விஜய், உதயநிதி இரண்டு பேருடைய கருத்தும் தவறுதான் – சிபிஎம் சண்முகம்!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற வார்த்தைப் போர், மாநில அரசியல் சூழலைச் சூடாக்கியுள்ளது. சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினைச் சீண்டும் வகையில் விஜய் பேசியதும், அதற்கு உதயநிதி ஸ்டாலின் மிகத் தரக்குறைவாக பதிலளித்ததும் அவையின் மாண்பைக் குறைப்பதாக உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் விமர்சித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில் இருவரையும் […]

இலங்கை தேசிய கரப்பந்தாட்ட அணியில் மலையக இளைஞன் சிவகாந்தன்

லங்கை தேசிய கரப்பந்தாட்ட அணியில், கம்பஹா, உடப்புஸ்ஸல்லாவ கீழ் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த சந்திரபோஸ் சிவகாந்தன் இணைந்துகொண்டு, மலையக மண்ணுக்குப் பெருமை சேர்த்துள்ளார். கல்வி மற்றும் விளையாட்டுப் பயணம்: கம்பஹா தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 1 முதல் உயர்தரம் வரை கல்வி கற்ற சிவகாந்தன், சுமார் 15 ஆண்டுகளாக கரப்பந்தாட்ட விளையாட்டில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். 2021-ஆம் ஆண்டு முதல் இலங்கை விமானப்படை கரப்பந்தாட்ட அணியுடன் இணைந்துள்ள இவர், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக […]

ஜூலையில் ஈரானின் மறைந்த உயர் தலைவர் அலி காமேனியின் இறுதிச்சடங்கு!

ஈரானின் மறைந்த முன்னாள் உயர் தலைவர் அலி காமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் நாட்டின் ஜனாதிபதி மசூத் பெசஷ்கியானால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அலி காமேனியின் இறுதிச்சடங்கு நடைமுறைகள் எதிர்வரும் ஜூலை 4ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வடகிழக்கு ஈரானில் உள்ள மஷ்ஹாதில் நடைபெறவுள்ளன. கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் தெஹ்ரான் நகரில் நடத்திய கூட்டு வான்வழித் தாக்குதலில் […]

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்திற்கு பூட்டு

மன்னார், பள்ளிமுனை பிரதான வீதியில் இயங்கி வந்த உணவகம் ஒன்று, சுகாதார அதிகாரிகளின் திடீர் சோதனையைத் தொடர்ந்து நேற்று புதன்கிழமை தற்காலிகமாக மூடப்பட்டது. மன்னார் நகர சபை மற்றும் பொது சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பணிமனையின் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து மேற்கொண்ட இந்த ஆய்வில், குறித்த உணவகம் மிகவும் சுகாதாரமற்ற நிலையில் இயங்கி வந்தது கண்டறியப்பட்டது. கண்டறியப்பட்ட சுகாதாரக் குறைபாடுகள்: உணவு தயாரிக்கும் இடத்தில் அதிக ஈக்கள் மொய்த்தமை. கழிவுநீர் முறையாக வெளியேற்றப்படாமல் தேங்கி […]

அரசாங்க திறைசேரியின் 2.5மில்லியன் டொலர் மோசடியின் பின்னணியில் அரச ஆதரவாளர்

அரசாங்க திறைசேரியில் ஹேக் செய்யப்பட்டதாகக் கூறப்படும் 2.5 மில்லியன் டொலர், அரசாங்க ஆதரவாளர் ஒருவரின் அவுஸ்திரேலிய வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் தொலவத்த குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்டபோது அவர் மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், திறைசேரியில் காணாமல் போன 2.5 மில்லியன் டொலர்கள், உண்மையில் ஒரு ஹேக்கரால் திருடப்படவில்லை, மாறாக அவுஸ்திரேலியாவில் வசிக்கும் தற்போதைய அரசாங்கத்துடன் தொடர்புடைய ஒரு முகவரால் திருடப்பட்டுள்ளது. […]

கனடா: பிராம்ப்டனில் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு!

