அனோஜனைக் காப்பாற்ற களமிறங்கிய ஜனாதிபதி அநுர தலைமையிலான அரசாங்கம்!

நபிகள் நாயகத்தை இ’ழிவுபடுத்தும் வகையில் முகநூலில் (Facebook) கருத்து வெளியிட்டதாகக் கூறப்படும் கு’ற்றச்சாட்டின் கீழ், சவூதி அரேபிய மேல்முறையீட்டு நீதிமன்றத்தினால் ம’ரண தண்’டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் இளைஞனான சிவராசா அனோஜனைப் பாதுகாப்பாக மீட்டுத் தருமாறு அவரது தாயார் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் இலங்கை அரசாங்கத்திடம் விடுத்த கண்ணீர்க் கோரிக்கையைத் தொடர்ந்து, அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் நளிந்த […]

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கேக் பூசிய நண்பனுக்கு வந்த கதி!

பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது முகத்தில் கேக் பூசியதால் ஏற்பட்ட தகராறில், நண்பனை கூரிய ஆயுதத்தால் தாக்கிய இளைஞனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஜம்மு காஷ்மீர், ஜானுபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப்நகர் பகுதியில் நீரஜ் என்ற இளைஞர் தனது பிறந்தநாளைக் கொண்டாடிக்கொண்டிருந்தார். இந்த நிகழ்வில் அவரது சகோதரர் மற்றும் நண்பர்களான பலர் கலந்துகொண்டனர். கொண்டாட்டத்தின் போது நீரஜ் கேக் வெட்டியதும், அவரது நண்பரொருவர் நீரஜின் முகத்தில் கேக்கை பூசியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மற்ற […]

கிறீன்லாந்தின் மீது அமெரிக்காவின் நிரந்தரக் கட்டுப்பாடு!

டென்மார்க் மற்றும் கிரீன்லாந்துடன் அமெரிக்கா ஒரு ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், அது “கிறீன்லாந்தின் பாதுகாப்பு மற்றும் அனைத்துத் தேவைகளின் மீது அமெரிக்காவின் நிரந்தரக் கட்டுப்பாட்டை” வழங்குவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) சமூக வலைதளப் பதிவில் ட்ரம்ப் இதனை கூறியுள்ளார். ஒப்பந்தப்படி, கிரீன்லாந்தில் தேவையானதைச் செய்யும் முழுமையான திறன் அமெரிக்காவிற்கு எப்போதும் இருப்பதை உறுதி செய்ய டென்மார்க் மற்றும் கிரீன்லாந்தின் பிரதிநிதிகளுடன் தாங்கள் பணியாற்றியுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த உடன்பாட்டின்படி, […]

ஹூதி அமைப்பினருக்கு ஆதரவாக வீதிகளில் திரண்ட மக்கள் !

மேற்கு யேமனில் சண்டை தீவிரமடைந்து வரும் நிலையில், ஹூதி அமைப்பினருக்கு ஆதரவாகவும், சவுதி அரேபியாவுக்கு எதிராகவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் யேமன் தலைநகர் சணாவின் (Sanaa) வீதிகளில் திரண்டு பேரணி நடத்தினர். இந்த டையலை யேமனின் தென்மேற்கு பகுதியிலுள்ள தைஸ் மாகாணத்தின் அல்-வாசியா (Al-Waziiyah) மாவட்டத்தில் நடந்த கடுமையான மோதல்கள் மற்றும் வான்வழித் தாக்குதல்களில் 30 ஹூதி போராளிகள் கொல்லப்பட்டதாக யேமன் அரசுப்படைகள் தெரிவித்துள்ளன. இந்தச் சண்டையில் 60க்கும் மேற்பட்ட ஹூதி அமைப்பினர் காயமடைந்துள்ளனர். இதற்கிடையில் யேமன் அரசுப்படையினர் […]

வாகனங்களின் விலைகளில் திடீர் வீழ்ச்சி

இலங்கையில் வாகனங்களின் விலைகள் குறைக்கப்பட்டதற்கான பின்னணி குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுவரை வாடிக்கையாளர்களிடமிருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த, பயன்படுத்தப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்யும் போது சுங்க மதிப்பீட்டிற்காக வழங்கப்படும் 15 சதவீத தேய்மானக் கழிவு தொடர்பான விடயம் வெளிச்சத்திற்கு வந்தமையாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விலை சரிவு புதிய வாகனங்களுக்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது. 300,000 ரூபாய் முதல் 1 மில்லியன் ரூபாய் வரை அமைந்துள்ள இந்தத் திடீர் விலை சரிவு குறித்த விவரங்களை வாகன இறக்குமதியாளர்கள் […]

அனோஜனுக்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆதரவு !

சிவராசாவின் (Anojan Sivarasa) வீட்டிற்கு சென்ற முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவரது குடும்பத்தினரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது, வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து நடவடிக்கை எடுப்பதாக ரிஷாத் பதியுதீன் உறுதியளித்துள்ளார். இந்த தண்டனை பற்றிய தகவல்கள் இலங்கையிலுள்ள முஸ்லிம் சமூகத்தினரிடமும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் சவூதி அரேபிய மன்னரிடம் அனோஜனின் நிலை குறித்து அவசர கோரிக்கை முன்வைக்கத் […]

ஈஸ்டர் தாக்குதல் : றிஷாட் பதியுதீன் விளக்கம்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தற்காலத்தில் பரவி வரும் செய்திகள் தொடர்பில் விளக்கமளிக்கும் விஷேட ஊடக சந்திப்பொன்று நடைபெறவுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொள்ளும் இவ்விஷேட ஊடக சந்திப்பு நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இன்று சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவட்ட செயலாளர் எம். எம். ஏ. காதர் அறிவித்துள்ளார்.

கல்லுண்டாய் குப்பை மேட்டில் தீ: மக்கள் போராட்டம்

யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட கல்லுண்டாய் குப்பை மேடு நேற்று மாலை 6 மணி முதல் தீப்பற்றி எரிந்து வருவதால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. தீ பரவி நீண்ட நேரமாகியும் அதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாமல் தீயணைப்புப் படையினர் தொடர்ந்து சிரமப்பட்டு வருகின்றனர். குப்பை மேட்டிலிருந்து எழும் அடர்ந்த புகையின் காரணமாக, அந்த வீதியால் பயணிக்கும் வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். . இதன் காரணமாக, மாநகர சபைக்கு […]

புலம்பெயர்வு தகவல் மையத் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடல்

திருமலை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் புலம்பெயர்வு தகவல் மையம் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல், திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன் அவர்களின் தலைமையில் வெள்ளிக்கிழமை மாவட்ட செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. 2025–2026 காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இத்திட்டம், சர்வதேச புலம்பெயர்வு கொள்கை அபிவிருத்தி மையமான ICMPD, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு (MOFAFET) மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) ஆகியவற்றின் […]