பல்கலைக்கழக பிரச்சனைகள்; விரிவுரையாளர்கள் போராட்டம்

பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை வழங்க அரசு தவறியுள்ளதன் காரணமாக இன்று போராட்டம் ஒன்றை நடத்த தயார் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் (FUTA) தெரிவித்துள்ளது.

இன்று (02) மதிய உணவு வேளையின் போது அனைத்து அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் இணைந்து இப்போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அச்சம்மேளனத்தின் செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கு தீர்வு காணத் தவறினால், வரும் வாரத்தில் இப்போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் அரசுப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனமாக அரசுப் பல்கலைக்கழக அமைப்பில் உள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியதாகவும், அதற்கான யோசனைத் திட்ட மொன்றை அரசாங்கத்திற்கு வழங்கியதாகவும் சாருதத்த இலங்கசிங்க தெரிவித்தார்.

எனினும், அந்த யோசனைகளையோ அல்லது கலந்துரையாடல்களின் போது எட்டப்பட்ட உடன்பாடுகளையோ அரசாங்கம் நடைமுறைப்படுத்தாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், இப்பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமரிடமும் கலந்துரையாடியதாகக் கூறிய அவர், ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அரசுப் பல்கலைக்கழக அமைப்பில் உள்ள பிரச்சினைகள் குறித்து எழுத்து மூலமும் அறியப்படுத்தியதாகத் தெரிவித்தார்.

இருப்பினும், இதுவரை அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க அரசாங்கம் தவறியுள்ளதாகத் தெரிவித்த அவர், தற்போது பல்கலைக்கழக அமைப்பிலிருந்து பல விரிவுரையாளர்கள் சேவையை விட்டு விலகியுள்ளதாகவும் குறிப்பிட்டார.

2015ஆம் ஆண்டளவில் அரசுப் பல்கலைக்கழக அமைப்பிற்கு ஒரு வருடத்திற்கு 25,000 மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டதாகவும், தற்போது அது ஒரு வருடத்திற்கு 45,000 மாணவர்கள் வரை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும், 2015இல் அரசுப் பல்கலைக்கழக அமைப்பில் 5,800 விரிவுரையாளர்கள் இருந்த போதிலும், தற்போது அவர்களில் 1,000க்கும் மேற்பட்டோர் பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேறியுள்ளதாகக் கூறினார்.

இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க,

“கடந்த சில ஆண்டுகளில் பெருமளவிலான பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேறினர். தற்போது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நியமனங்கள் திறக்கப்பட்டுள்ள போதிலும், அந்தப் பதவிகளுக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் விண்ணப்பிக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அரசுப் பல்கலைக்கழக அமைப்பு சீர்குலைவது என்பது இந்நாட்டின் எதிர்காலம் சீர்குலைவதாகும். எனவே, அரசாங்கத்திடம் நாங்கள் கூறுவது என்னவென்றால், இதைக் காதுகொடுத்துக் கேட்க முடியாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்க நாங்கள் தயார். நாங்கள் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக இது குறித்துக் கலந்துரையாடினோம். தீர்வு இல்லாத நிலையில், நாளை மதிய உணவு வேளையில் அனைத்து அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளோம். ஆனால், அரசாங்கம் இதற்குத் தீர்வு தரும் வரை இந்தப் போராட்டத் தொடரைத் தடையின்றித் தொடர நாங்கள் தீர்மானித்துள்ளோம்.” என்றார்.

dailythanthi_2026-09-12_o3yec9f7_Chennai-mayor

“என் தலைவரைச் சீண்டினால் யாராக இருந்தாலும் விடமாட்டோம்!” – முதலமைச்சர் விஜய்க்கு மேயர் பிரியா ஆவேச எச்சரிக்கை

September 12, 2026

சென்னை: சட்டப்பேரவையில் மிசா சட்டம் மற்றும் மு.க. ஸ்டாலின் குறித்து முதலமைச்சர் விஜய் பேசியதைக் கண்டித்து, சென்னையில் நடைபெற்ற திமுக

1693_12_3_2021_19_53_17_1_MALLAI_SATHYA_MDMK_MADURANTAGAM

இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: திராவிட வெற்றிக் கழகத் தலைவர் மல்லை சத்யா அறிவிப்பு!

