நயாகரா ஃபால்ஸில் வீடு இடிப்புச் சம்பவத்தின் போது கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டன

2023-ஆம் ஆண்டு ஒன்ராறியோவின் நயாகரா ஃபால்ஸில் (Niagara Falls) வீடு ஒன்றை இடிக்கும் போது கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் எச்சங்களை நயாகரா கொலைக் குற்றப் பிரிவு புலனாய்வாளர்கள் தற்போது அடையாளம் கண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். விரிவான புலனாய்வு மற்றும் மரபணு வழியியல் தொழில்நுட்பத்தின் (Investigative Genetic Genealogy – IGG) உதவியுடன், இடிப்பு இடத்தில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் பிரெண்டா மேரி லெப்லாங்க் (Brenda Marie Leblanc) என்பவருடையது என்பதை நயாகரா பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். 1990-களின் பாதியில் தனது 30-வது […]

ஐக்கிய நாடுகளின் உலகளாவிய ஒப்பந்தம் குறித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

வெளிப்படைத்தன்மையான நீண்டகால முதலீடுகளுக்கு இலங்கையின் கதவுகள் எப்போதும் திறந்திருப்பதாகவும், மனித உரிமைகள் மற்றும் சுற்றாடலைப் பாதுகாக்கும் பொறுப்புமிக்க முதலீடுகளுக்கு அரசாங்கம் அதிகபட்ச ஆதரவை வழங்கும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் உலகளாவிய ஒப்பந்தம் (UN Global Compact) மற்றும் இலங்கை முதலீட்டுச் சபை ஆகியவை இணைந்து கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை உள்ளடக்கிய முதலீட்டு மாநாட்டில் (“Forward Faster Now”) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பிரதமர் […]

தேசிய மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபைகளின் சீட்டிழுப்பு இலக்கங்களை பயன்படுத்தி பாரிய சூதாட்டம்!

தேசிய மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபைகளின் சீட்டிழுப்பு எண்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் சட்டவிரோத சூதாட்டம் காரணமாக சமூகத்தில் பாரிய பேரழிவு உருவாகியுள்ளதாக தேசிய லொத்தர் சபையின் தலைவர் சிறில் எண்டனி பெரேரா தெரிவித்தார். கோப் (COPE) உபகுழு முன்னிலையில் இரு லொத்தர் சபைகளின் அதிகாரிகளும் அழைக்கப்பட்டிருந்த போதே அவர் இதனைச் சுட்டிக்காட்டினார். இந்த மிகவும் வினாசகரமான நிலைமையானது போதைப்பொருள் பயன்பாட்டிற்கு மட்டுமே இரண்டாம் பட்சமானது என்ற அளவிலான பாரதூரமானது என்றும், 4-5 ஆண்டுகளுக்கு முன்னர் கிராமங்களில் […]

ஐரோப்பாவில் அரிய சூரிய கிரகணம்

சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு, ஐக்கிய இராச்சியத்திலும் (UK) ஐரோப்பாவின் பல பகுதிகளிலுமுள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு அரிய வகை சூரிய கிரகணத்தைப் பார்வையிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஐக்கிய இராச்சியத்திலிருந்து பார்த்த மக்களுக்குப் பகுதி சூரிய கிரகணத்தைக் காண முடிந்ததோடு, அது பிரித்தானிய நேரப்படி இரவு 7.00 மணிக்குச் சற்றுப் பிந்தி உச்சக்கட்டத்தை அடைந்தது. அந்த நேரத்தில் பெரும்பாலான பகுதிகளில் சூரியனின் 90% க்கும் அதிகமான பகுதியைச் சந்திரன் மறைத்திருந்ததைக் காண முடிந்தது. எனினும், கிரீன்லாந்து, ஐஸ்லாந்து […]

இலங்கை நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிக்கும் முடிவு குறித்து ஐ.நா கவலை

இலங்கை நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் பற்றிய சிறப்புப் பிரதிநிதி மார்கரெட் செட்டர்வைட் (Margaret Satterthwaite) கவலை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதிக்கான நீண்ட கடிதம் ஒன்றை விடுத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டால், நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கை பலவீனமடையக்கூடும் என அந்த கடிதத்தின் மூலம் அவர் எச்சரித்துள்ளார். தற்போது சேவையில் உள்ள நீதிபதிகளின் பதவிக்காலத்தை […]