செஞ்சோலைப் படுகொலையின் 20ஆம்ஆண்டு நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பு;

முல்லைத்தீவு – வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில், கடந்த 2006.08.14அன்று இலங்கை விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விமானக்குண்டுவீச்சுத் தாக்குதலில் படுகொலைசெய்யப்பட்ட 53மாணவியர்களுக்கும், நான்கு பணியாளர்களுக்குமான 20ஆம்ஆண்டு நினைவேந்தல் 14.08.2026இன்று உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் சி.குகநேசனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வானது, படுகொலை இடம்பெற்ற வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக சுடரேற்றப்பட்டு, மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலர்தூவி உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இந்த அஞ்சலி நிகழ்வுகளில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், புதுக்குடியிருப்பு […]

இன்று ஆடிப்பூரம்: சிறப்புகள் மற்றும் முக்கியத்துவம்

ஆடிப்பூரம் என்பது தமிழர் பாரம்பரியத்தில் மிக முக்கியமான பண்டிகையாகும். தமிழ் காலண்டரின் ஆடி மாதத்தில் (ஜூலை – ஆகஸ்ட்) வரக்கூடிய இந்த பண்டிகை, பக்தர்களால் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை அம்மனுக்கு நடத்தப்படும் வளைகாப்பு திருவிழாவாகும். தமிழ் மாதங்களில் நான்காவது மாதமாக வரும் ஆடி மாதத்தில் பூரம் நட்சத்திரம் நிகழும் நாளன்று அம்பாள் அவதரித்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. இவ்வாறு ஆடிப்பூரம் அம்மனின் பிறப்பைக் கொண்டாடும் விழாவாக விளங்குகிறது. ஆடிப்பூரம் வைணவ சமுதாயத்தில் உள்ள 12 […]

ஈரான் மீது ஐக்கிய அரபு இராச்சியம் குற்றச்சாட்டு

ஹோர்முஸ் நீரிணையை கடந்து சென்றுகொண்டிருந்த தங்களது இரண்டு கப்பல்கள் தாக்கப்பட்டதாகவும், இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலை ஈரான் நடத்தியதாக ஐக்கிய அரபு இராச்சியம் குற்றம் சாட்டியுள்ளது. ஒரு வாரத்திற்கும் குறைவான காலத்தில் ADNOC கப்பல்கள் சம்பந்தப்பட்ட இரண்டாவது சம்பவம் இதுவாகும். சனிக்கிழமையன்று, அரசு எண்ணெய் நிறுவனத்துடன் தொடர்புடைய ஒரு கப்பல் நீரிணை வழியாக சென்றபோது, ​​அதன் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக கூறி ஐக்கிய அரபு […]

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ரிஷாட் – ஜெகதீஸ்வரன் இடையே வாக்குவாதம்!

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (13) நடைபெற்றபோது, மன்னார் மாவட்டத்தில் அடிக்கடி இடம்பெறும் மின்சாரத் தடைகள் தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன் மற்றும் ஜெகதீஸ்வரன் ஆகியோருக்கு இடையில் கடுமையான கருத்து மோதல் ஏற்பட்டது. மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மின்சாரம் தடைப்படுவதால் மக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்கள் தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டபோது, “மின்வெட்டை பற்றி நாங்கள் கதைக்கக் கூடாதா?” என ரிஷாட் பதியுதீன் கேள்வி எழுப்பியதாக தெரிவிக்கப்பட்டது. இதன்போது பதிலளித்த ஜெகதீஸ்வரன், […]

போதைப்பொருளை கடத்தி சொத்துச் சேர்த்த பெண் கைது

போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய பணத்தைப் பயன்படுத்தி சொத்துக்களைக் கொள்முதல் செய்ததாகச் சந்தேகத்தின் பேரில் 53 வயதுடைய பெண் ஒருவர் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு 14, ஃபெர்குசன் வீதிப் பகுதியைச் சேர்ந்த குறித்த பெண் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸ் மா அதிபரினால் 2021 மார்ச் 31 ஆம் திகதி அந்தப் முறைப்பாடு சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். அதன்படி மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த […]

இன்று பிற்பகல் பலத்த மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பிறகு இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடமத்திய, வடமேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும், […]

செஞ்சோலைப் பேரவலம்: தமிழர் வரலாற்றின் மற்றுமொரு சோக அத்தியாய நினைவு நாள்

முல்லைத்தீவு நிலப்பரப்பில் வழக்கமான அமைதியோடுதான் 2006-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் 14ம் நாள் அந்த விடியல் புலர்ந்தது. கையில் புத்தகப் பைகளும், மனமெங்கும் உயர்கல்வி பற்றிய கனவுகளுமாக அப்பகுதியில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் செஞ்சோலை வளாகத்தில் ஒன்றுகூடியிருந்தனர். அது அனாதைச் சிறுமிகளுக்கான இல்லமாக மட்டுமல்லாமல், அப்பகுதி மாணவர்களுக்கான தலைமைத்துவ மற்றும் முதலுதவி பயிற்சி முகாமும் நடைபெறும் இடமாக விளங்கியது. பதின்ம வயதின் துடிப்போடு, எதிர்கால இலட்சியங்களைப் பற்றிப் பேசிச் சிரித்துக்கொண்டிருந்த அந்த 61 மாணவிகளின் […]

டொரண்டோ நகரின் மையப்பகுதியில் உள்ள கட்டிடத்தில் தீ விபத்து: காயங்கள் எதுவுமில்லை எனத் தகவல்

வியாழக்கிழமை மாலை டொரண்டோ நகரின் மையப்பகுதியில் (Downtown Toronto) அமைந்துள்ள வணிகக் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாகப் பல வீதிகள் மூடப்பட்டன. மாலை 6:30 மணிக்குச் சற்று முன்பாக, ரிச்மண்ட் வீதி மேற்கில் உள்ள 304 ஆம் இலக்கக் கட்டிடத்தில் (304 Richmond Street West) தீ விபத்து ஏற்பட்டதாக வந்த தகவலைத் தொடர்ந்து அவசரக்கால மீட்புக் குழுவினர் அழைக்கப்பட்டனர். மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தபோது கடுமையான தீப்பற்றி எரிந்ததோடும், அடர்ந்த புகையும் […]

பிக்கரிங் அருகே ஹைவே 401 இல் நிகழ்ந்த விபத்து: தாயும் குழந்தையும் மருத்துவமனையில் அனுமதி

ஆரம்பத்தில் ஆபத்தான நிலையில் இருந்த குழந்தை, மருத்துவமனை சிகிச்சைக்குப் பிறகு தற்போது சீரான நிலைக்குத் திரும்பியுள்ளதாக சிபி24 (CP24) செய்தியாளர் சிஜியா நெல்சன் தெரிவிக்கிறார். வியாழக்கிழமை பிற்பகல் பிக்கரிங் (Pickering) பகுதியில் உள்ள ஹைவே 401 நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கார் விபத்தைத் தொடர்ந்து, ஒரு வயது குழந்தை மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறது. இச்சம்பவம் பிற்பகல் 2:20 மணியளவில் ப்ராக் வீதிக்கு (Brock Road) அருகே கிழக்கிற்குச் செல்லும் பாதையில் நடந்துள்ளது. ஒன்டாரியோ மாகாணக் காவல் துறையின் […]