கனடா அமெரிக்காவிற்கு பதிலடி: செப்டம்பர் 8 முதல் டொலருக்கு டொலர் வரி!

அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீதக் கடுமையான புதிய இறக்குமதி வரிகளுக்கு பதிலடியாக, அமெரிக்கப் பொருட்களுக்கு, டொலருக்கு டொலர் வரி விதிப்பு தொடர்பான திகதியை கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். சுமார் 20 பில்லியன் டொலர் மதிப்பிலான கனடியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரியை விதித்த சில மணிநேரங்களிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, கனடாவின் பதிலடி வரி, எதிர்வரும் செப்டம்பர் 8 முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் […]