“முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது தாயார் குறித்து அநாகரிகப் பேச்சு!” – பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் பரபரப்பு புகார்!

சென்னை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் மற்றும் அவரது தாயார் குறித்து மிகவும் அநாகரிகமான முறையில் அவதூறாகப் பேசியதாக, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மீது தமிழக காவல்துறை தலைமை இயக்குநரிடம் (DGP) ஆன்லைன் மூலமாகப் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. நயினார் நாகேந்திரனின் சர்ச்சை பேச்சு: சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் பேசிய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “சட்டசபைக்குச் சென்று அப்பா எங்கே என்று சிலர் தேடுகிறார்கள். வீட்டுக்குச் சென்று அம்மாவிடம் கேட்டால்தானே […]
சூடுபிடிக்கும் மிசிசாகா மேயர் தேர்தல்
மிசிசாகா மேயர் தேர்தலுக்கான அண்மைக்காலக் கருத்துக்கணிப்பில், ஒன்டாரியோ முதல்வர் டக் ஃபோர்ட்டின் (Doug Ford) ஆதரவு இருந்தபோதிலும், தற்போதைய மேயர் கரோலின் பாரிஷ் (Carolyn Parrish) மற்றும் முன்னாள் மேயர் பாஃனி குரோம்பி (Bonnie Crombie) ஆகிய இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுவதாகக் காட்டுகிறது. லைசன் ஸ்ட்ராட்டஜிஸ் (Liaison Strategies) நிறுவனம் நடத்திய புதிய கருத்துக்கணிப்பின்படி, முடிவெடுத்த மற்றும் ஒரு பக்கமாகச் சாயக்கூடிய வாக்காளர்களிடையே கரோலின் பாரிஷ் மற்றும் பாஃனி குரோம்பி ஆகிய இருவரும் தலா […]
நாட்டின் சிறு தொழில்முனைவோர் எதிர்கொள்ளும் துன்பங்கள் குறித்து அரசாங்கத்திற்கு அக்கறை இல்லை
ட்டின் விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள் மற்றும் சிறு தொழில்முனைவோர்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள் குறித்து தற்போதைய அரசாங்கத்திற்கு எந்தவித அக்கறையும் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். குருநாகல் பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் அஜித் பிரியலாலின் 50 ஆவது ஆண்டு சமூக சேவை பாராட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 2019 ஆம் ஆண்டைப் போலவே 2024 ஆம் ஆண்டிலும் போலியான வாக்குறுதிகளையும் பிம்பங்களையும் நம்பி மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக […]
கல்கிஸ்ஸ துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழப்பு

கல்கிஸ்ஸ, ஹுளுதாகொட வீதியில் நேற்று இரவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் இத்துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்தக் கொலை இரண்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு இடையே நிலவும் தனிப்பட்ட தகராறின் விளைவாக இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் […]
அபயபுரத்தில் வீதியில் நின்ற வாகனத்தை பள்ளத்தில் வீசிய கார்

திருகோணமலை அபயபுரத்தில் இருந்து இருவரை ஏற்றிக் கொண்டு தம்புள்ளை நோக்கி பயணித்த கார் ஹபரண காட்டுப் பகுதியில் வீதியில் தரித்து நிறுத்து வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த. இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
யாழ் போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை நிபுணர் அமரர் சுதர்சன் ஞாபகார்த்த மருத்துவ முகாம்!

கடந்த வருடம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக ஒரு சிறந்த சத்திரசிகிச்சை நிபுணரை மருத்துவ உலகம் இழந்தது. அவரது நினைவு, நமது உடல்நலம் குறித்து மீண்டும் சிந்திக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது. இன்று நம்மில் பலருக்கு உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, அதிக கொழுப்பு, உடல் பருமன் மற்றும் மன அழுத்தம் (Stress) போன்ற தொற்றா நோய்களும் அவற்றுக்கான ஆபத்துக் காரணிகளும் பெரும் சவாலாக உள்ளன. இவற்றில் பலவற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, மன […]
கல்முனை வைத்தியசாலையின் பணிப்பாளர் உள்ளிட்ட ஐந்துபேருக்கு விசாரணை!

ல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் உள்ளிட்ட ஐந்து பேரை விசாரணைகளுக்காக ஆஜராகுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய அலுவலகம் அறிவித்துள்ளது. இந்த அறிவித்தல் வெள்ளிக்கிழமை கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைகள் எதிர்வரும் 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது. இந்த வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 09 முஸ்லிம் பெண் சுகாதாரப் பணி உதவியாளர்கள், அவர்களின் கலாசார ஆடையினை அணிய தடைவிதிக்கப்பட்டமை […]
ஜனாதிபதி அநுர தன்னிச்சையாக தீர்மானங்களை எடுக்கின்றார் – நாமல் ராஜபக்ச

நீதித்துறையின் சுயாதீனத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் ஜனாதிபதி தன்னிச்சையாக தீர்மானங்களை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் வகையில் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது. 22ஆவது திருத்தத்தை கைவிடுமாறு தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் கடுமையான வலியுறுத்தல்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனினும், அரசாங்கம் அந்த வலியுறுத்தல்களை கருத்திற்கொள்ளவில்லை. மகாநாயக்க தேரர்கள் […]