பெண்களை விமர்சித்தால் அதிரடி கைது – உதயநிதியை அலறவிட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!

சென்னை தமிழக அரசியலில் அனல் பறக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வரும் நிலையில், பனையூரில் நடைபெற்ற தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆற்றிய ஆவேச உரை ஒட்டுமொத்த அரசியல் களத்தையும் அதிர வைத்துள்ளது. ‘ஜோசப் விஜய் முதலமைச்சராக இருக்கும் இந்த அதிரடி ஆட்சியில் பெண்களை அவதூறாகப் பேசினால் யாராக இருந்தாலும் சும்மா இருக்க முடியாது; உடனடியாகக் கைது செய்யப்படுவார்கள்’ என அவர் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். இது பெண்களுக்கான முழுமையான பாதுகாப்பு அரணாக இந்த […]

நாட்டில் பொலிஸ் சேவையில் பாரியளவில் ஆளணி வளப் பற்றாக்குறை

நாட்டில் பொலிஸ் சேவையில் பாரியளவில் ஆளணி வளப் பற்றாக்குறை நிலவி வருவதாகவும் இதற்கு தீர்வு காணும் வகையில் ஓய்வு வயதெல்லையை அடைந்த அதிகாரிகளுக்கு சேவை நீடிப்பு வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 60 வயதை பூர்த்தி செய்த குறைந்த தர பொலிஸ் அதிகாரிகளுக்கு சேவை நீடிப்பை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். பொலிஸ் கான்ஸ்டபிள் பதவி நிலை முதல் பிரதான பொலிஸ் பரிசோதகர் பதவி வரை கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகள் […]

தாழ் மிதிபலகை பேருந்துகளைக் கொள்முதல் செய்ய நடவடிக்கை

பொதுப் போக்குவரத்து அமைப்பை நவீனமயமாக்கும் திட்டத்தின்கீழ், நகர்ப்புறங்களில் பயணிகள் போக்குவரத்து சேவைக்காக மேலும் 50 சொகுசு தாழ் மிதிபலகை பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தற்போது அமுல்படுத்தப்பட்டு வரும் திட்டத்தின்கீழ், 100 சொகுசு தாழ் மிதிபலகை பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகள் முடிந்து, அந்தப் பேருந்துகள் ஏற்கனவே நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. பயணிகளின் தேவை அதிகரிப்பு, முக்கிய பிராந்திய போக்குவரத்து மற்றும் சுற்றுலா மையங்களாக கண்டி, காலி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய […]

இலங்கை வரும் இந்திய வெளிவிவகாரச் செயலர் : தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வெளிவிவகாரச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இன்று(05.08.2026) இலங்கைக்கு வருகை தரவுள்ளார். கொழும்பில் அரசுடன் உயர்மட்டப் பேச்சுகளை முன்னெடுப்பதுடன், இலங்கையில் நீடித்து நிலைக்கக்கூடிய இனச்சிக்கலுக்கான தீர்வுகள், பிராந்தியப் பாதுகாப்பு, உத்திசார் இணைப்புத் திட்டங்கள் மற்றும் இருதரப்புப் பொருளாதார உறவுகள் குறித்துக் கலந்துரையாடுவதே அவரின் இந்தப் பயணத்தின் முதன்மை நோக்கமாகவுள்ளது. தனது விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச் […]

கடுவலையில் சொகுசு பஸ் மீது தீ : இரு சந்தேகநபர்கள் தப்பியோட்டம்!

கடுவலை பிரதான பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு பஸ் ஒன்று, இன்று புதன்கிழமை (05) அதிகாலை அடையாளம் தெரியாத இருவரால் தீ வைத்து முழுமையாக எரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இரு சந்தேகநபர்கள் இன்றைய தினம் அதிகாலை வேளையில் குறித்த சொகுசு பஸ் மீது தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். அதிவேக நெடுஞ்சாலை ஊடாக கடுவலை – மாத்தறை பாதையில் சேவையில் ஈடுபடும் பஸ்ஸே இவ்வாறு இலக்கு வைக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் […]

பிரதம நீதியரசரின் வீட்டுக்கு கல்லெறிந்தவர்கள் இன்று நீதித்துறை பற்றி பேசுகிறார்கள் – விஜித்த ஹேரத்

