ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க 2027 வரவு செலவுத் திட்ட உரை: கடன் முகாமைத்துவம், சர்வதேச வர்த்தக உடன்படிக்கைகள், IMF எதிர்காலம்

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையைப் பாராளுமன்றத்தில் நிகழ்த்தியுள்ளார். இன்று (12) முற்பகல் அமைச்சரவை இதற்கு அங்கீகாரம் வழங்கியிருந்தது. இது தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் மூன்றாவது வரவு செலவுத் திட்டமும், நாட்டின் 81 ஆவது வரவு செலவுத் திட்ட உரையுமாகும். வரவு செலவுத் திட்ட உரையின் பிரதான சிறப்பம்சங்கள் வருமாறு: சர்வதேச நாணய நிதியம் […]

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க2027 வரவு செலவுத் திட்ட உரை: கடன் முகாமைத்துவம், சர்வதேச வர்த்தக உடன்படிக்கைகள், IMF எதிர்காலம்

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையைப் பாராளுமன்றத்தில் நிகழ்த்தியுள்ளார். இன்று (12) முற்பகல் அமைச்சரவை இதற்கு அங்கீகாரம் வழங்கியிருந்தது. இது தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் மூன்றாவது வரவு செலவுத் திட்டமும், நாட்டின் 81 ஆவது வரவு செலவுத் திட்ட உரையுமாகும். வரவு செலவுத் திட்ட உரையின் பிரதான சிறப்பம்சங்கள் […]

நீங்கள் செய்த உதவியை ஒருபோதும் மறக்க மாட்டோம்” : ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவுக்கு அனோஜனின் குடும்பத்தினர் நன்றி!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்ட இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவின் குடும்பத்தினர், அவரது விடுதலையை உறுதி செய்யத் தலையிட்டமைக்காக ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவுக்கு    நன்றியைத் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி ஊடகப் பிரிவின் (PMD) தகவலின்படி, அனோஜனின் குடும்ப உறுப்பினர்கள் இன்று (12) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியை நேரில் சந்தித்து அவரது முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்தனர். இச்சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி திசாநாயக்க, எச்சந்தர்ப்பத்திலும் இலங்கைப் பிரஜைகளுக்காக முன்னிற்பது […]

மதுபானம் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தி வாகனம் செலுத்திய 23 பேர் கைது

மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவித்துவிட்டு வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கண்டறியும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடமாடும் மருத்துவப் பரிசோதனை நடவடிக்கை யின்போது 23பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு மாவட்ட போக்குவரத்துப் பொலிஸாரும் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகமும் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது. தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்தி, உயிரிழப்புகளைக் குறைக்கும் நோக்கில் இந்த விசேட திட்டம் செயல்படுத்தப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட போக்குவரத்துப் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் […]

செட்டிகுளம் தனியார் காணிகள் மற்றும் குளங்களை விடுவிக்க விசேட பிரேரணை!

செட்டிகுளம் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் புதன்கிழமை (11.11.2026) பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவர் மற்றும் செட்டிகுளம் பிரதேச செயலாளர் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் உள்ளிட்ட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபையின் தவிசாளர், உபதவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், அரச திணைக்களங்களின் உயரதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.தீவுகள் ஆராயுங்கள் இதன்போது, செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நீண்டகாலமாக வனவளத் திணைக்களத்தின் […]

நான்கு நீர்த்தேக்கங்கள் வான் பாய்கின்றன

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, விமல் சுரேந்திர, லக்சபான, கெனியன் மற்றும் மேல் கொத்மலை ஆகிய நான்கு நீர்த்தேக்கங்களும் வான் பாய்கின்றன. காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவை எட்டுவதற்கு மேலும் நான்கு அடி மாத்திரமே எஞ்சியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தொடர் மழையால் ஆறுகள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதுடன், சில நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் ஊடாகவும் நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், களனி கங்கை மற்றும் மகாவலி கங்கையின் […]

யாழ்., அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

கல்வி மற்றும் ஆராய்ச்சித் தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்கில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கும் அமெரிக்காவில் உள்ள தெற்கு இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் (Southern Illinois University) அறங்காவலர் குழுவிற்கும் இடையே ஐந்தாண்டு காலப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திடுவதற்கான அவசியமான அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே கூட்டுக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகள் மூலம் கல்விசார் சிறந்து விளங்குதல், அறிவுப் பகிர்வு மற்றும் நட்புறவை மேம்படுத்துவதே இப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரதான நோக்கமாகும். இந்த ஒப்பந்தத்தின் கீழ், இரு பல்கலைக்கழகங்களும் […]

1990 ’சுவசெரிய’ சேவைக்கு மேலும் 100 அவசர ஊர்திகள்

  இந்திய அரசாங்கத்தின் 1,725.73 மில்லியன் இலங்கை ரூபாய் நிதியுதவியுடன், 1990 ‘சுவசெரிய’ தேசிய அவசர ஊர்தி சேவைக்குக் கூடுதலாக 100 அவசர ஊர்திகளை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுப் பரிமாறிக்கொள்ளப்பட்டது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மேதகு சந்தோஷ் ஜா மற்றும் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்ஹி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.   கொழும்பில் புதன்கிழமை (11-11-2026) அன்று நடைபெற்ற முதலாவது பிம்ஸ்டெக் (BIMSTEC) சுகாதார அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக […]

இன்றும் கன மழைக்கு வாய்ப்பு

ல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் இன்று (12) பிற்பகல் வேளையில் 100 மி.மீ க்கும் அதிக அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதேநேரம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என திணைக்களம் வௌியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குக்குப் பின்னர் மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ […]