முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை! – ரூ.100 கோடி மோசடி புகாரில் நடவடிக்கை
திருச்சி: முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், தற்போதைய திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்குச் சொந்தமான இடங்களில் மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீசார் இன்று (செப். 16) காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சோதனை குறித்த முக்கியத் தகவல்கள்: ரூ. 100 கோடி மோசடிப் புகார்: கடந்த திமுக ஆட்சியின்போது, தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி, நிரந்தர அங்கீகாரம் மற்றும் சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் ரூ. […]
தமிழ்நாட்டில் மின்வெட்டு ஏன்? காரணங்களை அடுக்கிய அமைச்சர் நிர்மல் குமார்!
சென்னை: தமிழகத்தில் நிலவும் மின்வெட்டுப் பிரச்சனை குறித்து சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரியத் தலைமை அலுவலகத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்திய பின்னர், எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பல்வேறு கேள்விகளுக்கு விரிவான விளக்கமளித்தார். மின்வெட்டுக்கான காரணங்களும் தீர்வு நடவடிக்கைகளும் காற்றாலை மின் உற்பத்தி சரிவு: கடந்த சில நாட்களாகக் காற்றாலை மின் உற்பத்தி வெகுவாகக் குறைந்ததே தற்காலிகப் பற்றாக்குறைக்குக் காரணம்; இது தமிழகத்தில் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும் […]
மதுராந்தகம் இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகிராமன் வேட்புமனு தாக்கல்!

மதுராந்தகம்: மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் களமிறங்கும் வேட்பாளர் ஜானகிராமன், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்புமனுவை அதிகாரப்பூர்வமாகத் தாக்கல் செய்தார். வேட்புமனுத் தாக்கலுக்குப் பின் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்த முக்கியக் கருத்துகள்: மக்கள் வரிப்பணம் வீண் & மரகதம் குமரவேல் மீது சாடல்: கடந்த பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற கையோடு எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து இடைத்தேர்தலைத் திணித்ததன் மூலம் மக்கள் வரிப்பணம்தான் வீணடிக்கப்பட்டுள்ளது. […]
24ம் திகதி கொழும்பில் விசாரணை-சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றார் சிராந்தி-

முன்னாள் முதற்பெண்மணி சிராந்தி ராஜபக்ச மருத்துவசிகிச்சைக்காக புதன்கிழமை காலை சிங்கப்பூருக்கு பயணமானார். செவ்வாய்கிழமை உடல்நல பாதிப்பு காரணமாக கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் புதன்கிழமை காலை அவர் மருத்துவ சிகிச்சைக்காக உறவினர் ஒருவருடன் சிங்கப்பூருக்கு பயணமானார். இதேவேளை தேசிய சேமிப்பு வங்கி பணமோசடி தொடர்பில் விசாரணைகளை எதிர்கொண்டுள்ள சிராந்திராஜபக்ச 24ம் திகதி நிதிகுற்றங்கள் தொடர்பான பொலிஸ் பிரிவின் முன்னிலையில் ஆஜராகவேண்டும் என விமானம் புறப்படுவதற்கு முன்னர் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். கொழும்பு லேடிரிட்ஜ்வே மருத்துவமனைக்கு சிடிஸ்கானர் இயந்திரத்தை […]
சவுதிஅரேபியாவின் மேற்கு பகுதியில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை

