ஓகஸ்ட் மாத 6 நாட்களில் 42,810 சுற்றுலாப் பயணிகள் வருகை

ஓகஸ்ட் மாதத்தின் முதல் 6 நாட்களில் இலங்கைக்கு 42,810 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. வெளியிடப்பட்டுள்ள அண்மைய தரவுகளின்படி, குறிப்பிட்ட அந்தக் காலப்பகுதியில் இந்தியாவில் இருந்து 7,827 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதோடு, இது மொத்த வருகையில் 18% ஆகும். அதேபோல், சீனாவில் இருந்து 3,031 பேரும், ஐக்கிய இராச்சியத்தில் (UK) இருந்து 4,922 பேரும், பிரான்சில் இருந்து 3,908 பேரும் இக்காலப்பகுதியில் இலங்கைக்கு வந்துள்ளனர். மேலும், 2026 […]

இத்தாலியிலிருந்து வந்த 200 பயணிகளிடம் ஸ்பெயின் பொலிஸார் தீவிர சோதனை

சட்டவிரோத குடியேற்றம் தொடர்பான முறுகல் நிலை தீவிரமடைந்துள்ள சூழலில், இத்தாலியிலிருந்து வருகை தந்த சுமார் 200 பயணிகளிடம் ஸ்பெயின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தீவிர ஆவண சோதனைகளை மேற்கொண்டுள்ளனர். நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்ட எல்லைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் முதற்கட்டமாகவே நாட்டின் ஆறு பிரதான விமான நிலையங்களில் இந்தச் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மெட்ரிட், பார்சிலோனா, செவில்லே உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு இத்தாலியிலிருந்து வருகை தந்த 12 விமானங்களைச் சேர்ந்த 199 பயணிகளையே ஸ்பெயின் உள்நாட்டு அலுவல்கள் […]

போதைப்பொருள் கடத்தல் தலைவன் ’கஞ்சிபானி இம்ரானின்’ சகாக்கள் கட்டுநாயக்கவுக்கு அழைத்து வரப்பட்டனர்

இலங்கையின் பிரபல போதைப்பொருள் கடத்தல் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றக் கும்பலின் தலைவனான ‘கஞ்சிபானி இம்ரான்’ என்பவரின் நிதிச் செயல்பாடுகளைக் கவனித்து வந்த ‘ரத்மலானே சைமா’ என அழைக்கப்படும் தொடிவிலகே தனுஷ்க கௌசல்ய உட்பட மூவர் மலேசியாவில் வச்சு கைது செய்யப்பட்டுள்ளனர். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகல தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினால் மலேசியாவில் கைது செய்யப்பட்ட இவர்கள்இ ஓகஸ்ட் 10ஆம் திகதி பிற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். ‘ரத்மலானே சைமா’ (41 […]

அரச ஊழியர்களுக்கான சம்பளம் வழங்கும் முறையில் மாற்றம்?

30 ஆண்டுகள் பழமையான அரச ஊதிய முறைக்கு (GPS) மாற்றாக, ஒரு நவீன தகவல் தொழில்நுட்ப முறையை உருவாக்குவதற்காக நிதி அமைச்சகம் ஒப்பந்தப்புள்ளிகளை கோரியுள்ளது. நிதி அமைச்சகத்தின் பொதுக் கணக்குகள் திணைக்களம் (DSA), “அரச நிறுவனங்களுக்கான ஊதிய முறையின் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் செயலாக்கம்” என்ற தலைப்பில் இந்த ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறித்த திணைக்களம், தற்போதைய முறை தொழில்நுட்ப ரீதியாக காலாவதியானதுடன், நவீன செயல்பாட்டுத் தேவைகளையும் பூர்த்தி செய்யவில்லை அல்லது வளர்ந்து வரும் தகவல் பாதுகாப்புத் […]

ஒரு மாதத்திற்குள் புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறு

2026ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளை ஒரு மாதத்திற்குள் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்தார். இதற்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை ஆகஸ்ட் 20 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நடத்துவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார். இம்முறை ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையானது நாடு முழுவதிலுமுள்ள 2,723 பரீட்சை மையங்களில் நடைபெற்றது. இப்பரீட்சைக்கு 294,089 மாணவர்கள் […]

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிட நிபந்தனைகளுடன் ட்ரம்ப் தயார்!

