250 இளநீர் கிராமங்கள் உருவாக்க திட்டம்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் “Ceylon King Coconut Village” தேசிய திட்டம் இன்று(02) குருநாகல் மாவட்டத்தின் தெங்கு பயிர்ச்செய்கை சபைக்குச் சொந்தமான மஹாயாய தோட்ட வளாகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

நாட்டின் இளநீர் பயிர்ச்செய்கையை விரிவுபடுத்தி உற்பத்தியையும் உற்பத்தித்திறனையும் அதிகரிப்பதும், இளநீர் மற்றும் அது சார்ந்த உற்பத்திகளுக்கான சர்வதேச சந்தையை விரிவுபடுத்துவதும் இதன் முதன்மை நோக்கங்களாகும்.

இத்திட்டத்தின் கீழ் இந்த ஆண்டில் 75 கிராமங்களும், 2027 ஆம் ஆண்டில் 80 கிராமங்களும், 2028 ஆம் ஆண்டில் 95 கிராமங்களும் என, மூன்று ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும் 250 இளநீர் கிராமங்கள் நிறுவப்படவுள்ளன.

2030 ஆம் ஆண்டாகும்போது இலங்கையின் வருடாந்த இளநீர் அறுவடைகளை 25 மில்லியனால் அதிகரிப்பதும், இளநீர் மற்றும் அது சார்ந்த ஏற்றுமதி வருமானத்தை 12 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான தொகையால் அதிகரிப்பதும் இத்திட்டத்தின் முக்கிய இலக்குகளாகும்.

இதன்போது இளநீர் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், தற்போதுள்ள இளநீர் மரங்களைப் புனரமைக்கும் போது ஒரு மரத்திற்கு ரூ. 700 நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

அத்துடன், புதிய பயிர்ச்செய்கைக்காக ஒரு இளநீர் கன்றின் பெறுமதி ரூ. 750 ஆக இருப்பினும், விவசாயிகளுக்கு அது ரூ. 150 என்ற மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டில் 20,300 இளநீர் மரங்களைப் புனரமைக்கவும், 37,500 புதிய இளநீர் கன்றுகளை நடவு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதுடன், 2026–2028 காலப்பகுதியில் புதிய பயிர்ச்செய்கைக்காக 212,500 கன்றுகளை நடவு செய்யவும், தற்போதுள்ள 221,500 இளநீர் மரங்களைப் புனரமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் ஆரம்ப கட்டமாக மொனராகலை, மாத்தறை, குருநாகல், கேகாலை, கம்பஹா, களுத்துறை, புத்தளம், இரத்தினபுரி, அம்பாந்தோட்டை, அனுராதபுரம், திருகோணமலை, பொலன்னறுவை, அம்பாறை, மாத்தளை, காலி, மட்டக்களப்பு மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் 75 கிராமங்களில் இந்த ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

மேலும், இளநீர் உற்பத்தியாளர்கள், சேகரிப்பாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களை உள்ளடக்கிய முறையான தரவுத்தளமொன்றை நிறுவுதல், 500 ஏக்கர் இளநீர் பயிர்ச்செய்கைக்கு நீர்ப்பாசன வசதிகளை வழங்குதல் மற்றும் இளநீர் பயிர்ச்செய்கை சார்ந்த வருமானம் மற்றும் வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்துதல் என்பனவும் இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளன.

“Ceylon King Coconut Village” தேசிய திட்டத்தின் மூலம் இளநீர் பயிர்ச்செய்கை, சேகரிப்பு, போக்குவரத்து, பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி சார்ந்து புதிய வருமானம் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, 21,250 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதும் இதன் மற்றொரு நோக்கமாகும்.

