போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு – மக்களோடு மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் விஜய்

சென்னை: சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் கலந்துகொண்டார். ‘Start Run, Stop Drugs’ என்ற முழக்கத்துடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுடன் இணைந்து முதலமைச்சர் மெரினா கடற்கரை சாலையில் ஓடினார். அவர் ஓடியவாறே பொதுமக்களுக்குத் தண்ணீர் வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதலே போதைப் பொருள் ஒழிப்பில் தீவிரமாகச் செயல்பட்டு வரும் அவர், மாவட்டந்தோறும் […]

இஸ்லாமிய மதத்திற்கு அவதூறு; ஞானசார தேரரின் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

இஸ்லாமிய மதத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, ஜூலை 31-ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி.ராகல இன்று (26) கடமை நிமித்தம் விடுமுறையில் இருந்ததனால், வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற […]

போர்க்கொடி தூக்கி பின்னர் சமாதானமான எஸ்.பி.வேலுமணி: மீண்டும் பதவி கொடுத்த இபிஎஸ்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியில் நிலவி வந்த கருத்து வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையை நிலைநாட்டும் வகையில் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோருக்கு மீண்டும் கட்சிப் பொறுப்புகளை வழங்கியுள்ளார். எஸ்.பி. வேலுமணி மற்றும் நத்தம் இரா. விசுவநாதன் ஆகியோரைத் துணைப் பொதுச்செயலாளர்களாக நியமித்ததன் மூலம், கட்சிக்குள் நிலவிய அதிகாரப் போட்டிக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மேலும், தங்கமணி, கே.பி. அன்பழகன், காமராஜ் உள்ளிட்ட மூத்த தலைவர்களை அமைப்புச் செயலாளர்களாக நியமித்து தனது கட்டுப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்தல் […]

மின்சார வலுசக்தியை நிலைப்படுத்த: மின் கட்டணத்தில் நிவாரணம்?

மின்சார வலுசக்தியை நிலைப்படுத்துவதற்கும் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்குவதற்குமாக அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட மின்கல சக்தி சேமிப்பு முறைமையின் கீழ், மேலும் ஏழு களஞ்சிய கட்டமைப்புகள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த ஏழு சக்தி சேமிப்பு களஞ்சிய கட்டமைப்புகளும் பாணந்துறை, பெலியத்த, ஹம்பாந்தோட்டை, அம்பாறை, வவுணதீவு, வாழைச்சேனை மற்றும் மஹியங்கனை ஆகிய பகுதிகளில் உள்ள மின்சாரப் பரிமாற்ற உப நிலையங்களுக்கு அருகில் நிறுவப்படவுள்ளன. இந்த ஏழு மின்கல சக்தி சேமிப்பு கட்டமைப்புகளையும் பயன்படுத்தி 280 மெகாவோட் (MW) மின்சாரத்தைச் சேமிக்க முடிவதுடன், […]

வெனிசுலா நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை மேலும் உயர்வு

வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களினால் குறைந்தது 188 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த அனர்த்தங்களினால் 1,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கராகஸ் (Caracas) மற்றும் லா குவைரா (La Guaira) மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது அங்குள்ள இடிபாடுகளுக்குள் மீட்புப் பணியாளர்கள் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் காயமடைந்தவர்களில் பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக அச்சம் […]

ஜெய்ப்பூர் நிறுவனம் தனது சேவைகளை முற்றிலும் இலவசமாக வழங்குவது எமது மக்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்- இந்நிறுவனம் தொடர்ந்தும் இயங்குவதற்கு கொடையுள்ளம் கொண்டவர்கள் தங்களின் உதவிகளை வழங்க முன்வர வேண்டும்- வடக்கு மாகாண  ஆளுநர்

அவயவங்களை இழந்த எமது மக்கள் முடங்கிப்போகாமல், அவர்களுக்கு நம்பிக்கையூட்டி, அவர்களின் வழமையான செயற்பாடுகளுக்கு உதவும் ஜெய்ப்பூர் நிறுவனம் தனது சேவைகளை முற்றிலும் இலவசமாக வழங்குவது எமது மக்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். இந்நிறுவனம் தொடர்ந்தும் இயங்குவதற்கு கொடையுள்ளம் கொண்டவர்கள் தங்களின் உதவிகளை வழங்க முன்வர வேண்டும், என வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன்  கோரிக்கை விடுத்தார். யாழ்ப்பாணம் ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிலையத்தின் புனரமைக்கப்பட்ட கட்டடத்தின் மீள்திறப்பு விழாவும், புதிய செயற்கைக் கால் தயாரிப்புத் திட்டத்தின் ஆரம்ப […]

அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு தர முன்வந்தது உண்மையெனில் அது அரசியல் மோசடி – வைகோ காட்டம்!

மதுரை: அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு அளிக்க முனைந்ததாகப் பேசப்படும் விவகாரம் குறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மதுரையில் செய்தியாளர்களிடம் கடும் கோபத்தை வெளிப்படுத்தினார். “இது உண்மையாக இருக்குமானால், அதைவிட அரசியல் மோசடி வேறொன்றும் இல்லை” என்று சாடிய அவர், மதிமுக தனது சுயமரியாதையை இழந்து பல ஆண்டுகளாக திமுக கூட்டணியில் இருந்ததை மறைமுகமாகச் சுட்டிக்காட்டினார். மேலும், 27-ஆம் தேதி நடைபெறவுள்ள கட்சியின் பொதுக்குழுவில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். விவசாயிகளின் போராட்டத்தைப் […]

பாதுகாப்புப் படைகள் பயன்படுத்தும் காணிகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் மீளாய்வு கூட்டம்!

யாழ்ப்பாணம் மற்றும் பலாலி பகுதிகளில் பாதுகாப்புப் படைகளின் பயன்பாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் காணிகள் தொடர்பான நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்யும் கூட்டம் பாராளுமன்ற குழு அறையில் நடைபெற்றது. காணி தொடர்பான விவகாரங்கள் குறித்த முந்தைய கலந்துரையாடல்களின் தொடர்ச்சியாக இடம்பெற்ற இக்கூட்டத்திற்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் மற்றும் எரிசக்தி அமைச்சர்  அனுர கருணாதிலக்க, மீன்வளம், நீர்வாழ் மற்றும் கடல் வளங்கள் […]

https://www.tamiljobmarket.com/15218/

பொது பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும் ஜூலை 31ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் தலைமை நீதிபதியான கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல இன்று (25) வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வ விடுமுறையில் இருந்தமையினால், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் இந்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதிபதி, […]

அதிக மிரட்டல்கள் வருகின்றன; போலீஸ் பாதுகாப்பு வேண்டும்: நீதிமன்றத்தை நாடிய சி.வி.சண்முகம்

சென்னை: அதிமுக உட்கட்சி விவகாரங்களுக்குப் பிறகு தனது உயிருக்கு மிரட்டல் இருப்பதாகக் கூறி, சி.வி. சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் போலீஸ் பாதுகாப்பு கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். 2006-ஆம் ஆண்டு நடந்த தாக்குதலில் தனது குடும்பத்தினர் உயிரிழந்ததையும், அச்சுறுத்தல்கள் காரணமாக தனக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு 2021-ல் விலக்கப்பட்டதையும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டிற்குப் பிறகு, தனக்குத் தொடர் மிரட்டல்கள் வருவதாகவும், இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் […]