கிரிஷ் விவகாரம்: நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கில் இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை விடுக்க மேல் நீதிமன்றம் உத்தரவு!

இலங்கையில் ரக்பி விளையாட்டை மேம்படுத்துவதாகக் கூறி, இந்தியாவின் ‘கிரிஷ் லங்கா’ (Krrish Lanka) நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாயைப் பெற்றுக்கொண்டு, அதனைத் தவறாகப் பயன்படுத்தியதாக (பணச் சலவை மற்றும் நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டு) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை வரும் ஜூலை 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், இன்று (25) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இவ்வழக்கு மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, இந்த […]
சாவகச்சேரியில் நாளை முழு கடையடைப்புப் போராட்டம்!

யாழ்ப்பாணம், தென்மராட்சிப் பிராந்தியத்தில் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் ஞா. கிசோரின் (Gnanasundaram Kishor) பதவி நீக்கத்திற்கு எதிராகவும், ஆளுநரின் வர்த்தமானி அறிவித்தலுக்குக் கண்டனம் தெரிவித்தும், நாளை வெள்ளிக்கிழமை சாவகச்சேரி நகரில் முழுமையான கடையடைப்புப் போராட்டத்திற்கு (Hartal) வர்த்தகர்கள் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளனா். நாளை (2026 ஜூன் 26, வெள்ளிக்கிழமை) அதிகாலை முதல் சாவகச்சேரி நகர சபை எல்லைக்குட்பட்ட அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடி இந்த அறப்போராட்டத்தை முன்னெடுக்க வர்த்தகச் […]
மத்திய குற்றவியல் விசாரணைப் பணியகத்தில் ரோஹித ராஜபக்ஷ முன்னிலையானார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனான ரோஹித ராஜபக்ஷ, வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காக சற்றுமுன்னர் காவற்துறையின் மத்திய குற்றவியல் விசாரணைப் பணியகத்திற்கு (CCIB) சமூகமளித்துள்ளார். குறித்த பணியகத்தினால் நீண்டநாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிதி மற்றும் சொத்துக் குவிப்பு தொடர்பான விசேட விசாரணை ஒன்றிற்கு அமைவாகவே, வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அங்கு அழைக்கப்பட்டு முன்னிலையாகியுள்ளார். இவரிடம் தற்போது அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காவற்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் கிசோரின் பதவி பறிப்பு – இளங்குமரன் கண்டனம்

சாவகச்சேரி நகரசபை உப தவிசாளரின் பதவி பறிக்கப்பட்டு, உறுப்பினர் பதவியும் வறிதாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் கண்டனம் தெரிவித்துள்ளார். சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் ஞா.கிசோர், உள்ளூராட்சி ஆணையாளரால் விடப்பட்ட சுற்றறிக்கையை சபையில் விமர்சித்து, அதனை தூக்கி வீசியமை தொடர்பிலான குற்றச்சாட்டில் பதவி பறிக்கப்பட்டு, உறுப்பினர் பதவியையும் வறிதாக்கி, வட மாகாண ஆளுநர் வர்த்தமானி ஊடாக அறிவித்துள்ளார். இந்நிலையில் “ஒருவரின் கருத்துச் சுதந்திரத்தை வெளிப்படுத்தியதற்காக அவரின் பதவியைப் பறிப்பது ஜனநாயகக் கொள்கைகளுக்கு முற்றிலும் முரணானதும் […]
போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளை குறிவைத்து பேசுவது குறித்து அரசை நாமல் சாடல்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை குறிவைத்து அரசு கருத்து வெளியிடுவது கண்டிக்கத்தக்கது எனவும், விவசாயிகளுக்கு ஆதரவு வழங்கத் தவறிய பின்னர் அவர்களையே இழிவுபடுத்த முயற்சிப்பது வெட்கக்கேடானது எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனையின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், உர விநியோக தாமதம், விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யத் தவறுதல், அறுவடை காலத்திலேயே அரிசி இறக்குமதி செய்தல் உள்ளிட்ட பல விடயங்களில் அரசு விவசாயிகளை ஏமாற்றியுள்ளதாக குற்றஞ்சாட்டினார். விவசாயிகளின் செலவுகள் […]
பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) இந்த வருடத்திற்குள் நீக்கப்படும்: நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி அநுர அறிவிப்பு!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) இந்த வருடத்திற்குள் (2026) முழுமையாக நீக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று (ஜூன் 25) திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இந்த முக்கிய அறிவிப்பை விடுத்தார். மாற்றமடைந்து வரும் சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சட்டத் தேவைகளுக்கு அமைய, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். சர்வதேச அளவில் தப்பியோடிய குற்றவாளிகளைக் […]
ஊழல், போதைப்பொருள் மற்றும் அரசியல் பிணைப்பை ஒழிக்கப் போர்க்கால நடவடிக்கை: நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி அநுர அதிரடி உரை!

கொழும்பு ஊழல், திட்டமிட்ட பாதாள உலகக் குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றங்களுக்கும் அரசியலுக்கும் இடையே நிலவும் இரகசியப் பிணைப்புகள் (Crime-Politics Nexus) ஆகியவை தீர்க்கமாக முறியடிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று (ஜூன் 25) திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இந்த அதிரடி கருத்துக்களை வெளியிட்டார். இவ்வாறான குற்றச் செயல்களை ஒடுக்குவதற்குத் தேவையான சட்டக் […]
கைதானவர்கள் குறித்த மேலும் பல திடுக்கிடும் விபரங்கள் இன்று வெளியாகும்: நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று (ஜூன் 25) கைது செய்யப்பட்டுள்ள முக்கிய பிரமுகர்கள் தொடர்பான மேலும் பல அதிர்ச்சியூட்டும் விபரங்கள் இன்றைய தினத்திற்குள் பகிரங்கப்படுத்தப்படும் என ஜனாதிபதி அநுர குмара திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகன் ரகித ராஜபக்ஷ மற்றும் சஜித் தரப்பின் ஹொரண தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இந்த விபரத்தை வெளியிட்டார். எதிர்க்கட்சிகளுக்கு […]
சிறைச்சாலைகளில் 184 மரணங்கள்: இலங்கைக்கு வந்துள்ள ஐநா குழுவிடம் கைதிகள் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு அதிர்ச்சி அறிக்கை

இலங்கைச் சிறைச்சாலைகளில் இடம்பெற்று வரும் கைதிகளின் மரணங்கள், சிறைச்சாலைகளின் அதிகளவிலான நெருக்கடி நிலை, சித்திரவதைகள் மற்றும் தடுப்புக்காவல் கூடங்களின் மோசமான நிலவரங்கள் குறித்து இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் (UN) விசேட தூதுக்குழுவிடம் ‘கைதிகள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு’ (CPRP) உத்தியோகபூர்வமாக முறையிட்டுள்ளது. சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகளின் துணைக் குழு (SPT) கடந்த ஜூன் 15 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை இலங்கையில் மேற்கொண்ட 10 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தின் […]
வலிகாமம் வடக்கு: மக்களின் சொந்தக் காணியில் இராணுவப் பண்ணை பெயர்ப்பலகை! ஆக்கிரமிப்பை நிரந்தரமாக்க முயற்சி என மக்கள் கவலை

வலிகாமம் வடக்கு அதிஉயர் பாதுகாப்பு வலயத்திற்குள் (HSZ) அமைந்துள்ள, தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியாரின் விவசாயக் காணிகளில் இலங்கை இராணுவம் தனது உத்தியோகபூர்வ விவசாயப் பண்ணைக்கான புதிய பெயர்ப்பலகையை நாட்டியுள்ளது. தங்களின் சொந்த நிலங்களை மீண்டும் ஒப்படைக்குமாறு நில உரிமையாளர்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையிலேயே, இராணுவத்தின் இந்த நடவடிக்கை தங்களின் காணி ஆக்கிரமிப்பை மேலும் நிரந்தரமாக்கும் ஒரு நகர்வாக அமையுமோ என மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். வலிகாமம் வடக்கில் உள்ள பெருமளவிலான தனியார் காணிகள், […]