இதுவரை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது மரபணு மாதிரிகள் சேகரிக்கப்படவில்லை – சட்டத்தரணி ரனித்தா

மரபணு தொடர்பான விடயத்தில், இதுவரை காலமும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகமோ அல்லது ஏனைய அரச நிறுவனங்களோ காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்களின் மரபணு மாதிரிகளைச் சேகரித்து, அதனைப் பாதுகாக்கும் செயற்பாடுகள் எதனையும் முன்னெடுக்கவில்லை என்று செம்மணி புதைகுழி வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பாக முன்னிலையாகும் சட்டத்தரணி ஞா. ரனித்தா தெரிவித்தார். செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்ந்து எடுக்கப்படும் மனித என்புத் தொகுதிகள் மீதான மரபணுப் பரிசோதனைகள் மற்றும் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் […]
மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டு: ஹாலிஃபாக்ஸ் நபருக்கு மாகாணம் தழுவிய பிடியாணை

மாகாணம் தழுவிய தற்காலிகப் பிடியாணை (Provincewide warrant) பிறப்பிக்கப்பட்டுள்ள 22 வயதுடைய ஹாலிஃபாக்ஸ் (Halifax) நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக் கண்டுபிடிப்பதற்கு அரச கனேடிய மவுண்டெட் போலீஸ் (RCMP) பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளது. டேமியன் அலெக்சாண்டர் ஜேம்ஸ் பிரவுன் (Damien Alexander James Brown) என்ற நபர் பின்வரும் குற்றச்சாட்டுகளுக்காகத் தேடப்பட்டு வருகிறார்: மிரட்டல் விடுத்தல் (Uttering Threats) பிணை உத்தரவை மீறுதல் (Failing to Comply With a Release Order) அதிகாரிகளின் விளக்கத்தின்படி, பிரவுன் […]
பியர்சன் தங்கக் கொள்ளை விவகாரம்: துப்பாக்கிக் கடத்தல் வழக்கில் பிராம்ப்டன் நபருக்கு அமெரிக்காவில் 13 ஆண்டுகள் சிறை

டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தின் (Toronto Pearson Airport) பெரும் தங்கக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட பிராம்ப்டன் நகரைச் சேர்ந்த ஒருவருக்கு, கனடாவிற்குள் சட்டவிரோதமாக துப்பாக்கிகளைக் கடத்த முயன்ற வழக்கில் அமெரிக்க நீதிமன்றம் 13 ஆண்டுகளுக்கும் அதிகமான சிறைத்தண்டனை விதித்துள்ளது. துராந்தே கிங்-மக்லீன் (Durante King-Mclean, 27) என்ற இந்த நபருக்கு, சட்டவிரோதமாக துப்பாக்கி வர்த்தகத்தில் ஈடுபட சதித் திட்டம் தீட்டிய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, பென்சில்வேனியா (Pennsylvania) நீதிமன்றம் 160 மாதங்கள் […]
யானை தாக்கி இளைஞன் உயிரிழப்பு; முல்லைத்தீவில் சம்பவம்

வயலுக்கு காவலுக்கு சென்ற இளைஞன் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் ஒன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு, குமுழமுனையை சேர்ந்த இளைஞன் ஒருவர் வயல் காவலுக்கு இத்திமடு கிராமத்தில் உள்ள வயல்பகுதிக்கு இரவு சென்ற நிலையில் இன்று அதிகாலை வயலுக்குள் புகுந்த காட்டுயானை தாக்கியதில் குறித்த இளைஞன் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் முல்லைத்தீவு குமுளமுனையை சேர்ந்த இளைஞரே உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்திற்கு எதிராக யாழில் வேலையற்ற பட்டத்தாரிகள் போராட்டம்?

வேலையற்ற பட்டதாரிகள் நாளை 25ஆம் திகதி வியாழக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்க செயலாளர் ஜேம்ஸ் கபிலன் போல் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று(23.06.2026) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் நடைபெற்ற ஆசிரியர் வேலைவாய்ப்பு போட்டி பரீட்சையில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். அத்துடன், வடமாகாணத்தில் பல வேலை வாய்ப்பு வெற்றிடங்கள் காணப்படும் நிலையில் […]
14 மாவட்டங்களுக்கு டெங்கு அபாய எச்சரிக்கை
இலங்கையில் வேகமாகப் பரவி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாட்டின் 14 மாவட்டங்களைச் சேர்ந்த 538 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அதி அபாய வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அதிஅபாயப் பிரிவுகளில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும், தடுப்பதற்கும் தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, மேல் மாகாணமே டெங்கு நோயினால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலேயே அதிகளவிலான அதிஅபாயக் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. […]
முன்னாள் அமைச்சர் சிறைச்சாலை அலுவலகங்களை சுத்தம் செய்கிறார்!

வெலிக்கடை சிறைச்சாலையின் அலுவலங்களை சுத்தம் செய்யும் பணியில் முன்னாள் அமைச்சர் சரண குணவர்தன ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறைச்சாலை வட்டாரத் தகவல்களை மேற்கோள்காட்டி தெற்கு ஊடகமொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. சிறைச்சாலையின் நூலகம், ஆவண காப்பகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சரண குணவர்தனவிற்கு கடந்த 9ம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றம் 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்தது. லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் […]
யோஷித ராஜபக்சவின் கல்வித் தகைமைகளில் முறைகேடு?

இலங்கை கடற்படையின் 45 ஆவது கடற்படை மாணவர் (Cadet) குழுவின் ஆட்சேர்ப்பிற்கான அடிப்படைத் தகைமைகளில் ஒன்றான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிங்களப் பாடத்திற்கு சிறப்பு (C) சித்தியை யோஷித ராஜபக்ச பெற்றிருக்கவில்லை. மேலும் அவரது கல்விச் சான்றிதழ்கள் அடங்கிய ஆவணங்கள் அவரது தனிப்பட்ட கோப்பிலிருந்து (Personal File) திட்டமிட்ட முறையில் காணாமல் ஆக்கப்பட்டிருந்ததாக விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. 2015 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் நியமிக்கப்பட்ட விசேட கடற்படை விசாரணை குழுவின் தலைவர்: […]
கனடாவில் கடமையின் போது காவல்துறை அதிகாரிகள் அதிகளவில் கொல்லப்படுகிறார்கள்?

கடந்த இரண்டு வாரங்களுக்குள் கனடாவில் கடமையின் போது அதிகாரி ஒருவர் கொல்லப்படுவது இது மூன்றாவது முறையாகும். திங்கட்கிழமையன்று, மொன்றியலின் (Montreal) மக்கள் நடமாட்டம் மிகுந்த கோட்-டெஸ்-நெய்ஜஸ் (Côte-des-Neiges) பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் ஏற்பட்ட ஆயுதமேந்திய முற்றுகை மற்றும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதி முற்றாக முடக்கப்பட்டது. இச்சம்பவத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர், பொதுமக்கள் தரப்பில் ஒருவர் மற்றும் சந்தேக நபர் என மூவர் உயிரிழந்தனர். மேலும் ஒரு அதிகாரியும், வழிப்போக்கர் ஒருவரும் காயமடைந்தனர். இந்தத் […]