அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணையை இன்று(02) வரை ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
நேற்றைய தினம் மனுதாரர் தரப்பின் வாதங்கள் இரவு 10.30 மணியளவில் நிறைவடைந்ததுடன், மனுதாரர் தரப்பின் மேலதிக வாதங்கள் ஒத்திவைக்கப்பட்டன.
இன்று மனுதாரர் தரப்பின் மேலதிக வாதங்கள், இடை மனுதாரர்கள் மற்றும் சட்டமா அதிபரின் கருத்துரைகள் இடம்பெறவுள்ளன.