வத்தளையில் இனந்தெரியாத சடலம் கண்டுபிடிப்பு : புகையிரதத்திலிருந்து விழுந்து உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம்!

வத்தளை, ஹுனுப்பிட்டிய புகையிரத நிலையத்திற்கு அருகிலுள்ள புதர் காடொன்றிலிருந்து இனந்தெரியாத நபர் ஒருவரின் சடலம் நேற்று (13) மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கிரிபத்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் புகையிரதத்திலிருந்து தவறி விழுந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், இந்த முடிவு சுமார் 3 நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். சம்பவ இடத்துக்கு வருகை தந்த தடயவியல் சோதனை அதிகாரிகள் (SOCO) முதற்கட்ட விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழப்பு ; மற்றுமொருவர் படுகாயம் ; கிளிநொச்சி பூநகரியில் சோகம்

கிளிநொச்சி பூநகரியில் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர்  படுகாயமடைந்துள்ளார். A32 நெடுஞ்சாலையில் இடம்பெற்ற கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், அவருடன் பயணித்த நண்பர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத்துயரச் சம்பவம் நேற்றுமுன்தினம் (13) ஞாயிற்றுக்கிழமை இரவு 10.00 மணியளவில் பூநகரி பள்ளிக்குடாச் சந்திப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இளைஞரும் அவரது நண்பரும் மோட்டார் சைக்கிளில் A32 நெடுஞ்சாலை வழியாகச் சென்றுகொண்டிருந்தபோது,  பூநகரி பள்ளிக்குடா” சந்தியில்  […]

பிரதேச சபை வளாகத்தில் குப்பை கொட்டத் தடை

அம்பாறை – நிந்தவூர் எம்.எச்.எம். அஷ்ரப் சதுக்கம் மற்றும் நிந்தவூர் பிரதேச சபையைச் சுற்றியுள்ள வளாகங்களில் சிலரால் தொடர்ச்சியாக அநாமதேயமாக குப்பைகள் மற்றும் கழிவுப்பொருட்கள் கொட்டப்பட்டு வருவதாக நிந்தவூர் பிரதேச சபை தெரிவித்துள்ளது. இவ்விடங்களில் குப்பைகள் கொட்ட வேண்டாம் என பலமுறை அறிவுறுத்தப்பட்ட போதிலும், சில தனிநபர்களால் தொடர்ந்து இச்செயற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் சுற்றுச்சூழல் கடுமையாக மாசுபடுவதுடன், பொதுச் சுகாதாரத்திற்கும், பிரதேசத்தின் அழகுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருவதாக சபை சுட்டிக்காட்டியுள்ளது. இதனைக் கருத்திற் கொண்டு, […]

ஹோர்முஸ் நீரிணை திறந்தே இருக்கிறது, ஈரான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அது தொடர்ந்து திறந்திருக்கும் – டிரம்ப்

ஈரானிய துறைமுகங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த கடற்படைத் தடைகளை மீண்டும் அமுல்படுத்துவதற்கு அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) சமூக ஊடக கணக்கில் பதிவொன்றை இட்டு அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். அதிபர் டிரம்ப் இட்டுள்ள முழுமையான பதிவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது: “ஹோர்முஸ் நீரிணை திறந்தே இருக்கிறது, ஈரான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அது தொடர்ந்து திறந்திருக்கும். நாம் ‘ஈரானிய கடற்படைத் தடையை’ மீண்டும் அமுல்படுத்துகிறோம். ஈரான் […]

விபத்தில் பாடசாலை ஆசிரியர் பலி

இப்பலோகம – கலாவெ வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதிகாலை கலாவெ பகுதியிலிருந்து இப்பலோகம நோக்கி இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரத்துடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றைய நபர் காயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 29 வயதுடைய பாடசாலை ஆசிரியர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் […]

அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் தரமான பொதுப் போக்குவரத்துத் துறையை உருவாக்க வேண்டும்

அனைவருக்கும் பயனளிக்கும் வகையில், தரமான மற்றும் வசதிகள் கொண்ட பொதுப் போக்குவரத்துத் துறையை உருவாக்க வேண்டும் என்றும், இதன் மூலம் பொதுமக்கள் போக்குவரத்திற்காக தனிப்பட்ட ரீதியில் செலவிடும் சுமையைக் குறைத்து, நாட்டிற்குள் தரமான போக்குவரத்துச் சேவையை உறுதிப்படுத்த முடியும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இலவச சுகாதாரச் சேவையின் மேம்பாட்டிற்கு வழங்கப்படும் அதே அவதானத்தை, பொதுப் போக்குவரத்துச் சேவையின் முன்னேற்றத்திற்காகவும் செலுத்துவதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்குத் […]

‘ZOOM’ மூலம் கைதிகளின் நீதிமன்ற விசாரணைகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளுக்கான நீதிமன்ற நடவடிக்கைகள், நீதிமன்றத்தின் தேவைக்கேற்ப ‘ZOOM’ தொழில்நுட்பம் ஊடாக நிகழ்நிலையில் முன்னெடுக்கப்பட உள்ளதாக சிறைச்சாலை ஆணையாளரும் ஊடகப்பேச்சாளருமான ஏ.சி. கஜசாயக்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நீதிமன்ற விசாரணைகளை இவ்வாறு நிகழ்நிலையில் நடத்துவதற்கு உரிய நீதிமன்றங்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றங்களின் உத்தரவுக்கமைய திங்கட்கிழமை (14) முதல் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கு தடுப்புக்காவலில் […]

இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுகள் அதிகரிப்பு

இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுகள் அதிகரித்து வருவதாகவும், கொழும்பு மற்றும் கம்பஹாவில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் சமூக மருத்துவ ஆலோசகர் டாக்டர் சத்யா ஹெரத் தெரிவித்துள்ளார். இன்று(13.07.2026) சுகாதார அமைச்சகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் எச்.ஐ.வி பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. பெண்களை விட இந்த தொற்றால் அதிகமாக ஆண்களே பாதிக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற பாலியல் […]

வைரஸ் பரவல் மிக வேகமாக அதிகரிப்பு

தற்போது கொங்கோவில் வடகிழக்குப் பகுதியில் உள்ள ‘ஹாட்-உலே’ மற்றும் ‘சோபோ’ ஆகிய மேலும் இரண்டு மாகாணங்களுக்கும் வேகமாகப் பரவியுள்ளதாக அந்நாட்டு பொது சுகாதார நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. கொங்கோவில் பதிவாகியுள்ள எபோலாவின் 17ஆவது அலை இதுவாகும். தற்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும் எபோலா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,926 ஆக உயர்ந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 702 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்ட மனிதர்கள் அல்லது விலங்குகளின் உடல் திரவங்கள் மூலமாக நேரடியாகப் பரவும் இந்த எபோலா வைரஸ், […]

சிறைச்சாலை மோதல்: மேலும் இரு காவலர்கள் உயிரிழப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை மோதலில் காயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறைச்சாலைக் காவலர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்த மோதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு சிறைக்காவலர்கள் நேற்று (13) திங்கட்கிழமை மற்றும் இன்று (14) செவ்வாய்க்கிழமை அதிகாலை வேளையில் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த […]