சவூதி அரேபியாவின் மேற்குப் பகுதியில் உள்ள இலங்கைப் பிரஜைகள், அப்பகுதியில் நிலவிவரும் பாதுகாப்புச் சூழலைக் கருத்திற் கொண்டு விழிப்புடன் இருக்குமாறும், உத்தியோகபூர்வ அவசர எச்சரிக்கைகளைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். ஜேத்தாவிலுள்ள இலங்கையின் துணைத்தூதரக அலுவலகம் விடுத்துள்ள அவசர அறிவிப்பில், இலங்கையர்கள் தமது கைப்பேசிகளில் தேசிய எச்சரிக்கைச் செய்தியைப் பெற்றால் (National Warning Alert), உடனடியாக ஜன்னல்களிலிருந்து விலகிப் பாதுகாப்பான இடத்தை அடையுமாறு அறிவுறுத்தியுள்ளது. இந்தத் துணைத்தூதரக அலுவலகமே சவூதி அரேபியாவின் மேற்குப் பகுதிக்குப் பொறுப்பான இலங்கையின் உத்தியோகபூர்வ தூதரக […]
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்-முன்கூட்டியே தகவல் தெரிந்திருந்தும் இராணுவபுலனாய்வு பிரிவு மறைத்தது – மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான தகவல்கள் இலங்கை இராணுவம் மற்றும் அரச உளவுத்துறையின் சில பிரிவுகளுக்கு முன்னரே தெரிந்திருந்தபோதிலும், அவை ஏனைய பாதுகாப்பு முகவர் நிறுவனங்களுடன் பகிரப்படவில்லை என்பதை விசாரணைகள் வெளிப்படுத்தியுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. உளவுத்துறை சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே மற்றும் தாக்குதல்களுடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்கள் மீதான வழக்கு கோட்டை நீதவான் பசான் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இக்கருத்துக்கள் […]
மண்சரிவு எச்சரிக்கை
கொழும்பு, களுத்துறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு விழிப்புணர்வு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள், களுத்துறை மாவட்டத்தின் தொடங்கொட, புளத்சிங்ஹல, பேருவளை, இங்கிரிய, மத்துகம, பாலிந்தநுவர மற்றும் வலல்லாவிட்ட ஆகிய பகுதிகள், அத்துடன் கேகாலை மாவட்டத்தின் வரகாப்பொல மற்றும் ருவன்வெல்ல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கு இந்த அறிவித்தல் பொருந்தும் என […]
செயற்கை நுண்ணறிவின் AI ஆபத்தானது: எலான் மஸ்க் கடும் எச்சரிக்கை

செயற்கை நுண்ணறிவின் (AI) விரைவான வளர்ச்சி குறித்து எலான் மஸ்க் இதுவரை விடுத்துள்ள மிக வலுவான எச்சரிகைகளில் ஒன்றினை வெளியிட்டுள்ளார். பெருகிய முறையில் சக்திவாய்ந்ததாக மாறிவரும் செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் பாரிய ஆபத்துக்களை உருவாக்குவதாகவும், தொழில்துறை அளவிலான பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு அமைப்புகளைச் சுற்றியுள்ள கவலைகள் குறித்துப் பேசிய ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் நிறுவனர், செயற்கை நுண்ணறிவு மிகவும் ஆபத்தானதாக மாறக்கூடும் என்பது தெளிவாகிவிட்டதாகத் […]
சவூதி எரிபொருள் குழாய் முடக்கம்: மசகு எண்ணெய் விலை பீப்பாய் 108 டொலரைத் தாண்டியது

சவூதி அரேபியாவின் முக்கிய கிழக்கத்திய – மேற்கத்திய மசகு எண்ணெய் விநியோகக் குழாய்த் தொகுதி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை அடுத்து, உலகச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இரு சதவீதத்திற்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது. இதன்மூலம், பிரெண்ட் ரகக் மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை. 108.18 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஈராக்கிய ஆயுதமேந்திய குழுக்களால் முன்னெடுக்கப்பட்ட தொடர் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாகவே இந்த விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது. ஹோர்முஸ் […]
க.பொ.த. சாதாரண தரப் பாடங்களின் எண்ணிக்கை 7 ஆகக் குறைக்க திட்டம்?
எதிர்வரும் 2031ம் ஆண்டு தொடக்கம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கையை 7 ஆகக் குறைக்க கல்வி மறுசீரமைப்பு தொடர்பான உபகுழு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இது தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்தில் வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் உள்ளடக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தரம் 12 மற்றும் 13 மாணவர்களுக்காக சமூக நல்லிணக்கம், சட்டம் மற்றும் ஒழுக்கவியல் தொடர்பான […]