வவுனியா, புளியங்குளம் – பரசங்குளம் புதிய வீட்டுத்திட்ட கிராம வீதிக்கான காப்பற் இடும் பணியினை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரனால் நேற்றையதினம்(3) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தற்போதைய அரசாங்கத்தினால் கிராமப்புற வீதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதற்கமைவாக 23 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் 810 மீற்றர் தூரத்திற்கான புளியங்குளம் – பரசங்குளம் வீதியானது காப்பற் இடும்பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தநிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஜெகதீஸ்வரன், கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருத்தனர்.