வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை

நாட்டின் பல மாவட்டங்களுக்கு பலத்த காற்றுத் தொடர்பான எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வடக்கு, வட-மத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும், இரத்தினபுரி, மொனராகலை, அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் பலத்த காற்று வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாட்டின் மீது நிலவும் தீவிர தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை காரணமாக குறித்த பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மன்னாரில் கடல் அட்டைகளுடன் 12 சந்தேகநபர்கள் கைது

மன்னார், சவுத்பார் கடற்கரை மற்றும் தரைப்பகுதியை உள்ளடக்கிய வகையில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கடல் அட்டைகளுடன் 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (28) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் வழியினூடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட மற்றும் எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி தரை வழியினூடாக கொண்டு செல்லப்பட்ட 14,072 கடல் அட்டைகளுடன் 12 சந்தேகநபர்கள், 03 டிங்கி படகுகள் மற்றும் 02 மோட்டார் சைக்கிள்கள் இவ்வாறு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. […]

இன்ஸ்டாகிராமில் ராகுல் காந்தியை முந்திய முதலமைச்சர் விஜய்: 1.87 கோடி ஃபாலோயர்களுடன் புதிய சாதனை!

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் முதலமைச்சர் விஜய்யைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிவேகமாக உயர்ந்து வருகிறது. இன்றைய இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் மத்தியில் இன்ஸ்டாகிராம் பயன்பாடும் மோகமும் மிக அதிக அளவில் இருந்து வருகிறது. இதில் தங்களது திறமைகளை வெளிப்படுத்திப் பலர் வீடியோக்களை வெளியிட்டு வருவதுடன், இதன் மூலமாக லட்சக்கணக்கான ஃபாலோயர்களைப் பெற்றுப் பெரிய அளவில் வருவாயும் ஈட்டி வருகிறார்கள். இதுபோன்று இன்ஸ்டாகிராம் […]

ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, சர்க்கரை பாக்கெட்டில் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு!

சென்னை: தமிழ்நாட்டிலுள்ள நியாயவிலைக் கடைகளில் (ரேஷன் கடைகள்) குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்படும் துவரம் பருப்பு மற்றும் சர்க்கரை ஆகிய அத்தியாவசியப் பொருட்களை இனி நெகிழிப் பாக்கெட்டுகளில் அடைத்து வழங்கத் தமிழ்நாடு அரசு அதிரடியாக முடிவு செய்துள்ளது. இந்த புதிய முறையின் மூலம் ரேஷன் கடைகளில் காலம் காலமாக நிலவி வரும் எடை குறைவுப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுவதோடு, பொதுமக்களுக்குத் தரமான பொருட்கள் நேரடியாகக் கிடைப்பது முழுமையாக உறுதி செய்யப்படும் என்று உணவுப் பொருள் வழங்கல் துறை வட்டாரங்கள் […]

எரிபொருள் விலை அதிகரிக்கலாம்?

மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைவாக இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. உலக சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கங்களைக் கருத்திற் கொண்டு விலைத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், உலக சந்தையில் எரிபொருள் விலையில் தளம்பல் நிலை ஏற்பட்டுள்ளதன் காரணமாக, இலங்கையில் அடுத்த மாதத்திற்கான எரிபொருள் விலைத் திருத்தத்தில் குறிப்பிடத்தக்க குறைப்பு எதிர்பார்க்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக […]

தையிட்டி காணிகளை மீளக் கையளியுங்கள்!

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளான தனியார் காணிகளை காணி உரிமையாளர்களிடம் மீளக் கையளிக்க வேண்டும் எனக் காணி உரிமையாளர்கள் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், இன்றைய தினம்(28) செவ்வாய்க்கிழமை ஆரம்பித்துள்ள போராட்டம் நாளைய தினம்(29) புதன்கிழமை மாலை வரையில் இரண்டு நாட்களும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.  

யார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம் – ஆளுநருக்கு தவெக கடும் கண்டனம்!

சென்னை: திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் மூன்றாமிடத்திற்குத் தள்ளப்பட்டதற்கு ஆளும் தவெக அரசு தனது கடுமையான கண்டனத்தை மிக ஆவேசமாகப் பதிவு செய்துள்ளது. இன்று நடைபெற்ற இந்த மாபெரும் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், பல்கலைக்கழக மாணவ – மாணவியருக்குப் பட்டங்களை வழங்கினார். அப்போது எதிர்பாராத விதமாக, வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதத்திற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில்தான் தமிழ்த்தாய் […]

போதைக்கு அடிமையான இளைஞர் ஒருவர் உயிரிழப்பு: யாழில் சம்பவம்

யாழில் போதைக்கு அடிமையான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவமானது நேற்றையதினம்(28) இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் – சிராம்பியடியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் கடந்த 3 வருடங்களாக போதைவஸ்துக்கு அடிமையாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்றுமுன்தினம்(27.7.2026) காலை மலசலகூடம் சென்று அங்கே மயக்கமுற்றுள்ளார். பின்னர் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். அதிகளவான போதைவஸ்து பாவனை காரணமாக மரணம் […]

இலங்கைக் குற்றவாளிகள் மூவர் மலேசியாவில் கைது

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் நபரான “ரத்மலானை சைமா” உட்பட மூவர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் ‘கஞ்சபானி இம்ரான்’ என்பவரின் பிரதான உதவியாளராக கருதப்படுகிறார்.

யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து உப ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பாராளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான  கருணநாதன் இளங்குமரன்  தலைமையில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர்  இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் பங்குபற்றுதலுடன், இ யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது . இக் கூட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர […]