கேரள கஞ்சாப் பொதிகளுடன் ஒருவர் கைது!

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாழ்வுபாடு கிராமத்தில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகளை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளதோடு நபர் ஒருவரையும் நேற்று (03) இரவு கைது செய்துள்ளனர். மன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் நேற்று மாலை விரைந்து செயல்பட்ட மன்னார் பொலிஸ் நிலை குற்றத்தடுப்பு பிரிவினர் தாழ்வுபாடு கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் சோதனையிட்டனர். இதன்போது குறித்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான 9 கிலோ 400 […]

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரிய மனு தள்ளுபடி

வரவிருக்கும் க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரிக்காமலேயே தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டுள்ளது. பரீட்சைக்கு முதன்முறை மற்றும் இரண்டாம் முறை தோற்றவுள்ள ஐந்து மாணவர்களால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம்

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கினால் வயிற்றுப்போக்கு மற்றும் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. மத்திய, சபரகமுவ, மேற்கு மற்றும் தெற்கு ஆகிய நான்கு மாகாணங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அசுத்தமான நீரில் விளையாடுவதால் குழந்தைகளிடையே வயிற்றுப்போக்கு, டெங்கு காய்ச்சல், தொற்று மஞ்சள் காமாலை மற்றும் தொழுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக சங்கத்தின் பொதுச்செயலாளர் […]

ஊழியர் சேமலாப நிதி(EPF) சட்டத்தில் மாற்றம்?

ஊழியர் சேமலாப நிதி (EPF) சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தனியார் மற்றும் பகுதியளவு அரச துறைகளில் பணிபுரியும் ஓய்வூதிய உரிமையற்ற ஊழியர்களுக்கான சமூகப்பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 1958ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதிச் சட்டம் தற்போது நடைமுறையில் உள்ள நிலையில் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இலங்கை மத்திய வங்கி இதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதுடன், தொழில் திணைக்களம் ஆரம்ப வரைவை தயாரித்துள்ளது. இதற்கமைய, ஊழியர் சேமலாப […]

இந்திய அணி இலங்கையை வந்தது

2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இரண்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி நேற்று (04) மாலை இலங்கை வந்தடைந்துள்ளது. இதன் முதலாவது போட்டி வரும் ஓகஸ்ட் 15 முதல் 19 ஆம் திகதி வரை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரண்டாவது போட்டி வரும் ஓகஸ்ட் 23 முதல் 27 ஆம் திகதி வரை கொழும்பு எஸ்.எஸ்.சி (S.S.C.) மைதானத்தில் நடைபெறவுள்ளது. உலக டெஸ்ட் தரவரிசையில் இந்தியா 5ஆவது இடத்திலும், இலங்கை […]

சிறுவனுக்கு அதிக கட்டணம் அறவீடு செய்த தனியார் பேருந்து; வடமராட்சியில் சம்பவம்

வடமராட்சி கிழக்கு தனியார் போக்குவரத்து சங்கத்தைச் சேர்ந்த பேருந்து நடத்துனர் ஒருவருக்கு ஒரு வார பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது. 10 வயதிற்கு உட்பட்ட சிறுவனிடம் முழு பயணக் கட்டணம் அறவிட்டதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடத்தனையிலிருந்து மருதங்கேணி சென்ற சிறுவனிடம் வயது வந்தோருக்கான முழு கட்டணம் அறவிடப்பட்டதாக அவரது தந்தை சங்கத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், நடத்துனர் விதிமுறைகளை மீறி முழு கட்டணம் பெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த […]

4 மாவட்டங்களுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலையினால் 04 மாவட்டங்களிலுள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு பிறப்பிக்கப்பட்ட இரண்டாம் நிலை மண்சரிவு முன்னெச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த எச்சரிக்கையானது இன்று (05) புதன்கிழமை காலை 9:00 மணி முதல் நாளை (06) வியாழக்கிழமை காலை 9:00 மணி வரை 24 மணி நேரத்திற்குச் செல்லுபடியாகும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது இதன்படி, கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

நீதித்துறையின் சுயாதீனத்தின் மீது அழுத்தம் செலுத்த முயற்சிக்காதீர்கள் – சஜித் பிரேமதாச

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்போம்  என்று கூறி ஆட்சிக்கு வந்துவிட்டு, நீதித்துறையின் சுயாதீனத்தின் மீது அழுத்தம் செலுத்த முயற்சிக்காதீர்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (4) நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் கேள்வி எழுப்பி உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், நாட்டின் நீதித்துறை அமைப்பின் செயல்திறனை அதிகரிக்கும் நோக்கத்துடன் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் யோசனையை அரசாங்கம் முன்வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த யோசனை தொடர்பில் […]

நீர்கொழும்பு, மஹர சிறைச்சாலை மோதல்கள்: விசாரணை அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னரே காரணத்தைக் கூறமுடியும் – நளிந்த ஜயதிஸ்ஸ

ர்கொழும்பு மற்றும் மஹர சிறைச்சாலை மோதல்கள் தொடர்பில் வெளியாகியுள்ள புலனாய்வுத்தகவல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியிருப்பதுடன், அதுபற்றிய விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவ்விரு அறிக்கைகளும் கிடைக்கப்பெற்றதன் பின்னரே இம்மோதல்கள் எதனால் ஏற்பட்டன என்பது பற்றிக் கூறமுடியும் என அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடாக அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு செவ்வாய்க்கிழமை (4) கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறைகளைத் தொடர்ந்து சில தினங்களுக்கு […]

நல்லூரான் வடக்கு வாசல் வளைவு திறப்பு

நாளை நல்லூரான் வடக்கு வாசல் வளைவு நண்பகல் 12 மணிக்கு திறக்கப்படவிருக்கின்றது. யாழ்.சட்டநாதர் சிவன்கோயிலிலிருந்து காலை 10.30 மணியளவில் சமய அனுஷ்டானங்களுடன் நெல்மணிகள் நிரம்பிய பெட்டகத்தை ஏற்றிய இரட்டைத் திருக்கை காளை மாட்டுவண்டி மங்கள வாத்தியங்கள் முழங்க சட்டநாதர் வீதியின் ஊடாக முடமாவடிச் சந்தியை அடைந்து புதிய வளைவை நோக்கிப் புறப்படும். மேற்படி காளைமாட்டு வண்டியே நெல் மணிகள் உடன் முதன் முதலாக புதிய வளைவின் ஊடாகச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. மாட்டுவண்டியில் வரும் நெல் பெட்டகத்தில் […]