அரசாங்கத்தின் கடன் 190 பில்லியன் ரூபாயால் அதிகரித்துள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிதி பிரதி அமைச்சர் முற்றாக நிராகரிப்பு

அரசாங்கத்தின் கடன் தொகை 190 பில்லியன் ரூபாய்க்கும் மேல் அதிகரித்துள்ளதாக வெளியாகும் செய்திகளை நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ முற்றாக நிராகரித்துள்ளார். உத்தியோகபூர்வ தரவுகளை ஆராயாமல் நாட்டின் கடன் நிலை குறித்து தவறான தகவல்கள் பரப்புவது துரதிர்ஷ்டவசமானது என பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியின் (CBSL) தரவுகளை மேற்கோள் காட்டி அரசாங்கத்தின் கடன் 190 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாக சமீபத்தில் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. எனினும், […]
உள்நாட்டுப் பொருட்களுக்கு அதிகரிக்கும் தேவை; சில்லறை விற்பனை நிலையங்களின் தாமதத்தால் நேரடியாக நுகர்வோரை சென்றடையும் கனடிய நிறுவனங்கள்

அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், கனடிய மக்கள் உள்நாட்டு உணவு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இருப்பினும், கனடாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்குத் தங்களின் விற்பனை நிலையங்களின் அலமாரிகளில் (Shelf space) போதுமான இடம் ஒதுக்குவதில் சில பெரிய சில்லறை விற்பனையாளர்கள் (Retailers) தாமதம் காட்டி வருவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, நுகர்வோரின் உடனடித் தேவையைப் பூர்த்தி செய்யப் பல நிறுவனங்கள் இணையவழி மூலம் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாகவே […]
கனடிய தொழிற்துறைகளை அமெரிக்கா அழிக்க அல்லது தனது துணை நிறுவனங்களாக மாற்ற முயல்கிறது: பிரதமர் மார்க் கார்னி குற்றச்சாட்டு

அமெரிக்காவுடன் நடைபெற்ற வர்த்தக பேச்சுவார்த்தைகளின் போது, கனடாவின் வாகன உற்பத்தித் துறை உள்ளிட்ட முக்கிய தொழிற்துறைகள் அமெரிக்க நிறுவனங்களின் துணை நிறுவனங்களாக மாற வேண்டும் அல்லது படிப்படியாக கனடாவில் மூடப்பட்டு “முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டும்” என்ற வகையிலான சலுகைகளை அமெரிக்க பேச்சாளர்கள் வலியுறுத்தியதாக கனடிய பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) குற்றம் சாட்டியுள்ளார். ஒட்டாவாவில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த பிரதமர் கார்னி, “இத்தகைய கடுமையான மற்றும் நியாயமற்ற நிபந்தனைகளை கனடா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். […]
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் 15 கூட்டமைப்புகள் இணைந்து நாடளாவிய ரீதியில் கவன ஈர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்தனர். அரசு மற்றும் மாகாண அரச சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க, ஒருங்கிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது. நாடு முழுவதும் உள்ள பிரதேச செயலகங்கள் மற்றும் திணைக்களங்களுக்கு முன்பாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தங்களது உரிமைகளுக்காக இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர். […]
250 இளநீர் கிராமங்கள் உருவாக்க திட்டம்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் “Ceylon King Coconut Village” தேசிய திட்டம் இன்று(02) குருநாகல் மாவட்டத்தின் தெங்கு பயிர்ச்செய்கை சபைக்குச் சொந்தமான மஹாயாய தோட்ட வளாகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டின் இளநீர் பயிர்ச்செய்கையை விரிவுபடுத்தி உற்பத்தியையும் உற்பத்தித்திறனையும் அதிகரிப்பதும், இளநீர் மற்றும் அது சார்ந்த உற்பத்திகளுக்கான சர்வதேச சந்தையை விரிவுபடுத்துவதும் இதன் முதன்மை நோக்கங்களாகும். இத்திட்டத்தின் கீழ் இந்த ஆண்டில் 75 கிராமங்களும், 2027 ஆம் ஆண்டில் 80 கிராமங்களும், 2028 ஆம் ஆண்டில் […]
நான் விரைவில் கைது செய்யப்படலாம் – நாமல் ராஜபக்ஷ!

நாடு தழுவிய ரீதியில் அரசியல் கூட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளோம். எதிர்வரும் 12 ஆம் திகதி அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ள அரசியல் கூட்டத்தை தடுக்க அதற்கு முன்னர் என்னை கைது செய்ய அரசாங்கம் முயற்சிக்கிலாம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (01) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தின் […]
நீர்த்தொட்டியில் விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில் இரண்டு வயது குழந்தையொன்று நீர்த்தொட்டியில் வீழ்ந்த நிலையில் பழுகாமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது. கற்சேனை, முல்லை வீதியைச் சேர்ந்த 2 வயதும் 8 மாதங்களுமான நந்தகோபன் கிசோத் என்ற குழந்தையே வாளி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. செவ்வாய்க்கிழமை (01) ஆம் திகதி காலை 10.30 மணியளவில், வீட்டின் வாசலில் நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த பெரிய வாளியின் அருகே சிறுவன் விளையாடிக் கொண்டிருந்துள்ளான். இதன்போது, எதிர்பாராதவிதமாக சிறுவன் […]
பல்கலைக்கழக பிரச்சனைகள்; விரிவுரையாளர்கள் போராட்டம்

பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை வழங்க அரசு தவறியுள்ளதன் காரணமாக இன்று போராட்டம் ஒன்றை நடத்த தயார் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் (FUTA) தெரிவித்துள்ளது. இன்று (02) மதிய உணவு வேளையின் போது அனைத்து அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் இணைந்து இப்போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அச்சம்மேளனத்தின் செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க தெரிவித்துள்ளார். இதற்கு தீர்வு காணத் தவறினால், வரும் வாரத்தில் இப்போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் […]
22ஆவது திருத்தச் சட்டமூலம்: மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணையை இன்று(02) வரை ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நேற்றைய தினம் மனுதாரர் தரப்பின் வாதங்கள் இரவு 10.30 மணியளவில் நிறைவடைந்ததுடன், மனுதாரர் தரப்பின் மேலதிக வாதங்கள் ஒத்திவைக்கப்பட்டன. இன்று மனுதாரர் தரப்பின் மேலதிக வாதங்கள், இடை மனுதாரர்கள் மற்றும் சட்டமா அதிபரின் கருத்துரைகள் இடம்பெறவுள்ளன.