September 12, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிப்பதாகத் திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவர் மல்லை சத்யா

13

“ப்யூஸ் போன தவெக அரசு”: மின்வெட்டு மற்றும் ஆவின் பால் விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கடும் சாடல்!

September 12, 2026

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் பால் தட்டுப்பாடு உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல், மக்களைத்

vanniyarasu (1)

“சமூகநீதி குறித்துத் திருமாவளவனுக்குப் பாடம் எடுக்க யாருக்கும் தகுதி இல்லை” – அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

September 12, 2026

சென்னை: சமூகநீதி விவகாரங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்குப் பாடம் எடுக்க எவருக்கும் தகுதி இல்லை எனச்

1200-675-27618532-thumbnail-16x9-kovai-bus

கோவையில் அதிர்ச்சி: அரசுப் பேருந்தின் தானியங்கி கதவில் சிக்கிய மூதாட்டி – ரத்தம் வழிந்ததால் பயணிகள் கொந்தளிப்பு!

September 12, 2026

கோயம்புத்தூர்: கோவையில் பயணிகள் முழுமையாக ஏறுவதற்குள் அரசுப் பேருந்தின் தானியங்கி கதவு திடீரென மூடப்பட்டதில், மூதாட்டி ஒருவரின் முகம் கதவில்

1200-675-26640765-thumbnail-16x9-shanmugam (1)

இடைத்தேர்தலில் சிபிஎம் யாருக்கு ஆதரவு? நாளை திருச்சியில் முடிவு – பெ.சண்முகம்!

September 12, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து நாளை திருச்சியில்

27617897_a

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்: தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரிப் போராட்டம் – 50-க்கும் மேற்பட்டோர் கைது!

September 12, 2026

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கை நீதிமன்ற உத்தரவின்படி தமிழிலும் சமமாக நடத்த வலியுறுத்தி, தடையை மீறிப் போராட்டத்தில்

ctr-2025-12-22-14-41-49

தமிழகத்தில் திடீர் மின்வெட்டுக்கு என்ன காரணம்? – மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

September 12, 2026

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் ஏற்பட்டு வரும் தொடர் மின்தடைக்கான காரணங்களை விளக்கி மின்துறை

1291252

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகமா? – ‘துக்ளக் தர்பார்’ முடிவைக் கைவிடச் சீமான் கடும் கண்டனம்!

September 12, 2026

சென்னை: ரூ. 1,200 கோடியில் சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட

solomon-pappaiah

பட்டிமன்ற பிதாமகனின் சகாப்தம் நிறைவு: முழு அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!

September 12, 2026

மதுரை: மறைந்த மூத்த தமிழறிஞரும், புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் (90) உடல், மதுரை தத்தனேரி மின்

minister-vinoth (1)

ஆய்வுக் கூட்டத்துக்குச் செல்லும் வழியில் மனிதநேயம்: விபத்தில் சிக்கியவர்களை மீட்ட அமைச்சர் வினோத்!

September 12, 2026

கும்பகோணம்: கும்பகோணம் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடியவர்களுக்கு, அவ்வழியாகச் சென்ற

9712_1_9_2026_12_31_11_2__DSC4468

திருச்சி முக்கியக் கோயில்களில் செல்போன் பாதுகாப்புக்கான கட்டணம் ரத்து: பக்தர்களுக்கு இலவச வசதி!

September 12, 2026

திருச்சி: திருச்சியில் உள்ள 5 பிரதான கோயில்களில் பக்தர்களின் செல்போன்களைப் பாதுகாப்பு அறையில் வைப்பதற்காக வசூலிக்கப்பட்டு வந்த கட்டண முறை