சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனுவில் தம்மையும் இணைத்துக்கொள்ளக் கோரி பல தரப்பினர் மனு

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் (SIS) பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, தனது கைது மற்றும் தடுப்புக்காவலின் சட்டப்பூர்வ தன்மையைக் கேள்விக்குட்படுத்தி தாக்கல் செய்துள்ள ரிட் (writ) மனுவில் தம்மையும் ஒரு தரப்பாக இணைத்துக்கொள்வதற்கு அனுமதி கோரி, முக்கிய பௌத்த துறவிகள் உள்ளிட்ட பல தனிநபர்களும் அமைப்புகளும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இந்த இடைபுகுதல் மனுக்கள் (intervention petitions) கலாநிதி குணதாச அமரசேகர, வணக்கத்திற்குரிய பெங்கமுவே நாலக தேரர், வணக்கத்திற்குரிய தாபன சுமனவங்ஷ தேரர், […]
பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு: மார்க்கம் நகர உளவியலாளர் கைது

இளைஞர் ஒருவருடன் தொடர்புடைய பாலியல் வன்கொடுமை (sexual assault) சம்பவம் குறித்து, மார்க்கம் (Markham) நகரத்தைச் சேர்ந்த 61 வயது உளவியலாளர் (psychologist) ஒருவர் மீது யோர்க் பிராந்திய பொலிஸார் (York Regional Police) குற்றம் சுமத்தியுள்ளனர். மார்க்கம் நகரின் ஜான் ஸ்ட்ரீட் (John Street) மற்றும் பேவியூ அவென்யூ (Bayview Avenue) அருகிலுள்ள கிளினிக் ஒன்றில், கடந்த ஜூன் 29 அன்று மேற்கொள்ளப்பட்ட ஒரு மருத்துவ ஆலோசனையின் (appointment) போது இச்சம்பவம் நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். […]
பூங்காக்களில் அரங்கேறிய ஆபாசச் செயல்கள்: சந்தேக நபரைக் தேடும் செஸ்டர்மியர் RCMP பொலிஸார்

இரண்டு உள்ளூர் பூங்காக்களில் ஆபாசமான அல்லது ஒழுங்கீனமான செயல்கள் (indecent acts) நடந்ததாகப் பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து, சந்தேக நபர் ஒருவரை அடையாளம் காண்பதற்கு செஸ்டர்மியர் (Chestermere) RCMP பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர். இந்தச் சம்பவங்கள் ஜூன் 3 அன்று ‘ஸ்டீவ் கிங் மெமோரியல் டாக் பார்க்’ (Steve King Memorial Dog Park) அருகிலும், ஜூன் 19 அன்று ‘அனிவர்சரி பார்க்’ (Anniversary Park) அருகிலும் நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த இரண்டு சம்பவங்களின் […]
நீர்கொழும்பு சிறைக்கலவரம்; தமிழ் கைதிகளை படுகொலைசெய்வதற்காகவே அரசின் துணையோடு இடம்பெற்ற சிறைக் கலவரங்களிலிருந்து வேறுபடுகிறது!

கடந்தகாலங்களில் தமிழ் அரசியல் கைதிகளை படுகொலைசெய்வதற்காக அரசே முன்னின்று அரசே திட்டமிட்டு முன்னகர்த்தி, அரசே துணைநின்று அரங்கேற்றிய வெலிக்கடைச் சிறைக்கலவரம், பிந்துனுவேவா புனர்வாழ்வு முகாம் கலவரம், களுத்துறைக் கலவரம் என்பவற்றிலிருந்து அண்மையில் இடம்பெற்ற நீர்கொழும்பு சிறைக் கலவரம் வேறுபடுவதாக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக் காட்டியுள்ளார். அத்தோடு வெலிக்கடையிலும் பிந்துனுவேவாவிலும் களுத்துறையிலும் தமிழர்கள் என்ற நிலையில், கிட்டாத நீதி நீர்கொழும்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிட்டட்டும் எனவுந் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் 08.07.2026இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். […]
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் : பிரிவினைவாதத்தைத் தோற்கடிக்க ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களும் ஒன்றிணைய அழைப்பு!

