நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் : ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் – உதய கம்மன்பில வலியுறுத்தல்
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பில் ஆராய்வதற்கு பூரண அதிகாரமிக்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும். குற்றச்சாட்டுக்குள்ளாக்கப்பட்டுள்ள நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவை பதவியில் வைத்துக்கொண்டு சுயாதீன விசாரணைகளை எதிர்பார்க்க முடியாது என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, கேப்டன் இல்லாத கப்பல் போன்றே சகல சிறைச்சாலைகளும் இன்று நிர்வகிக்கப்படுகின்றன. ஜனாதிபதி […]
முகநூல் நேரலையின் போது தற்கொவை

கரந்தெனிய, தல்காவத்தை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவர், தனது முகநூல் நேரலையின் (Facebook livestream) போது தன்னுயிரை மாய்த்துக் செய்துகொண்ட சம்பவம் தொடர்பில் கரந்தெனியப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்தவர் தினேஷ் விஜேவர்தன என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் அண்மையில் பல ஆண்டுகள் தென் கொரியாவில் பணிபுரிந்துவிட்டு இலங்கை திரும்பியிருந்தார். பொலிஸாரின் தகவல்படி, இச்சம்பவம் ஜூலை 12 ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது. அந்த நபர் முகநூல் நேரலையில் நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த போதே, தற்கொலை […]
வலி.வடக்கில் விவசாயத்தில் ஈடுபடும் இராணுவத்தினர்

யாழ்ப்பாணம் வலி.வடக்கில் உயர் பாதுகாப்பு வலயமாக இராணுவத்தினரால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் இராணுவத்தினர் மரக்கறிகளை யாழ்ப்பாணத்தில் சந்தைப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் நாடாளுமன்றில் உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சின் பிரதி அமைச்சர் வலி.வடக்கில் இராணுவத்தினரால் உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள காணிகளில் 1661 ஏக்கர் காணி இராணுவத்தினருக்கு தேவை எனவும் அவற்றுக்கான இழப்பீட்டை காணி உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் , வலி. வடக்கில் இராணுவத்தினர் விவசாய நடவடிக்கைகளில் […]
சட்டவிரோத சுருக்குவலையுடன் ஒருவர் கைது!
யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் உழவு இயந்திரத்தில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்ட சட்டவிரோத சுருக்குவலையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோத கடற்றொழில் அதிகரித்துள்ளதால் அதனை தடுக்கும் முயற்சியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் மற்றும் மருதங்கேணி பொலிசார் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று இரவு கட்டைக்காட்டில் தொடர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட போது உழவு இயந்திரத்தில் கடற்கரை பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்ட சுருக்குவலையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் உடமைகளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக […]
காணாமற் போன மாணவன் சடலமாக மீட்பு

லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் 10-இல் கல்வி கற்கும் 10 மாணவர்கள், மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தினால் திங்கட்கிழமை (13) அன்று நடத்தப்பட்ட பரீட்சையை எழுதிவிட்டு, மதியம் 12:30 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். வழியில் அவர்கள் அருகிலுள்ள ஆக்ரா ஓயா ஆற்றுக்கு நீராடச் சென்றுள்ளனர். ஆற்றில் நீராடிக்கொண்டிருந்தபோது ஒன்பது மாணவர்கள் கரை திரும்பிய போதிலும், ஒரு மாணவர் மட்டும் கரை திரும்பவில்லை. இவ்வாறு காணாமல் போன மாணவர், மிளகுசேனை (பியபீல்ட்) தோட்டத்தைச் […]
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட 5,386 ’சாம்பூ’ பக்கெட்டுகள்

இலங்கை கடற்படையின் வடமத்திய கடற்படைக் கட்டளைக்குச் சொந்தமான ‘இலங்கை கடற்படைக் கப்பல் தம்மென்னா’ (SLNS Thammanna) பிரிவினரால், தலைமன்னார், ஊருமலை கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் பெருந்தொகையான ‘சாம்பூ’ (Shampoo) பக்கெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. குறித்த கடற்படைப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, திங்கட்கிழமை (13) அன்று இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, குறித்த கடற்கரைப் பகுதியில் ஒதுங்கியிருந்த நிலையில், சட்டவிரோதமாகக் கொண்டு […]
வழக்கு விசாரணைக்காக மனைவியுடன் நீதிமன்றுக்கு வந்த கணவன் உயிரிழப்பு
மனைவியின் வழக்கு விசாரணைக்காக அவருடன் மத்துகம நீதவான் நீதிமன்றத்திற்கு வந்த 51 வயதுடைய கணவர் ஒருவர், நீதிமன்ற வளாகத்திற்குள் திடீரென நோய்வாய்ப்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக மத்துகம தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர், நயபட அரப்பலகந்தவத்தை பகுதியைச் சேர்ந்த மாடசாமி சந்திர மோகன் என்ற ஒரு பிள்ளையின் தந்தை ஆவார். தனது மனைவியின் பெயரில் இருந்த வழக்கு விசாரணைக்காக, அவருடன் மத்துகம நீதவான் நீதிமன்றத்திற்கு வந்திருந்த அவர், நீதிமன்ற வளாகத்தில் அமர்ந்திருந்த போதே திடீரென மயங்கி […]
ஆசிரியரால் விசேட தேவையுடைய மாணவன் தாக்கப்பட்டார்?

மொனராகலை, கும்புக்கன பகுதியில் அமைந்துள்ள ‘சுபாக்யா’ விசேட தேவையுடைய பாடசாலையில், ஆசிரியர் ஒருவரால் மாணவன் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் குறித்து மொனராகலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சியம்பலாண்டுவ பகுதியை சேர்ந்த 16 வயதுடைய டி.எம். சஹான் என்ற மாணவனே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். குறித்த பாடசாலையில் தங்கி பயின்று வந்த இந்த மாணவன், தாக்குதலுக்கு உள்ளானதை தொடர்ந்து கடந்த 9ஆம் திகதி மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். […]
இலங்கை சிகரெட் வரி குறைப்பால் ரூ. 25 பில்லியனுக்கு அதிகமான வருமான இழப்பு

சிகரெட்டுகளின் சில்லறை விலையில் குறைந்தபட்சம் 75 சதவீதத்தை வரியாக விதிக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) பரிந்துரைக்கிறது. இலங்கை இறுதியாக 2018 ஆம் ஆண்டில் (74%) இந்த இலக்கை நெருங்கியது. ஆனால், அதன் பின்னர் அந்த இலக்கைத் தக்கவைக்கத் தவறியதுடன், 2025 ஆம் ஆண்டு முதல் வரிப் பங்கு 67 சதவீதமாகக் குறைந்துள்ளது. சிகரெட்டுகளுக்கான வரிகள் உலக சுகாதார அமைப்பின் தர நிர்ணயத்தை விடக் குறைவாக விதிக்கப்பட்டதன் காரணமாக, 2025 ஆம் ஆண்டு முதல் […]
கடன் அட்டை நிலுவைத் தொகை அதிகரிப்பு

இந்த ஆண்டு (2026) தொடக்கம் முதல் கடந்த ஏப்ரல் மாத இறுதி வரையான நான்கு மாத காலப்பகுதியில், இலங்கையில் கடன் அட்டைகளின் நிலுவைத் கடன் பொறுப்பு 10,313 மில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது. இதன்படி, இந்த ஆண்டு (2026) ஆரம்பத்தில் 189,706 மில்லியன் ரூபாவாக இருந்த நிலுவைத் கடன் பொறுப்பு, கடந்த ஏப்ரல் மாத இறுதி வரை 200,019 மில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.