22,522 குடும்பங்கள் இடைத்தங்கல் முகாம்களில்

நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட சுமார் இருபதாயிரம் குடும்பங்கள் தொடர்ந்தும் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நாடு பூராகவும் அமைந்துள்ள 762 இடைத்தங்கல் முகாம்களில் 22,522 குடும்பங்களைச் சேர்ந்த 70,055 நபர்கள் இதுவரை தங்கியுள்ளதாக அந்த நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்திலேயே அதிகளவான இடைத்தங்கல் முகாம்கள் அமைந்துள்ளன. அங்குள்ள 222 இடைத்தங்கல் முகாம்களில் 5,427 குடும்பங்களைச் சேர்ந்த 17,437 பேர் தங்கியுள்ளனர்.

அதற்கடுத்ததாக நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் அதிக இடைத்தங்கல் முகாம்கள் அமைந்துள்ளன. நுவரெலியாவில் 206 முகாம்களில் 6,487 குடும்பங்களைச் சேர்ந்த 19,750 பேரும், பதுளை மாவட்டத்தில் 155 முகாம்களில் 6,026 குடும்பங்களைச் சேர்ந்த 19,409 பேரும் தற்போது தங்கியுள்ளனர்.

இதேவேளை, இந்த இடைத்தங்கல் முகாம்களில் உள்ள குடும்பங்களை விரைவாக மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.

2-3 மாதங்களுக்குள் அக்குடும்பங்களை மீள்குடியேற்ற உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.

இந்த முகாம்களில் தங்கியுள்ள சிலரின் வீடுகள் முழுமையாகவும், மேலும் சிலரின் வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், தாம் வசித்த இடங்களில் நிலவும் ஆபத்து நிலைமை காரணமாக மீண்டும் அவ்விடங்களில் குடியேற மற்றுமொரு தரப்பினர் விருப்பம் தெரிவிக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.

அதற்கமைய, அத்தரப்பினருக்கு அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 3 மாத வீட்டு வாடகை கொடுப்பனவை வழங்கும் பணிகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

வீடுகள் முழுமையாக சேதமடைந்தவர்களுக்கு வீடுகளை வழங்குவதே தற்போது சவாலாக மாறியுள்ளதாகத் தெரிவித்த அவர், அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள 50 இலட்சம் ரூபா பணத்தை வழங்குவதற்கான மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து காணிகளை வழங்குவது தொடர்பில் தற்போது ஆராயப்பட்டு வருவதாகவும் கூறினார்.

அதற்காக அரச காணிகள் தொடர்பான தகவல்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருவதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி மேலும் தெரிவித்தார்.

anna

திருப்பூர் போராட்டத்தில்,அண்ணாமலை கைது

December 18, 2025

குப்பை கொட்டும் விவகாரத்துக்கு தீர்வு கோரி நடந்த போராட்டத்தில், பங்கேற்ற தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டார்.

arrest

புத்தளத்தில் கொரிய நாட்டவரை தாக்கியவர் கைது

December 18, 2025

புத்தளத்தில் கொரிய நாட்டவரை தாக்கியதாகக் கூறப்படும் நபரை வென்னப்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர். வென்னப்புவ, வேவா வீதியைச் சேர்ந்த 39

thara

தாராபுரம் பகுதியில் சிகரெட்டுகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளுடன் ஒருவர் கைது!

December 18, 2025

மன்னார் – தாராபுரம் பகுதியில் சட்டவிரோதமாக சிகரெட்டுகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

cr

பொலன்னறுவையில் லொறிச் சாரதியின் சடலம் மீட்பு !

December 18, 2025

பொலன்னறுவை, மனம்பிட்டிய – கொடலீய பாலத்திற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில், ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கை, கால்கள்

ju

கைதாகிய பிள்ளையானின் சகா விடுதலை!

December 18, 2025

குற்ற விசாரணைப் பிரிவினரால் தேடப்பட்டு வந்த நிலையில் குவைத் நாட்டிற்கு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த பிள்ளையானின் சகாவான அஜித்

mas

மஸ்கெலியா பிரதேச சபையின் வரவு-செலவுத் திட்டம் நிறைவேற்றம்

December 18, 2025

மஸ்கெலியா பிரதேச சபையின் 2026 ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டம் (பாதீடு) மூன்று மேலதிக வாக்குகளால், வியாழக்கிழமை (18) அன்று நிறைவேற்றப்பட்டது.

namal

பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கான இழப்பீடு சுற்றறிக்கை வேண்டும் – நாமல் ராஜபக்ச

December 18, 2025

‘டித்வா’ பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கான இழப்பீட்டை கணக்கிடுவது குறித்து ஜனாதிபதி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என மொட்டுக் கட்சியின்

ris

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடைக்கலம் கொடுத்த தேரருக்கு நன்றி கூறிய ரிஷாட்

December 18, 2025

கண்டி, கம்பளையில் வெள்ள அனர்த்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட கெலியோயா, எல்பிட்டிய மக்களுக்கு அடைக்கலம் கொடுத்த எல்பிட்டிய பொத்துகல் விகாரைக்கு அகில

dd

சூறாவளியை எதிர்கொள்ள முன்னாயத்தங்கள்; விசேட தெரிவுக்குழு நியமிக்கவும்

December 18, 2025

டித்வா சூறாவளியை முகம்கொடுப்பதற்காக முன்னாயத்தங்கள் இல்லாமை தொடர்பில் முழுமையாக ஆராய்வதற்காக விசேட தெரிவுக் குழுவொன்றை நியமிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

sr

களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளராக சிறீதர்?

December 18, 2025

இலங்கையின் களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளராக இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம் முடிவு வரையில் இந்தியாவின் முன்னாள் களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளர் ஆர்.

par

சம்பியனான பரிஸ் ஸா ஜெர்மைன்

December 18, 2025

சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் கண்டங்களுக்கிடையிலான கிண்ணத் தொடரில் பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைன் சம்பியனானது. கட்டாரில்

pran

மீள இயங்கவுள்ள பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை!

December 18, 2025

பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள இயக்குவது தொடர்பில் கிளிநொச்சி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டது. இக்கூட்டம் நேற்று காலை, கிளிநொச்சி