“பட்டாசு ஆலைகளில் திடீர் ஆய்வு!” – சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனா – தங்கம் தென்னரசு இடையே காரசார விவாதம்!

சென்னை சிவகாசியில் இயங்கி வரும் பட்டாசு ஆலைகளில் நடத்தப்படும் திடீர் ஆய்வுகளால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்குத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா விளக்கமளித்துள்ளார். தங்கம் தென்னரசுவின் குற்றச்சாட்டு: சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது பேசிய முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, “சிவகாசியில் இயங்கி வரும் பட்டாசு ஆலைகளில் திடீர் ஆய்வு எனும் பெயரில் நடைபெறும் இடையூறுகளால் அங்குள்ள பட்டாசு தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். விதிமுறைகளை மீறிய தொழிற்சாலைகளில் ஆய்வு செய்வதை […]
“மேகதாது அணையால் தமிழ்நாட்டிற்குத்தான் அதிக பலன்!” – டி.கே.சிவகுமார் பேட்டி; ஜோதிமணி எம்.பி.யின் அதிரடிப் பதில்!
சென்னை கோவளத்தில் நடைபெற்ற 31-வது தென்மாநில முதலமைச்சர்கள் மாநாட்டிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக துணை முதல்வர் (கட்டுரையில் முதல்வர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது) டி.கே.சிவகுமார், மேகதாது அணை விவகாரம் மற்றும் தொகுதி மறுசீரமைப்பு குறித்து முக்கியக் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். டி.கே.சிவகுமார் பேட்டியின் முக்கிய அம்சங்கள்: தொகுதி மறுசீரமைப்பு: நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பின் போது 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பையே அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்றும், தென் மாநிலங்களின் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கக் கூடாது என்றும் […]
சிகரெட் உற்பத்தி 32 சதவீதத்தால் வீழ்ச்சி

2022 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை புகையிலைப் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரித் திருத்தங்களின் தாக்கம் காரணமாக, 2025 ஆம் ஆண்டளவில் நாட்டின் சிகரெட் தயாரிப்பு 32 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக பொருளாதார மேம்பாட்டுப் பிரதி அமைச்சர் நிஷாந்த ஜெயவீர தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர இன்று (20) சபை அமர்வில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். 2022 ஆம் ஆண்டில் 2.8 பில்லியனாக இருந்த சிகரெட் உற்பத்தி, வரி […]
புற்றுநோய் சிகிச்சைகளுக்கு அத்தியாவசியமான பில்கிராஸ்டிம் மருந்து பற்றாக்குறைக்கு ஒரு வாரத்தில் தீர்வு

புற்றுநோய் சிகிச்சைகளுக்கு அத்தியாவசியமான ‘பில்கிராஸ்டிம்’ (Filgrastim) ஊசி மருந்து மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை உள்ளிட்ட அரச வைத்தியசாலைகளில் நிலவும் பற்றாக்குறை தொடர்பில் பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, இன்னும் ஒரு வார காலத்துக்குள் தீர்வு காணப்படும் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதியளித்துள்ளார். நிலையியல் கட்டளை 27(2) இன் கீழ் சுகாதார அமைச்சரிடம் இந்தக் கேள்விகளை பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் முன்வைத்தார். கீமோதெரபி, எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு புற்றுநோய் சிகிச்சைகளுக்கு […]
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதற்கு முன்னர் பொதுமக்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும்

திபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது தொடர்பான எந்தவொரு திருத்தத்தையும் மேற்கொள்வதற்கு முன்னர், பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் போதுமான கலந்தாலோசனைகள் நடத்தப்பட வேண்டும் என இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது. அனுபவமிக்க மற்றும் அறிவுள்ள நீதிபதிகளின் சேவைகளை மேலும் பெற்றுக்கொள்ள முடியும் எனக் கூறி அரசாங்கம் அவர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் முடிவை எடுத்துள்ளதாக இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நீதிபதிகளின் தற்போதைய சட்டபூர்வ ஓய்வு பெறும் […]
சிறைச்சாலைக்கு மேல் வீசப்பட்ட பொதி மீட்பு

மெகசின் சிறைச்சாலை சுவருக்கு மேல் வீசப்பட்ட தடைசெய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வீசப்பட்ட பொதியினுள் இருந்து 30 கைப்பேசி மின்கலங்கள் (பேட்டரிகள்), 250 கிராம் சுண்ணாம்பு, 50 கிராம் புகையிலை, பாக்கு மற்றும் மாவா ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாகஸ்புர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கடற்கொந்தளிப்பு எச்சரிக்கைகளை மீறிச் சென்ற படகு விபத்து – மீனவர் மாயம்

டற்கொந்தளிப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்த போதிலும், கடலில் பயணித்த படகொன்று இன்று (20) அதிகாலை சிலாபம் முகத்துவாரப் பகுதியில் விபத்துக்குள்ளானதில் மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளார். காணாமல் போன மீனவர் சிலாபத்தைச் சேர்ந்த 67 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். “ரஷ்மிக புத்தா” என பெயரிடப்பட்ட படகில் இரண்டு மீனவர்கள் சென்றிருந்த வேளையில், காலை 6.00 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. சம்பவத்தைத் தொடர்ந்து மீனவர்களில் ஒருவர் மீட்கப்பட்டதுடன், பின்னர் சிலாபம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த இரு […]
செம்மணியில் மீட்டெடுக்கப்பட்ட எலும்புக் கூடுகளின்ஆய்வறிக்கை செப்.30 முன் நீதிமன்றுக்கு…

செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட சான்றுப் பொருட்களை ஆராய்ந்து அதன் கால அளவினை தீர்மானித்து அது பற்றிய முழுமையான அறிக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியில் முதலாம் கட்ட அகழ்வுப் பணிகள் 9 நாட்களும், இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் 54 நாட்களும், மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் 56 நாட்களுமாக மொத்தம் 110 நாட்கள் அகழ்வுப் […]
தனியார் வர்த்தக வங்கி முகாமையாளர்கள் உட்பட ஐவர் மீண்டும் விளக்கமறியலில்
கைது செய்யப்பட்ட தனியார் வர்த்தக வங்கியின் முகாமையாளர்கள் உட்பட ஐந்து பேரையும் செப்டம்பர் 3 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எந்தவொரு பொருளையும் இறக்குமதி செய்யாமல் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை பரிமாற்றம் செய்தமை தொடர்பில் அண்மையில் நான்கு தனியார் வர்த்தக வங்கி முகாமையாளர்களும் கைது செய்யப்பட்டனர். ஏற்கனவே இந்த சம்பவத்தில் கைதான வர்த்தகரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றிருந்தது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை […]
வலிந்து காணாமலாக்கப்பட்ட அருட்தந்தையின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல்

2006 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – தீவகம், அல்லைப்பிட்டி இராணுவப் பிரதேசத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்ட அருட்தந்தை திருச்செல்வம் நிஹால் ஜிம் பிறவுண் மற்றும் அவருடன் பயணித்த வென்சிலோஸ் வின்சன் விமலதாஸ் ஆகியோரின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (20) அல்லைப்பிட்டியில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. அல்லைப்பிட்டி சந்தியிலிருந்து புனித பிலிப்புநேரியார் ஆலயம் வரை இடம்பெற்ற கவனயீர்ப்பு பேரணியுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. தொடர்ந்து ஆலயத்தில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன் நினைவுரைகளும் இரங்கல் திருப்பலியும் இடம்பெற்றன. நிகழ்வின் […]