“எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் கனவை முதலமைச்சர் விஜய் நிறைவேற்றிவிட்டார்!” – வாடிப்பட்டியில் அமைச்சர் நிர்மல்குமார் பேச்சு!

மதுரை திமுக எனும் தீய சக்தியை அழிக்க வேண்டும் என்ற எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் நீண்டகாலக் கனவை முதலமைச்சர் விஜய் நிறைவேற்றிவிட்டார் எனத் தமிழக மின்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் பேசியுள்ளார். தமிழக வெற்றிக் கழக அரசு 100 நாட்களைக் கடந்ததை முன்னிட்டு, அரசின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்புரையாற்றிய அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் பேசியதன் முக்கிய அம்சங்கள்: தொகுதி மாற்றமும் வாக்குறுதியும்: “கடந்த 40 ஆண்டுகளாக நான் […]

ஐந்து புதிய நீதிமன்றங்கள் கொழும்புக்கு மட்டும்!

சிறைச்சாலைகளில் நிலவும் நெருக்கடியைக் குறைக்கும் வகையில் இந்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவற்றின் பிரதிபலனை ஆறு மாதங்களின் பின்னர் காணக்கூடியதாக இருக்கும் என நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். வாராந்த பத்திரிகை ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், மத்தியஸ்த சபை சட்டத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளது. இச் சபையின் செயற்பாடுகள் காரணமாக இரண்டு இலட்சம் வழக்குகள் நீதிமன்றம் செல்வது தடுக்கப்பட்டுள்ளது. நாடெங்கிலுமுள்ள நீதிமன்றங்களில் […]

நிலவில் நீர் இருப்பைக் கண்டறிய சீனாவின் புதிய திட்டம்?

நிலவின் தென் துருவத்தில் உள்ள நிழல் படிந்த பள்ளங்களில் உறைந்துள்ள நீர் பனிக்கட்டியைக் கண்டறிந்து ஆய்வு செய்வதற்காக, ‘சாங்கே-7’ என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்த சீனா தயாராகி வருகின்றது. இந்த விண்கலம் விரைவில் விண்ணில் செலுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. சுற்றுப்பாதை விண்கலம், தரையிறங்கி, ஊர்தி மற்றும் குதிக்கும் ரோபோ சாதனம் ஆகிய நான்கு முக்கிய பகுதிகளைக் கொண்டு இந்த ஆய்வுப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. நிலவின் தென் துருவத்தில் உள்ள 21 கிலோமீட்டர் அகலமுடைய ‘ஷேக்கிள்டன்’ பள்ளத்தின் அருகே […]

கல்முனை வீட்டு மொட்டை மாடியில் கஞ்சாத் தோட்டம்!

கல்முனை கடற்கரை பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் 4 ஆம் மாடி மொட்டை மாடியில் சூட்சுமமாக மறைத்து வளர்க்கப்பட்டு வந்த கஞ்சாத் தோட்டத்தை பொலிஸார் கடந்த 19 ஆம் திகதி அதிரடியாகக் கண்டுபிடித்து முற்றுகையிட்டனர். அம்பாறை மாவட்ட புலனாய்வுப் பிரிவின் கல்முனை தலைமையகப் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களான ஜவாத், இஸ்மத் ஆகியோருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாகவே இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கல்முனை நகரப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவரைப் பிடித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டபோதே, குறித்த […]

டுபாயில் கைது செய்யப்பட்ட இலங்கைக் குற்றவாளிகள்

டுபாயில் மறைந்திருந்த குற்றவாளிகளான கொண்ட ரஞ்சி, எல்டோ தர்மே, பஸ் லலித் மற்றும் வனாதே சது ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் இலங்கை பாதுகாப்புப் பிரிவினருக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதற்கமைய, பஸ் லலித் என்பவரை நாளை திங்கட்கிழமை (24) நாட்டிற்கு அழைத்து வருவதற்காக சிறப்பு பொலிஸ் குழுவொன்று டுபாய் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். டுபாயில் பல இலங்கை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடந்த காலங்களில் தொடர்ந்து தகவல்கள் வெளியாகின. அவற்றில், முன்னாள் அமைச்சர் மங்கள […]

