மாத்திரம் தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன், எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

இது குறித்து கிண்ணியா போக்குவரத்து பொலிஸ் பிரிவினர் கருத்துத் தெரிவிக்கையில், “கிண்ணியா நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு சாரதிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியமாகும்.

ரமலான் காலத்தில் மாத்திரமன்றி, ஏனைய காலங்களிலும் இந்த ஒற்றை – இரட்டை நாள் வாகன நிறுத்த முறையை ஒரு பழக்கமாக மாற்றுவதே எமது நோக்கமாகும்.

பொதுமக்களின் அசௌகரியங்களைக் குறைப்பதற்காகவே இந்தச் சட்ட நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்.” எனத் தெரிவித்தனர்.

இந்த அதிரடி நடவடிக்கையினால் கிண்ணியா நகரின் போக்குவரத்து நிலைமை இன்று ஓரளவுக்குச் சீராகக் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

gol

தங்கத்தின் விலையில் பாரிய ஏற்றம்

March 3, 2026

சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக

jail

பெட்ரோல் பதுக்கிய தொழிலதிபர் கைது

March 3, 2026

பெட்ரோல் சேமித்து வைத்திருந்த பேருவளை, வலத்தர பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திங்கட்கிழமை (02) அன்று பேருவளை பொலிஸாரால் கைது

mark

13ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது கனேடிய பிரதமரை சமூக வலைத்தளத்தில் மிரட்டியவர் மீதான வழக்கு

March 3, 2026

வின்னிபெக்கைச் சேர்ந்த ஒரு நபர், பிரதமர் கனேடிய பிரதமர் மார்க் கேர்னிக்கு எதிராக மிரட்டல்கள் வெளியிட்டதாகவும், யூதர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு

sol

கனேடிய சோலார் நிறுவனங்களால் கிராமப்புற ஆபிரிக்காவுக்கு மின்சாரம்

March 3, 2026

கனேடிய சோலார் நிறுவனங்கள் புதுமையான தீர்வுகளை பயன்படுத்தி கிராமப்புற ஆபிரிக்காவிற்கு மின்சாரம் கொண்டு வருகின்றன சோலார் சக்தியால் இயங்கும் பேட்டரி

fi

மத்திய மலைநாட்டின் வனப்பகுதிக்கு தீவைப்பு : குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

March 3, 2026

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.

in wo

சர்வதேச மகளிர் தின ஒத்திவைப்பு வேளை விவாதம்

March 3, 2026

ராளுமன்றம் மார்ச் இன்று முதல் 06ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த

nats

நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற இருவர் கைது

March 3, 2026

சுமார் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான நட்சத்திர ஆமைகள் 25 ஐ, சட்டவிரோதமான முறையில் மலேசியாவிற்கு கடத்த

ev

ஏவுகணைத் துண்டுகள் விழுந்ததில் இலங்கைப் பெண் காயம்

March 3, 2026

இஸ்ரேலின் பீயேர்ஷெபா (Beersheba) குடியிருப்புப் பகுதி மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலின் பாகங்கள் வீட்டின் மீது விழுந்ததில் இலங்கை

har

ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

March 3, 2026

மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான்

soc

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு?

March 3, 2026

வரவிருக்கும் ஒக்டோபர் மாதம் முதல், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரித்தானிய அரசு

gl

ஜி.எல். பீரிஸ் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

March 3, 2026

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையினால் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அதன் பாரதூரமான தன்மை குறித்து

tn

இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டல்!

March 3, 2026

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக தமிழகக் கச்சதீவு பாரம்பரிய