ஒரே வாரத்தில் கதிர்காம மூன்றாவது யாத்திரிகர் திடீர் மரணம்

கதிர்காம பாதயாத்திரையில் ஈடுபட்டிருந்த மேலும் ஒரு யாத்திரிகர், திங்கட்கிழமை (13) அன்று காலை திடீரென உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் குமுக்கனுக்கும் நாவலடிக்கும் இடைப்பட்ட ‘கஜபா வெட்டை’ எனும் பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஏறாவூர், களுவன்கேணியைச் சேர்ந்த பிரதி அதிபர் கே. பாக்கியராசா (வயது 52) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரனின் மருமகன் ஆவார். மாரடைப்பு காரணமாகவே இவர் உயிரிழந்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இவரது உடல் தற்போது பாணமை […]

’ஐஸ்’ போதைப்பொருள் விற்றவருக்கு ஆயுள் தண்டனை

ஐந்து கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளைத் தன்வசம் வைத்திருந்து விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட நபருக்கு, மன்னார் மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் திகதி, 5 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளைத் தம்வசம் வைத்திருந்தமை மற்றும் அதனை விற்பனை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார். மன்னார் மேல் நீதிமன்றில் இடம்பெற்று வந்த இவ்வழக்கின் விசாரணைகளின் […]

பிரான்ஸை வீழ்த்தி உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஸ்பெய்ன்

உலகக் கிண்ணத்தின் முதலாவது அரையிறுதிப் போட்டியில், பிரான்ஸின் கனவை சிதறடித்து 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெய்ன் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. தங்களின் அசைக்க முடியாத பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆட்டமுறையால் பிரான்ஸை ஒரு கட்டத்தில் கூட ஆதிக்கம் செலுத்த விடாமல் ஸ்பெய்ன் கட்டுப்படுத்தியது. போட்டியின் முக்கிய கோல்கள் மற்றும் திருப்பங்கள் பெனால்டி மூலம் முதல் அடி (22ஆவது நிமிடம்): போட்டியின் 22ஆவது நிமிடத்தில் ஸ்பெய்னின் இளம் புயல் லமீன் யமாலை, பிரான்ஸ் […]