“கடலூரில் சிப்காட் மற்றும் NLC விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் திட்டம்” – அன்புமணி கண்டனம்

சென்னை: கடலூர் மாவட்டத்தில் புதிய சிப்காட் வளாகம் அமைப்பதற்காகவும், என்.எல்.சி (NLC) சுரங்க விரிவாக்கத்திற்காகவும்கூடுதல் நிலங்களைக் கையகப்படுத்தத் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புக்குப் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின் முக்கிய விவரங்கள்: கூடுதல் நில எடுப்பு: கடலூர் மாவட்டம் தியாகவல்லி, குடிக்காடு பகுதிகளில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 1,097 ஏக்கருடன், கூடுதலாக 164.20 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்தத் தமிழக அரசு கடந்த செப்டம்பர் 1-ஆம் […]

“தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலில் கூட்டணிக் கட்சித் தலைவர்களா?” – சட்ட விதிகளின்படி அதிமுக, பாஜக கடும் எதிர்ப்பு!

சென்னை: தவெக சார்பில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 40 பேர் கொண்ட நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் காங்கிரஸ், விசிக, மதிமுக மற்றும் ஐயுஎம்எல் ஆகிய கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் (மாணிக்கம் தாகூர், திருமாவளவன், வைகோ, காதர் மொகிதீன் உள்ளிட்டோர்) இடம்பெற்றிருப்பதற்கு அதிமுக மற்றும் பாஜக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு முற்றிலும் புறம்பானது என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அதிமுகவின் சட்டரீதியான எச்சரிக்கை (எம்.பி. இன்பதுரை): உறுப்பினர் விதி மீறல்: தேர்தல் ஆணைய […]

“அதிமுகவில் இருந்து இன்னும் 20 பேர் தயாராக உள்ளனர்!” – அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை

தாராபுரம்: தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரக் களத்தில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், அதிமுகவிலிருந்து மேலும் பல எம்.எல்.ஏ-க்கள் மற்றும் நிர்வாகிகள் தவெக-வில் இணையத் தயாராக இருப்பதாகத் தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். அமைச்சர் செங்கோட்டையன் உரையின் முக்கிய அம்சங்கள்: ஆட்சி கவிழும் என்ற இபிஎஸ்-க்கு பதிலடி: ஓராண்டு காலத்திலேயே தவெக ஆட்சி மாறும் என எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். ஆனால், அதிமுகவின் 47 எம்.எல்.ஏ-க்களில் 25 பேர் எங்களுக்கே (தவெக அரசுக்கு) வாக்களித்தனர்; […]

தவெக அரசுக்கு எதிராக 8 கேள்விகளை அடுக்கிய பிரேமலதா விஜயகாந்த்

சென்னை: தமிழகத்தில் நிலவும் பல்வேறு மக்கள் பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டி ஆளும் தவெக அரசுக்கும், முதலமைச்சர் விஜய்க்கும் எதிராகத் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சரமாரியான 8 கேள்விகளை எழுப்பியுள்ளார். அரசு வெறும் மௌனம் காக்காமல் உடனடியாகச் செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். பிரேமலதா எழுப்பியுள்ள முக்கியக் கேள்விகள்: சட்டம் – ஒழுங்கு சீர்குலைவு: சிவகங்கை இரட்டைக் கொலை, மதுரை மற்றும் கிருஷ்ணகிரி என கடந்த 24 மணி நேரத்தில் 8 படுகொலைகள் நடந்துள்ளன. கொலையாளிகளை விட்டுவிட்டுப் […]

டாஸ்மாக் ஊழியர்களுக்கு நவம்பர் 15 முதல் சீருடை கட்டாயம்! – தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் (TASMAC) சில்லறை விற்பனைக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கான புதிய சீருடைத் திட்டம் வரும் நவம்பர் 15-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளதாகத் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புதிய சீருடைத் திட்டத்தின் முக்கிய விவரங்கள்: சீருடைப் படி (Uniform Allowance): மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டபடி, மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு ஆண்டுதோறும் 3 செட் சீருடைகள் வழங்குவதற்காக (துணி மற்றும் தையல் செலவுகள் உட்பட) […]

“என் மிசா தியாகத்திற்கு மதிப்பெண் போட எவனுக்கும் தகுதியில்லை!” – முதலமைச்சர் விஜய்யைக் கடுமையாகச் சாடிய மு.க.ஸ்டாலின்

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் உரையாற்றிய திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், ஆளும் தவெக அரசையும், முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகளையும் மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். குறிப்பாக, தனது மிசா கைது விவகாரம், சட்டம் ஒழுங்கு, லண்டன் பயணம் மற்றும் வரவிருக்கும் இடைத்தேர்தல் குறித்து அவர் முன்வைத்த காட்டமான விமர்சனங்கள் அரசியல் களத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன. மு.க.ஸ்டாலின் உரையின் முக்கிய அம்சங்கள்: மிசா தியாகமும் பதிலடியும்: “என் மிசா கைதை […]

மதுராந்தகத்தில் 2 நாள்கள் தேர்தல் பிரச்சாரம்: முதலமைச்சர் விஜய் சுற்றுப்பயணத் தேதி வெளியீடு!

சென்னை: மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதலமைச்சர் விஜய் 2 நாள்கள் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபடவுள்ளார். முதலமைச்சர் விஜய்யின் மதுராந்தகப் பிரச்சாரத் திட்டம் செப்டம்பர் 25 (பொதுக்கூட்டம்): அச்சரப்பாக்கத்தில் நடைபெறும் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் உரையாற்றுகிறார். அக்டோபர் 02 (ரோடு ஷோ): காந்தி ஜெயந்தி அன்று மதுராந்தகம் நகரம் […]

ஆர்ஜென்டீனாவின் தேசிய அணிக்கு அழைக்கப்பட்ட மெஸ்ஸி

ர்ஜென்டீனாவின் தலைநகரான புய்னோஸ் அரிஸில் பெனினுக்கெதிராக ஒக்டோபர் 6ஆம் திகதி நடைபெறவுள்ள சிநேகபூர்வ போட்டியில் பங்கேற்பதற்காக ஆர்ஜென்டீனாவின் தேசிய அணிக்கு லியனல் மெஸ்ஸி அழைக்கப்பட்டுள்ளார். இப்போட்டியானது மெஸ்ஸிக்கு அர்ப்பணிக்கப்படுமென ஆர்ஜென்டீனா கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் கிளாடியோ தாபியா தெரிவித்துள்ளார். தவிர மெஸ்ஸியுடன் கட்டாரில் 2022 உலகக் கிண்ணத்தை வென்ற வீரர்களையும் அவர்களின் குடும்ப்பத்தினரையில் இப்போட்டிக்கு அழைக்க தீர்மானித்துள்ளதாகவும் தாபியா கூறியுள்ளார்.

Business Global International award அமைப்பின் ‘Excellence Award’ நிகழ்வு!

Business Global International award அமைப்பானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி ‘Excellence Award’ என்ற நிகழ்வை யாழ்ப்பாணம் திவ்ய மஹால் மண்டபத்தில் மாலை 4 மணிக்கு நடாத்தவிருக்கின்றது. எமது சமூகத்தில் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருகின்ற பலர் இருக்கின்றார்கள். தொழில் முனைவோர், சமூக சேவையாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுடைய திறமை, உழைப்பு மற்றும் சமூகப் பங்களிப்புகளை பாராட்டி, அவர்களுக்கு சர்வதேச தரத்திலான ஒரு கௌரவத்தை வழங்க வேண்டும் […]

ஏற்றுமதி 21.03 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது- ரிசர்வ் வங்கி

கடந்த 2025–26 நிதியாண்டில் நம்நாட்டின் மென்பொருள் சேவைகள் ஏற்றுமதி 8.2 சதவீதம் உயர்ந்து 21.03 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் சாப்ட்வேர் ஏற்றுமதியில், முக்கிய வாடிக்கையாளராக அமெரிக்கா தொடர்ந்து முதன்மை சந்தையாக திகழ்கிறது. ஒட்டுமொத்த ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்களிப்பு 54.1 சதவீதமாக, அதாவது 11.37 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. ஐரோப்பிய நாடுகள் 31.8 சதவீத பங்களிப்புடன் இரண்டாம் இடத்தில் உள்ளன. பிரிட்டன் மட்டும் 15.4 சதவீத பங்கை பெற்றுள்ளது. […]