மஹமோதரவில் புதிய சிறைச்சாலை

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம், காலி – மஹமோதர பகுதியில் புதிய சிறைச்சாலையொன்றை நிறுவுவதற்கு கட்டளையிடப்பட்டுள்ளது. (54 ஆம் அத்தியாயமான) சிறைச்சாலைகள் கட்டளைச்சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக இந்த கட்டளை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், “மஹமோதர” என்ற பெயரில் இந்த சிறைச்சாலை நிறுவப்படவுள்ளதுடன், இதன் அதிகாரப் பிரதேசம் முழு இலங்கையையும் உள்ளடக்கும் வகையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

யாழ் சிறைக்கு நீர்கொழும்பு சிறை கைதிகளில் 60 பேர் இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து, அங்கிருந்த கைதிகளில் 60 பேர் நேற்று(07) யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த இரு தினங்களாகக் கைதிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதல்களில் சிறைக் காவலர்கள் உட்பட 27 பேர் உயிரிழந்துள்ளதோடு, 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதன் காரணமாக, அங்குள்ள கைதிகளின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு நீர்கொழும்பு சிறையிலுள்ள கைதிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிறைச்சாலைகளுக்குப் பிரித்து அனுப்பப்பட்டு வருகின்றனர். இந்த அவசர இடமாற்ற நடவடிக்கையின் அடிப்படையிலேயே, பலத்த […]

நெல்லுக்கு நியாய விலை கோரி வீதியில் இறங்கிய விவசாயிகள்

அநுராதபுரம் கெகிராவாவில் நெல்லுக்கு நியாயமான விலை கோரி விவசாயிகள் வீதிகளில் இறங்கிப் போராடினர். பல்வேறு விவசாய அமைப்புகளைச் சேர்ந்த விவசாயப் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் 07ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பகல் கெக்கிராவ நகரில் மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று அரசாங்கத்திற்கு எதிராக இடம்பெற்றது. இதன்போது நெல்லுக்கு நியாயமான விலை வழங்குதல், விவசாயிகள் எதிர்கொள்ளும் பொருளாதாரச் சிரமங்களுக்கு உடனடித் தீர்வு காணுதல் மற்றும் விவசாயக் கொள்கைகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

மீண்டும் அதிகரித்த கச்சா எண்ணெய் விலை!

ஈரான் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்கள் காரணமாக உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 3 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இதன்படி, இன்று காலை 6.15 மணி நிலவரப்படி, WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 72.04 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளதுடன், இது 2.27 சதவீத வளர்ச்சியாகும். பிரெண்ட் (Brent) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.78 டொலர்கள் வரை அதிகரித்துள்ளதுடன், இது 2.18 சதவீத உயர்வாகப் பதிவாகியுள்ளது. அதேநேரம், […]

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: ஜூலை 6 சம்பவத்திற்குப் பின்னரே உதவி கோரப்பட்டது என பொலிஸ் தகவல்

முதலாவது வன்முறைச் சம்பவம் பதிவாகி ஒரு நாளுக்குப் பின்னர், கடந்த ஜூலை 6 ஆம் திகதி சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து உதவி கோரி எழுத்துப்பூர்வமான கோரிக்கை கிடைத்த பின்னரே தாம் நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் நுழைந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ‘அததெரண’வின் (Ada Derana) ‘பிக் ஃபோகஸ்’ (Big Focus) நிகழ்ச்சியில் ஊடகவியலாளர் கலிந்து கருணாரத்னவிடம் கருத்து வெளியிட்ட பொலிஸ் பிரதி அதிபர் (DIG) சந்தன கொடித்துவக்கு, ஜூலை 5 ஆம் திகதி பொலிஸார் சிறைச்சாலைக்கு வெளியில் தயார் நிலையில் (standby) […]

பயிர்ச்செய்கை பற்றிய ஆர்ப்பாட்டக்காரர்கள் எல்லோரும் விவசாயிகள் தானா?

அரசாங்கம் என்ற ரீதியில் விவசாயிகளதும் பொது மக்களதும் நலனுக்காக எடுக்கக்கூடிய அதிகபட்ச நடவடிக்கைகளை நாம் எடுத்து வருகின்றோம், இந்நிலையில் விவசாயிகளது ஆர்பாட்டங்களில் பங்குகொள்பவர்கள் அனைவரும் உண்மையிலேயே விவசாயிகள்தானா என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது என்று கண்டி மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண தெரிவித்தார். கண்டி, கண்ணொறுவாவில் அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, விவசாயிகளது ஆர்பாட்டங்களில் ஈடுபடும் சில நபர்களது முகங்கள், […]

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பதை விரைவுபடுத்தி, மீள்குடியேற்றத்திற்கு வழிவகுப்பதாக தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்- சாணக்கியன்

இலங்கையின் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து பதினேழு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெருமளவிலான சிவிலியன்களுக்குச் சொந்தமான தனியார் காணிகள் இன்னும் இராணுவத்தின் வசம் உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் இன்றைய தினம் (08) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பதை விரைவுபடுத்தி, மீள்குடியேற்றத்திற்கு வழிவகுப்பதாக தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கூறினார். பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதியின் தலைமையில் […]

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது மேற்கிந்திய தீவுகள்

சுற்றுலா இலங்கை அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சமநிலையில் முடிவடைந்ததை அடுத்து, தொடரை 1-0 என மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றியுள்ளது. இதன்படி, மேற்கிந்திய தீவுகள் அணி 2023 ஆம் ஆண்டிற்குப் பின்னர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரொன்றை வென்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்பதுடன், தொடரின் முதலாவது போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 217 ஓட்டங்களால் பெற்ற மாபெரும் வெற்றியே அவர்களின் இந்தத் தொடர் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது. இரண்டாவது […]

செந்தில் பாலாஜியை கைது செய்ய தீவிரம்: அண்டை மாநிலங்களுக்கு விரைந்த போலீசார்

சென்னை: த.வெ.க. ஆட்சியை கவிழ்க்க முயன்றதாக எழுந்த புகாரில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரரைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. எம்.எல்.ஏ. இளையராஜா அளித்த ரூ. 35 கோடி பேரம் குறித்த புகாரில், ஏற்கனவே 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் பின்னணியில் இருந்ததாகக் கருதப்படும் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். விசாரணைக்கு ஆஜராகாததால், அவர்களைக் கைது செய்ய தனிப்படை போலீசார் அண்டை […]

சம்பூர் படுகொலை; 36வது ஆண்டு நினைவேந்தல்!

மூதூர் கிழக்கு , சம்பூர் படுகொலைச் சம்பவத்தின் 36வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சம்பூர் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக செவ்வாய்கிழமை (07) மாலை இடம்பெற்றது. இந்த நிகழ்வு சம்பூர் படுகொலைச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதன் போது சம்பூர் படுகொலைச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக தீபச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்தோடு ஒரு நிமிட மௌன பிரார்த்தனையும் இடம்பெற்றது. நிகழ்வில் சம்பூர் படுகொலைச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். […]