தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்த இருந்த கஞ்சா பறிமுதல்

இலங்கைக்கு கடத்த பிரப்பன் வலசை கடற்கரைக்கு வானில் கொண்டுவரப்பட்ட 297 கிலோகிராம் கஞ்சா இன்றைய தினம் (08.08.2026) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 670 கிலோகிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதோடு, கடத்தல்காரர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் சந்தீஷ் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் உட்கோட்ட குற்ற தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த வான் ஒன்றை சோதனை […]

தையிட்டி; பவானி வீதி குறித்து மற்றுமோர் வழக்கு தள்ளுபடி

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி பொலிஸாரின் சார்பில் தெல்லிப்பழைப் பொலிஸார் தொடர்ந்த மற்றொரு வழக்கை நீதிமன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதியை தவிசாளர் சுகிர்தன் நிலஅளவைத் திணைக்களத்தினரிடம் அண்மையில் அடையாளம் காட்டியிருந்தார். இதையடுத்து, அந்த வீதியை விடுவிக்க வலி வடக்குப் பிரதேசபை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்தது. இதற்கு எதிராகப் பலாலிப் பொலிஸார் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தநிலையில், அந்தவழக்கை விசாரித்த […]

சமூகவலைத் தளங்களில் பெண்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி மோசடி!

Facebook, Messenger, Instagram மற்றும் WhatsApp ஆகிய சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி பெருமளவில் முன்னெடுக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட கப்பம் கோரும் மோசடி தொடர்பில் தகவல்களைக் கண்டறிய இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றம் (SLCERT) நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த மோசடி இந்தியாவிலிருந்தே இயங்கி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மோசடிக்காரர்கள் தங்களின் இலக்குகளை வீழ்த்துவதற்கு முன்னர், அவர்களின் சகோதர சகோதரிகள் உட்பட உறவினர்கள் மற்றும் நண்பர்களைத் தங்களது நண்பர்கள் பட்டியலில் சேர்த்துக்கொண்டுள்ளனர். இந்த மோசடியின் முதல் கட்டமாக, Instagram மூலம் […]

எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் மேல் மாகாணக் கிளை நாளை ஆரம்பம்

எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் மேல் மாகாணக் கிளை நாளை (09) ஆரம்பிக்கப்படவுள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டின் அதிகளவிலான எரிபொருள் விநியோகஸ்தர்கள் மேல் மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதால், இந்த கிளையை விரைவாக நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர். தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு இதுவரை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடமிருந்து நியாயமான தீர்வுகள் கிடைக்கப்பெறவில்லை என்றும், அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே இச்சங்கம் தொடங்கப்படுவதாகவும் எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் கூறுகிறது. குருணாகல் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைத் தவிர, […]

யாழ்.பல்கலைக்கழக மாணவி திடீர் மரணம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தில் கல்வி கற்று வந்த கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த நிரோஷினி (வயது 27) என்ற மாணவி உயிரிழந்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இம்மாணவி கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் வைத்தியசாலையிலேயே உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

செம்மணி; கைகள் கட்டப்பட்டுத் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மனித எலும்புக் கூடு

செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்று சனிக்கிழமை (08.08.2026) முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது கழுத்துடன் தலை துண்டிக்கப்பட்டு மண்டையோடு இல்லாத நிலையில் இரு கைகளும் கட்டப்பட்டு நெஞ்சுடன் அணைத்த நிலையில் மனித எலும்புக்கூட்டுத் தொகுதியொன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான சிகரட்டுக்களுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட சுமார் 60 இலட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளுடன், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அவற்றை வெளியே எடுத்துச் செல்ல முயன்ற இலங்கை விமானப் பயணி ஒருவர் இன்று (08) அதிகாலை விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். மினுவாங்கொடை, திவுலபிட்டிய பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய கூலித் தொழிலாளி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் இன்று (08) அதிகாலை 04:00 மணியளவில் […]

அமெரிக்க செனட்டில் அதிரடி சட்டமூலம் நிறைவேற்றம்!

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளின் பொருட்களுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்கும் சட்டமூலம் அமெரிக்க செனட் அவையில் (U.S. Senate) 86-11 என்ற பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. “லிண்ட்சே ஓ கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026” என அழைக்கப்படும் இந்தச் சட்டம், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யும் முக்கிய நாடுகளுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்க வழிவகை செய்கிறது. […]

டின் மீன் தயாரிப்பு நிறுவனம் முற்றுகை

இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் (SLSI) செல்லுபடியாகும் உரிமம் இன்றி பன்னல, எலபடகம பகுதியில் இயங்கி வந்த டின் மீன் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை நேற்று (7) முற்றுகையிட்டது. நுகர்வோர் விவகார அதிகாரசபைக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அதன் போட்டித் திறன் மேம்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் இந்த முற்றுகை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது சுமார் 15 லட்சம் ரூபா பெறுமதியான டின் மீன் கையிருப்பு அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் தயாரிக்கப்படும் டின் […]

இன்று LPL இறுதிப் போட்டி

லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி, கோல் கெலன்ட்ஸ் (Galle Gallants) மற்றும் ஜஃப்னா கிங்ஸ் (Jaffna Kings) அணிகளுக்கிடையில் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று (8) இரவு நடைபெறவுள்ளது. லீக் சுற்றின் அனைத்துப் போட்டிகளின் முடிவிலும் இவ்விரு அணிகளும் புள்ளிப்பட்டியலின் முதல் (ஜஃப்னா) மற்றும் இரண்டாம் இடங்களைப் பிடித்திருந்தன. இதற்கமைய, இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது தகுதிப் போட்டியில் (Qualifier 1) திரில் வெற்றி பெற்ற ஜஃப்னா கிங்ஸ் அணி, […]