ஈரான் முற்றிலுமாக ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறந்தால், புதிய அணுசக்தி ஒப்பந்தத்தைப் பெறும் முயற்சியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கைவிடத் தயாராக இருக்கலாம் என The Wall Street Journal செய்தி வெளியிட்டுள்ளது. முழுமையான மற்றும் இறுதியான அணுசக்தி ஒப்பந்தத்தை வலியுறுத்துவதற்குப் பதிலாக, முக்கிய எண்ணெய் கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதை அடிப்படையாகக் கொண்டு, பிராந்தியத்தில் முன்னெடுக்கப்படும் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வரவும், தற்போதுள்ள போர் […]

போதைப்பொருள் குற்றவாளிகளில் 1,506 பேருக்கு மறுவாழ்வுப் பயிற்சிகள்

போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக நீதிமன்றங்களால் தண்டனை விதிக்கப்பட்ட 4,962 சிறைக்கைதிகளுள் 1,506 பேருக்கு தற்போது மறுவாழ்வுப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக, ஆட்சி, நீதி மற்றும் குடிமக்கள் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீதிமன்ற உத்தரவுகளின் கீழ் மறுவாழ்வுக்குப் பரிந்துரைக்கப்பட்ட கைதிகளுக்கும், தங்களின் விருப்பத்தின் பேரில் தானாக முன்வந்து மறுவாழ்வு பெற விரும்புபவர்களுக்கும் இப்பயிற்சிகள் வழங்கப்படுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி நஜித் இந்திக தலைமையில் நாடாளுமன்றத்தில் அண்மையில் கூடிய இக்குழுவின் கூட்டத்தின்போதே […]

கஞ்சா கடத்திய இளம் ஜோடி கைது!

கஞ்சா கடத்திய இளம் ஜோடியை ஆரச்சிகட்டுவ பொலிஸார் கைது செய்து உள்ளனர். புத்தளம் சிலாபம் வீதியின் பத்துளு ஓய பொலிஸ் வீதித் தடையில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து சுமார் 17 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. 26 வயதுடைய ஆண் ஒருவரும் 22 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ராஜாங்கனை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் என தெரியவந்துள்ளது. கஞ்சா செடிகள் தனமல்வில பிரதேசத்தில் செய்கை பண்ணப்பட்டவை […]

அமெரிக்க சமூக ஊடக நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு?

சமூக ஊடக நிறுவனங்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் கடுமையான விதிகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என அமெரிக்க மக்களில் பெரும்பான்மையானோர் ஆதரவு தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. சிறுவர்களைப் பாதுகாக்கும் வகையில், 16 வயதிற்குட்பட்ட பயனாளர்களுக்கு வயதுப் பரிசோதனை கருவிகளை கட்டாயமாக்குவது உள்ளிட்ட கட்டுப்பாடுகளுக்கு இரு கட்சிகளையும் சேர்ந்த மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மெட்டா மற்றும் யூடியூப் போன்ற நிறுவனங்கள் சிறுவர்களை அடிமையாக்கும் வகையில் தமது செயலிகளை வடிவமைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டு, சட்ட ரீதியான அழுத்தங்களை எதிர்கொண்டு வரும் […]

தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு?

மன்னார் மாவட்டத்தில் கடந்த பல வருடங்களாக குறித்த மின்தடை ஏற்பட்டு வருகின்ற சந்தர்ப்பங்கள் காணப்படுகின்ற நிலையில், அப்பகுதியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து வருகின்றனர். கடந்த ஆட்சிக் காலங்களில் அதிகாரங்களில் காணப்பட்ட குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த மின் தடை பிரச்சினைக்கு ஏன் நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகதீஸ்வரன் கேள்வி எழுப்பி உள்ளார். மன்னாரில் கடந்த 08 ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் […]