குவைத்தில் நேற்று இடம்பெற்ற தாக்குதலை தொடர்ந்து 234 ஏவுகணைகள் மற்றும் 422 ட்ரோன்களை கண்டறிந்துள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது குறித்து எக்ஸ் (X) தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்தத் தாக்குதல் நடவடிக்கையினால் பிரஜைகள் மற்றும் குடியிருப்பாளர்கள் மத்தியில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதில் ஒரு சிறுமி, குவைத் ஆயுதப்படையைச் சேர்ந்த இருவர் மற்றும் இரண்டு எல்லைப் பாதுகாப்புப் படையினரும் உள்ளடங்குகின்றனர்.
மேலும், கடந்த 24 மணிநேரத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து குவைத்தில் இரண்டு தீ விபத்துக்கள் பதிவாகியுள்ளன.
ஒன்று அரசாங்கக் கோபுரத்திலும், மற்றொன்று குவைத் சர்வதேச விமான நிலையத்திலும் ஏற்பட்டுள்ளன.
தற்போது இந்த இரண்டு தீ விபத்துக்களும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.