கனடாவின் ஒன்ராறியோ (Ontario) மாகாணத்தில் உள்ள பிராம்ப்டன் நகரின் குடியிருப்புப் பகுதி ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சிக்கி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பீல் பிராந்திய அவசர மருத்துவ உதவியாளர்கள் (Peel Paramedics) தெரிவித்துள்ளனர். நேற்று (ஜூன் 24) இரவு 11:00 மணியளவில், பிராம்ப்டனின் ‘ஹைவே 410’ (Highway 410) மற்றும் ‘வில்லியம்ஸ் பார்க்வே’ (Williams Parkway) சந்திப்பிற்கு அருகிலுள்ள ‘ரோயல் சாலிஸ்பரி வே’ (Royal Salisbury Way) பகுதியில் அமைந்துள்ள வீடு […]

தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – தமிழக அரசிற்கு திருமாவளவன் கோரிக்கை!

சென்னை: அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ குறித்து விசிக தலைவர் திருமாவளவன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் ரூ. 755 கோடி செலவிடுவதைக் காட்டிலும், அரசு மருத்துவமனைகளில் தனியார் மருத்துவமனைக்கு இணையான நவீன பிரசவ வார்டுகளை உருவாக்குவதும், கூடுதல் மருத்துவப் பணியாளர்களை நியமிப்பதுமே ஏழை எளிய மக்களுக்கு உண்மையான பயனைத் தரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஒரு சில மாதங்களில் குழந்தையின் […]

அதிமுக ஆட்சிக் காலத்தில் கட்சி நிதி வாங்கியது யார்? – அமைச்சர் செங்கோட்டையன் சவால்!

சென்னை: அதிமுக ஆட்சிக்காலத்தில் பள்ளி உரிமம் புதுப்பித்தலுக்கு நிதி வசூலிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், இதற்கான ஆதாரத்தை முன்வைக்க சவால் விடுத்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளி கூட்டமைப்புகளிடம் விசாரித்தால் உண்மை தெரியும் என்றும், தானாக உருவாக்கப்படும் இத்தகைய குற்றச்சாட்டுகளைப் புறக்கணிப்பதாகவும் தெரிவித்தார். முதலமைச்சரின் நேர்மையான செயல்பாடுகளைத் திமுகவினர் அரசியல் லாபத்திற்காக விமர்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். மேலும், தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் ஆளுநர் பதவி குறித்த சர்ச்சைகளுக்கு விளக்கமளித்த […]

மின்சார வாரியத்தின் மொத்த கடன் ரூ. 2.47 லட்சம் கோடி! – வெள்ளை அறிக்கை வெளியீடு!

சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியத்தின் (TANGEDCO) நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை எரிசக்தித் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் இன்று வெளியிட்டார். கடந்த 25 ஆண்டு கால நிதிநிலை, உள்கட்டமைப்பு மற்றும் செலவினங்களை உள்ளடக்கிய இந்த அறிக்கை, மின்வாரியம் எதிர்கொண்டுள்ள கடும் நிதி நெருக்கடியை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. மின்வாரியத்தின் தற்போதைய மொத்தக் கடன் ரூ. 2,47,130 கோடி என்றும், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ. 87,399 கோடி கடன் வாங்கப்பட்ட போதிலும் […]

திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன்

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு திரு.இரட்ணசிங்கம் இரவீந்திரன் அவர்கள் 24-06-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, இரட்ணசிங்கம்(தையிட்டி), செல்லம்மா(குரும்பசிட்டி) தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை கனகம்மா(அல்லைப்பிட்டி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,ரபீஷன், விதுர்ஷனா, ரக்‌ஷனா ஆகியோரின் அன்புத் தந்தையும் சுயன் பவானந்தராஜா அவர்களின் அன்பு மாமனாரும்,பவானந்தராஜா ஜெயசக்தி தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும் காலஞ்சென்ற விஜயசிறி மற்றும் சத்தியசிறி(றஞ்சி), ஜெயசிறி, சாந்தசிறி, பத்மசிறி, […]