இதன் மூலம் கிராமப்புற மக்களின் வருமானத்தை வலுப்படுத்தி, அவர்களை தேசிய பொருளாதார வளர்ச்சியின் நேரடிப் பங்காளிகளாக மாற்றுவதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

dailythanthi_2026-09-12_o3yec9f7_Chennai-mayor

“என் தலைவரைச் சீண்டினால் யாராக இருந்தாலும் விடமாட்டோம்!” – முதலமைச்சர் விஜய்க்கு மேயர் பிரியா ஆவேச எச்சரிக்கை

September 12, 2026

சென்னை: சட்டப்பேரவையில் மிசா சட்டம் மற்றும் மு.க. ஸ்டாலின் குறித்து முதலமைச்சர் விஜய் பேசியதைக் கண்டித்து, சென்னையில் நடைபெற்ற திமுக

1693_12_3_2021_19_53_17_1_MALLAI_SATHYA_MDMK_MADURANTAGAM

இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: திராவிட வெற்றிக் கழகத் தலைவர் மல்லை சத்யா அறிவிப்பு!

September 12, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிப்பதாகத் திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவர் மல்லை சத்யா

13

“ப்யூஸ் போன தவெக அரசு”: மின்வெட்டு மற்றும் ஆவின் பால் விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கடும் சாடல்!

September 12, 2026

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் பால் தட்டுப்பாடு உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல், மக்களைத்

vanniyarasu (1)

“சமூகநீதி குறித்துத் திருமாவளவனுக்குப் பாடம் எடுக்க யாருக்கும் தகுதி இல்லை” – அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

September 12, 2026

சென்னை: சமூகநீதி விவகாரங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்குப் பாடம் எடுக்க எவருக்கும் தகுதி இல்லை எனச்

1200-675-27618532-thumbnail-16x9-kovai-bus

கோவையில் அதிர்ச்சி: அரசுப் பேருந்தின் தானியங்கி கதவில் சிக்கிய மூதாட்டி – ரத்தம் வழிந்ததால் பயணிகள் கொந்தளிப்பு!

September 12, 2026

கோயம்புத்தூர்: கோவையில் பயணிகள் முழுமையாக ஏறுவதற்குள் அரசுப் பேருந்தின் தானியங்கி கதவு திடீரென மூடப்பட்டதில், மூதாட்டி ஒருவரின் முகம் கதவில்

1200-675-26640765-thumbnail-16x9-shanmugam (1)

இடைத்தேர்தலில் சிபிஎம் யாருக்கு ஆதரவு? நாளை திருச்சியில் முடிவு – பெ.சண்முகம்!

September 12, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து நாளை திருச்சியில்

27617897_a

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்: தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரிப் போராட்டம் – 50-க்கும் மேற்பட்டோர் கைது!

September 12, 2026

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கை நீதிமன்ற உத்தரவின்படி தமிழிலும் சமமாக நடத்த வலியுறுத்தி, தடையை மீறிப் போராட்டத்தில்

ctr-2025-12-22-14-41-49

தமிழகத்தில் திடீர் மின்வெட்டுக்கு என்ன காரணம்? – மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

September 12, 2026

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் ஏற்பட்டு வரும் தொடர் மின்தடைக்கான காரணங்களை விளக்கி மின்துறை

1291252

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகமா? – ‘துக்ளக் தர்பார்’ முடிவைக் கைவிடச் சீமான் கடும் கண்டனம்!

September 12, 2026

சென்னை: ரூ. 1,200 கோடியில் சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட

solomon-pappaiah

பட்டிமன்ற பிதாமகனின் சகாப்தம் நிறைவு: முழு அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!

September 12, 2026

மதுரை: மறைந்த மூத்த தமிழறிஞரும், புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் (90) உடல், மதுரை தத்தனேரி மின்

minister-vinoth (1)

ஆய்வுக் கூட்டத்துக்குச் செல்லும் வழியில் மனிதநேயம்: விபத்தில் சிக்கியவர்களை மீட்ட அமைச்சர் வினோத்!

September 12, 2026

கும்பகோணம்: கும்பகோணம் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடியவர்களுக்கு, அவ்வழியாகச் சென்ற

9712_1_9_2026_12_31_11_2__DSC4468

திருச்சி முக்கியக் கோயில்களில் செல்போன் பாதுகாப்புக்கான கட்டணம் ரத்து: பக்தர்களுக்கு இலவச வசதி!

September 12, 2026

திருச்சி: திருச்சியில் உள்ள 5 பிரதான கோயில்களில் பக்தர்களின் செல்போன்களைப் பாதுகாப்பு அறையில் வைப்பதற்காக வசூலிக்கப்பட்டு வந்த கட்டண முறை