புனர்வாழ்வளிக்கப்பட்ட நபர்கள் மீண்டும் போதைப்பொருளை நாடும் தொகையில் வீழ்ச்சி!

புனர்வாழ்வளிக்கப்பட்ட நபர்கள் மீண்டும் போதைப்பொருள் பாவனைக்குத் திரும்புவதில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகப் புனர்வாழ்வுப் பணியகம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 13 சதவீதத்துக்கும் அதிகமான முன்னேற்றத்தைக் காட்டுவதாக அதன் பணிப்பாளர் நாயகம் பிரிகேடியர் எம்.எஸ். ஹமீத் தெரிவித்துள்ளார். “முழுநாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாடு தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். புனர்வாழ்வு பெற்றவர்களில் 14 சதவீதமானோர் ஹோட்டல் மற்றும் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடையவர்கள் ஆவர். ஹோட்டல் […]

கொழும்பு தேசிய வைத்தியசாலை மழை நீரில் மூழ்கியது

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகள் மழைநீரில் மூழ்கியமைக்கு, கொழும்பு மாநகர சபையினால் நொரிஸ் கால்வாய் சரிவர சுத்திகரிக்கப்படாமையும் முறையாக பராமரிக்கப்படாமையுமே காரணம் என தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று (06) பிற்பகல் பெய்த பலத்த மழை காரணமாக கொழும்பு நகரின் பல தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கின. மழையுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து பிரிவு, வெளிநோயாளர் பிரிவு, கதிரியக்க பிரிவு, சத்திர சிகிச்சை கூடங்கள் மற்றும் […]

டிஜிட்டல் மயமாகிறது இறக்குமதி மற்றும் ஏற்றுமதி ஆவணப் பணிகள்

இலங்கையின் இறக்குமதி, ஏற்றுமதி மற்றும் மீள் ஏற்றுமதி செயற்பாடுகளுக்குத் தேவையான ஆவணங்கள் மற்றும் அனுமதிகளை டிஜிட்டல் முறையில் முகாமை செய்வதற்காகப் புதிய ஒழுங்குமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் 2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இலத்திரனியல் பரிவர்த்தனைச் சட்டத்தின் கீழ் இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த நவம்பர் 5 ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ள இந்த ஒழுங்குமுறைகளின் மூலம் ‘தேசிய வர்த்தக ஒற்றை சாளர […]

சிறைச்சாலை நெருக்கடியை குறைக்க நியமிக்கப்பட்ட குழு கள விஜயம்

சிறைச்சாலைகளில் நிலவும் அதிகளவிலான கைதிகளின் நெருக்கடியைக் குறைப்பது தொடர்பாகக் கண்டறிவதற்காக, பொது நிர்வாகம், நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (6) சில சிறைச்சாலைகளுக்கு விசேட கள விஜயம் மேற்கொண்டனர். இதன்படி கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை, புதிய மெகசின் சிறைச்சாலை, பெண்கள் சிறைச்சாலை, வெலிக்கடை சிறைச்சாலை மற்றும் சிறைச்சாலை வைத்தியசாலை ஆகிய வளாகங்கள் இதன்போது பார்வையிடப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. இந்த விஜயத்தின் போது, சிறைச்சாலைகளில் நிலவும் இடநெருக்கடி, சமையலறைச் […]