“தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட நிபந்தனையில் தளர்வு!” – தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு!

சென்னை: அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கான ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்திற்கான நிபந்தனைகளைத் தளர்த்தி தமிழ்நாடு அரசு விரிவான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது வெளிமாநிலத்தில் வசிக்கும் தமிழ்நாட்டுப் பெண்களுக்கும் இனி பெரும் பலனை அளிக்கும். திட்டம் தொடக்கம் மற்றும் முந்தைய நிபந்தனை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” கடந்த செப்டம்பர் 28-ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யால் தொடங்கி வைக்கப்பட்டு, […]

சிராந்திக்கு இதயநோய் பாதிப்பு-கண்ணில் பாதிப்பு – தனித்து செயற்படமாட்டார் – நீதிமன்றில் அவரது சட்டத்தரணி

முன்னாள் முதல் பெண்மணி சிராந்தி ராஜபக்ச சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகிய சட்டத்தரணி அனில் சில்வா சிராந்தி ராஜபக்ச எதிர்கொண்டுள்ள உடல்நல பாதிப்புகள் குறித்து பல தகவல்களை வெளியிட்டார் அவர் நீதிமன்றத்தில் குறிப்பிடுகையில் தெரிவித்ததாவது சிராந்தி ராஜபக்ச 2019ம் ஆண்டு முதல் இதயநோய்க்காக சிகிச்சை பெற்றுவருகின்றார். 2021ம் ஆண்டு சிராந்தியின் மூளையில்  பாதிப்பு  ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து மருத்துவர்கள் மருத்துவபரிசோதனைகளை மேற்கொண்டனர்.மேலும் அவர் அடிக்கடி திடீர் தலைச்சுற்று,மயக்கம் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றார். சிராந்தி ராஜபக்சவிற்கு முதுகெலும்பு, வெரிகோஸ் பாதிப்புகள் இருப்பதால் […]

அனோஜன் தலையில் ஆறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்- ராஜ்குமார் ரஜீவ்காந்

இலங்கைக்கான் ஐக்கிய நாடுகள் வதிவிடப்பிரதிநிதியை மார்க் அன்ட்ரே  பிரான்சினை தமிழ்தேசிய மக்கள் முன்னணியின்  நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சிவில் சமூக செயற்பாட்டாளர் ரஜீவ்காந் ராஜ்குமார்  சவுதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராஜாவின் சகோதரர் ஆகியோர் சந்தித்து அனோஜனின் நிலைமை குறித்து தெளிவுபடுத்தியுள்ளனர். இது தொடர்பில் ரஜீவ்காந் தெரிவித்துள்ளதாவது அனோஜனுக்கு சவுதி அரேபியாவிலிருந்து தொலைபேசி மூலம் தொடர்புகொள்வதற்கான வசதியை வழங்கியுள்ளனர். தனது தலையில் ஆறு காயங்கள் இருப்பதாக அவரே அழைத்து எங்களிடம் தெரிவித்தார். அனோஜன் கூரிய […]

அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை

அனோஜனிற்கு விதிக்கப்பட்ட ஐந்து வருட சிறைத்தண்டனை மேல்முறையீட்டில் இரண்டே மாதங்களுக்குள் மரணதண்டனையாக மாற்றப்பட்டுள்ளமை  சவுதிஅரேபியாவின் நீதித்துறையின் தன்னிச்சையான செயற்பாடு குறித்து ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. சர்வதேச மன்னிப்புச்சபையின் மத்திய கிழக்கு பிராந்திய இயக்குநர் ஹெபாமொராயெப் அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளார் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட கருத்திற்காகஇலங்கையை சேர்ந்த அனோஜன் சிவராஜாவிற்கு விதிக்கப்பட்டுள்ள மரணதண்டனையை  சவுதி அரேபியா உடனடியாக இரத்து செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது அனோஜனிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் […]

அனோஜனுக்கான மரண தண்டனையை இரத்து செய்ய வலியுறுத்து ம் சர்வதேச மன்னிப்புச் சபை!