எல் நினோ காலநிலை மாற்றம் – 81,000க்கும் அதிகமானோர் பாதிப்பு

எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையினால் இதுவரை 81,865 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிதுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்நிலையம், 7 மாவட்டங்களில் உள்ள 25,628 குடும்பங்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. மேலும், 23 பிரதேச செயலகப் பிரிவுகள் இந்த எல் நினோ தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதுடன், பாதிக்கப்பட்ட 72,153 நபர்களுக்கு தற்போது குடிநீர் விநியோகம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாவட்ட ரீதியில் […]

பனாமா கொடியுடன் சென்ற கப்பல் வங்காள விரிகுடாவில் விபத்து

பனாமா கொடியுடன் கூடிய சரக்குக் கப்பல் ஒன்று வங்காள விரிகுடாவில் உள்ள ஒடிசா கடலோரப் பகுதியிலிருந்து சுமார் 240 கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. “MV Ocean-Winner” எனப்படும் இந்தக் கப்பல் கடந்த ஓகஸ்ட் 20 ஆம் திகதி இரவு 10.30 மணியளவில் ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்திலிருந்து புறப்பட்டுள்ளதுடன், அதில் 1,700 தொன் இரும்புத் தாது கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கப்பல் விபத்துக்குள்ளான போது அதில் 24 பணியாளர்கள் இருந்ததாகவும், அவர்களில் […]

யாழில் 14 வயது சிறுமி கடத்தி துஷ்பிரயோகம்; இளைஞன் கைது

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமியைக் கடத்திச் சென்று, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் 27 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 14 வயதுச் சிறுமியைக் காணவில்லை என அவரது பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞரே சிறுமியைக் கடத்திச் சென்று தனது பாதுகாப்பில் வைத்துள்ளார் […]

கிளிநொச்சியில் உழவு இயந்திர சக்கரத்தில் சிக்கி 3 வயது சிறுவன் பலி

கிளிநொச்சி, முரசுமோட்டை பகுதியில் வீட்டின் முன்றலில் நிறுத்தப்பட்டிருந்த உழவு இயந்திரத்தில் விளையாடிக்கொண்டிருந்த 3 வயது சிறுவன், அதன் பின்சக்கரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த சிறுவனும் அவரது சகோதரனும் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த உழவு இயந்திரத்தில் ஏறி விளையாடிக்கொண்டிருந்துள்ளனர். இதன்போது, உறவினர் ஒருவர் உழவு இயந்திரத்தை இயக்கி முன்றலில் திருப்ப முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக உழவு இயந்திரத்திலிருந்து கீழே விழுந்த சிறுவன், அதன் பின்சக்கரத்தில் சிக்கிப் பலத்த காயமடைந்துள்ளார். காயமடைந்த சிறுவன் உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட […]

இறுதிக்கட்டப் போரின் போது ஈழத்தமிழரை கைவிட்டது நிலை போல மலையக தமிழருக்கும் வரக்கூடாது!

இறுதிக்கட்டப் போரின் போது ஈழத்தமிழர்களைக் கைவிட்டு, அந்தப்போர் சாட்சியம் இல்லாத போராக மாறுவதற்கு ஐக்கிய நாடுகள் சபை காரணமாக அமைந்தது. அதேபோன்று மலையக தமிழர்களையும் ஐ.நா. கைவிட்டுவிடக்கூடாது என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் ஐ.நா.வதிவிட ஒருங்கிணைப்பாளரிடத்தில் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வளாகத்தில் ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளரும் ஐ.நா.செயலாளரின் நேரடி பிரதிநிதியுமான மார்க் அன்ரே பிரஞ்சேவுக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் எம்பி மற்றும் […]