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் ஒற்றையாட்சிக்கும் அச்சுறுத்தலாக அமையும் வகையில் மீண்டும் தலைதூக்க முனையும் பிரிவினைவாதக் கருத்தியல்களையும் அதற்குத் தூண்டுதல் அளிக்கும் சக்திகளையும் தோற்கடிப்பதற்கு, இனம், மதம், கட்சி பேதங்களைக் கடந்து ஒட்டுமொத்த ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என இராணுவ வீரர்களின் பெருஞ்சுவர் அமைப்பின் அழைப்பாளர் பந்துல அத்துகோரல அழைப்பு விடுத்துள்ளார். இராணுவ வீரர்களின் பெருஞ்சுவர் அமைப்பின் காரியாலயத்தில் இன்று (8) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். […]
சுயேச்சை குழு அர்ச்சுனா எம் பியின் இருக்கையை மாற்றுங்கள்.. சபாநாயகரிடம் கயேந்திரகுமார் எம்பி எழுத்து மூலம் கோரிக்கை

நாடாளுமன்றத்தில் அர்சுனா இராமநாதனின் இருக்கையை மாற்றுவதற்றுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபாநாயகரை எழுத்து மூலம் கோரியுள்ளார். குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாவது உங்களுக்குத் தெரிந்தபடி, பாராளுமன்றத்தில் எனக்கு இடதுபுறம் அமர்ந்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அர்சுனா இராமநாதன், மாவட்ட அபிவிருத்தி கூட்டங்களிலும் சமூக ஊடகங்களிலும் பொதுவெளியில் என்னைத் தொடர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டியும், வன்முறை அச்சுறுத்தல் விடுத்தும், இழிவான சொற்களைப் பயன்படுத்தியும் வருகிறார். சமீப காலமாக இந்த நடத்தை எந்த அளவிற்கு மோசமடைந்துள்ளது என்றால், அது என் […]
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் : சிகிச்சை பலனின்றி மற்றுமொரு அதிகாரி உயிரிழப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இடம்பெற்ற கொடூர மோதல் சம்பவத்தின் போது படுகாயமடைந்திருந்த மற்றுமொரு சிறைச்சாலை அதிகாரி இன்று (08) புதன்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார். அதன்படி, குறித்த மோதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளதோடு, இதுவரை 8 சிறைச்சாலை அதிகாரிகளும், 20 கைதிகளும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட இந்த […]
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து இன்று 68 கைதிகள் குருவிட்ட சிறைச்சாலைக்கு இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து இன்று புதன்கிழமை 68 கைதிகள் குருவிட்ட சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இவர்கள் சிறைச்சாலை பஸ்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அழைத்து செல்லப்பட்ட நிலையில், இன்றைய தினம் சிறைச்சாலைக்கு அண்மித்ததாக வீதி ஓரத்தில் கைதிகளின் உறவினர்கள் திரண்டிருந்தனர். இடமாற்றம் செய்யப்பட்டவர்களுடைய பெயர் பட்டியலை பொலிசார் உறவினர்களுக்கு தெரிவித்தனர். நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு அருகில் எவரும் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை என பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ரணில், சமன் ஏக்கநாயக்கவுக்கு எதிரான வழக்கு செப்டம்பர் 30 வரை ஒத்திவைப்பு

சுமார் ரூ.1.66 பில்லியனுக்கும் அதிகமான அரச நிதியை தவறாக பயன்படுத்தி, பிரித்தானியாவுக்கு தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (08) புதன்கிழமை கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, பிரதிவாதிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் தொடர்பாக சட்டமா […]
ஆட்சி அதிகாரம் பறிபோனதில் இருந்தே தீயசக்தி திமுகவிற்கு துக்கம் தொண்டையை அடைக்கிறது – தவெக விமர்சனம்

சென்னை: தவெக ஐடி விங் தி.மு.க. மீது கடும் தாக்குதலைத் தொடுத்துள்ளது. ஊழல் மற்றும் கொள்ளையடிக்கவே அதிகாரம் தேவை என்று கருதும் தி.மு.க., ஆட்சியை இழந்த துக்கத்தில் தவெக அரசுக்கு எதிராகத் தொடர்ந்து சதி செய்து வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளது. நீதிமன்றத்தில் தி.மு.க. தொடுத்த வழக்குகள் தோல்வியடைந்ததைச் சுட்டிக்காட்டி, தி.மு.க.-வின் அரசியல் முடிவு நெருங்கிவிட்டது என்று தவெக ஐடி விங் எச்சரித்துள்ளது. தவெக அரசின் மக்கள் நலன் சார்ந்த செயல்பாடுகளைக் கண்டு பொறுக்க முடியாமல் தி.மு.க. ஆட்டம் […]