சவுதி அரேபியாவினால் இலங்கையைச் சேர்ந்த இளைஞரான சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை உடனடியாக இரத்து செய்ய வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) அமைப்பு தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்த அமைப்பு, குறித்த குற்றச்சாட்டானது முற்றாக கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையில் மட்டுமே அமைந்துள்ளது என்பதால், அவரை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்ய வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளது. முகமது நபியை இழிவுபடுத்தும் வகையில் அமைந்த கருத்து ஒன்றை தனது சமூக ஊடகக் கணக்கில் பதிவிட்டார் […]

ஞானசார தேரரின் ஆடை விவகாரம்; – மகாநாயக்கர்கள் போர்க்கொடி

 பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரை சாதாரண உடையில் நீதிமன்றத்திற்கு அழைத்துவந்தமை குறித்து இலங்கையின் முக்கிய பௌத்தபீடங்களின் மகாநாயக்கர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில்  இது குறித்த தங்கள் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ள மகாநாயக்க தேரர்கள் அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது அரசியலமைப்பு மற்றும் நீதித்துறை நடவடிக்கைகளை முழுமையாக மதிக்கும் அதேவேளையில் ஒரு பௌத்த துறவியின் காவி உடையை அகற்றுவதையோ அல்லது அவரது துறவற நிலையை முடிவிற்கு கொண்டுவருவதையோ வெறும் சிறைச்சாலை விதிகளின் அடிப்படையிலான […]

NPP பாராளுமன்ற உறுப்பினர் கைது

தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆரச்சி அத்துருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பனாகொடை பகுதியில் நேற்று (07) இரவு இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிப்பு: கோட்டை முன்னாள் நீதவான் மீண்டும் சேவையில்

கொழும்பு கோட்டை நீதவானாக கடமையாற்றிய போது இடைநீக்கம் செய்யப்பட்ட கோசல சேனாதீரவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மீண்டும் சேவையில் அமர்த்துவதற்கு நீதிச்சேவைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. உத்தியோகப்பூர்வ இல்லத்திற்கு சட்டவிரோதமாக மின்சாரம் மற்றும் நீர் இணைப்புகளைப் பெற்றுக் கொண்டதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10 ஆம் திகதி முதல் சேனாதீரவின் சேவை இடைநிறுத்தப்பட்டது. 27 மாதங்களாக 20 க்கும் மேற்பட்ட சாட்சியாளர்களிடம் மேற்கொள்ளப்பட்ட தீர்க்கமான விசாரணைகளின் பின்னர், பிரதம […]

போலி நிறுவனங்கள் மூலம் $2.5 கோடி வெளிநாட்டுக்கு? மற்றொரு சந்தேகநபர் கைது

பொருட்களை இறக்குமதி செய்யாமல் போலி நிறுவனங்கள் மூலம் 2.5 கோடி அமெரிக்க டொலர்களை (சுமார் ரூ. 750 கோடி / 7.5 பில்லியன்) வெளிநாட்டு வங்கிக் கணக்குகளுக்குப் பரிமாற்றம் செய்த மற்றொரு சந்தேகநபரை நிதி மோசடி விசாரணை பிரிவு (FCID) கைது செய்துள்ளது. வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 25 வயதான சந்தேகநபர், வர்த்தக வங்கிகள் ஊடாக ‘TT’ (Telegraphic Transfers) முறைமையைப் பயன்படுத்தி இப் பெருந்தொகையை நாட்டிலிருந்து வெளியேற்றியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. உள்நாட்டில் 6 நிறுவனங்களின் பெயர்களில் வெளிநாட்டு […]

தேசிய சாரணர் ஜம்போரி 2027 ஜனவரி 17 முதல் 23 வரை

இலங்கை சாரணர் இயக்கத்தின் 115 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 11 ஆவது தேசிய சாரணர் ஜம்போரி, 2027 ஆம் ஆண்டு ஜனவரி 17 முதல் 23 வரை தியகம மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டு வளாகத்தை மையமாகக் கொண்டு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சாரணர்கள் 12,000 பேருக்கு மேல் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கை தேசிய சாரணர் ஜம்போரிக்கு அனுசரணை வழங்கும் அரச […]