மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்களை அடுத்து இவ்வாறு மசகு எண்ணெய் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.25 அமெரிக்க டொலராக காணப்படுகின்றது. இது 2 சதவீதத்திற்கும் மேலான அதிகரிப்பாகும். அதேநேரம், பிரண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.99 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இது 3 சதவீத அதிகரிப்பை […]
இலங்கையில் பிறப்பு எண்ணிக்கை பாரிய வீழ்ச்சி
கடந்த 2025ஆம் ஆண்டு வரையிலான கடந்த பத்தாண்டுகளில், இலங்கையின் உயிருடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சத்து இருபதாயிரத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. புதிய பிறப்புகளை ஊக்குவிப்பதற்காக அரசாங்கம் அனைத்து வகையான சலுகைகளையும் வழங்கும் என்று மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். 2015ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையிலான கடந்த பத்தாண்டுகளில், நாட்டில் உயிருடன் பிறக்கும் குழந்தை எண்ணிக்கை தொடர்ந்து வீழ்ச்சியடையும் போக்கைக் […]