நீதித்துறையை குடும்ப ஆட்சியில் கட்டுப்படுத்த முயற்சித்தவர்களும், பிரதம நீதியரசரின் வீட்டுக்கு கல்லெறிந்தவர்களும் தான் இன்று நீதித்துறை பற்றி பேசுகிறார்கள். அரசியல் அதிகாரத்தை அதிகரித்து கொள்வதற்காக நாங்கள் 22 ஆம் திருத்தத்தை கொண்டு வர முயற்சிக்கவில்லை. நீதித்துறையை பலப்படுத்தவும், சேவைகளை வினைத்திறனாக்குவதற்காகவுமே உத்தேச 22 ஆம் திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது. இதன் பயன் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்குமே கிடைக்கும். கடந்தகால படுகொலைகள், ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணைகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளதால் ஒருசிலர் கலக்கமடைந்துள்ளார்கள். இவர்களின் தனிப்பட்ட பிரச்சினைகளுக்காக நீதித்துறையை மறுசீரமைக்காமல் […]

தெற்கு மக்கள் வடக்கு மக்களின் காணி போராட்டத்தின் நியாயத்தை புரிந்துகொள்ள வேண்டும்!

வட பகுதி மக்களின் காணி போராட்டம் எத்துணை நியாயமானது என்பதை தெற்கு மக்கள் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும் என சம உரிமை இயக்கம் வலியுறுத்தியுள்ளது. சம உரிமை இயக்கத்தின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவ்வியக்கத்தின் அமைப்பாளரும் முன்னிலை சோசலிசக் கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான இந்திரானந்த டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், வடக்கில் பலாலி, மயிலிட்டி மற்றும் முல்லைத்தீவின் கேப்பாப்புலவு உள்ளிட்ட பல […]

மனைவியின் நெருக்கமான புகைப்படங்களைப் பகிர்ந்த நபரை கொன்ற கணவருக்குத் தண்டனை!

சமீபத்தில் வெளியிடப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பு ஒன்று, மெட்ரோ வான்கூவர் (Metro Vancouver) வீதியொன்றில் சமையலறை கத்திகளுடன் வந்த தம்பதியினர் ஒருவர் நபரை எவ்வாறு, ஏன் குத்திக் கொன்றனர் என்பது குறித்த அதிர்ச்சி தரும் விவரங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. பர்னபி (Burnaby) வீதியில் நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, 2024 ஜூன் மாதம் ரிசா ஜாஃபரி (Riza Jafari) மற்றும் அவரது மனைவி ஹேடிஸ் ஹைதாரி (Hatice Haydari) ஆகிய இருவர் மீது இரண்டாம் நிலை […]

மொன்றியல் சிறுமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட போது அணிந்திருந்த ஆடைகளில்   இரத்தக் கறை

கடந்த கோடைகாலத்தில் நியூயோர்க்கின் கிராமப்புறப் பகுதியில் ஒன்பது வயது மொன்றியல் சிறுமி உயிரிழந்த போது அணிந்திருந்த ஜாக்கெட்டில் பொலிஸார் இரத்தக் கறைகளைக் கண்டுபிடித்துள்ளனர். கடந்த ஜூலை மாதம் தனது மகளைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபரின் வழக்கின் போது, நியூயோர்க் மாநில பொலிஸின் தடயவியல் விஞ்ஞானி ஒருவர் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சாட்சியத்தில் இந்த கண்டுபிடிப்பு குறித்துத் தெரிவித்தார். மொன்றியலில் வசித்து வந்த மெலினா பிராட்டோலின் (Melina Frattolin) என்பவரின் மரணம் தொடர்பாக, லூசியானோ பிராட்டோலின் (Luciano Frattolin) […]

உயர்தர பரீட்சை நடத்துவது குறித்து இன்று தீர்மானம்

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையை நடத்துவது தொடர்பில் இன்று புதன்கிழமை (5) இடம் பெறும் உயர் மட்ட கலந்துரையாடலின் பின்னர் தீர்மானிக்க பண்பாடும் என கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (4) இடம்பெற்ற இந்த வருடத்துக்கான அபிவிருத்தி செயற்பாடுகளுக்கான எழுபத்தோராயிரத்து எழுநூறு மில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக […]