தேர்தல்கள் தொடர்பான சட்டங்கள் மீளாய்வு யோசனைகள்

தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை மீளாய்வு செய்து பாராளுமன்றத்துக்கு அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள பராாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு முன்மொழிவுகளை சமர்ப்பிக்க அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனம் ஆரம்பகட்ட கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளது. பத்தாவது பாராளுமன்றத்திற்கான “தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு செய்து, பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகள் மற்றும் விதப்புரைகளை சமர்ப்பிப்பதற்காக, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கமைவான பாராளுமன்ற விசேட குழுவிற்கு பொது மக்களின் முன்மொழிவுகள் மற்றும் கருத்துக்கள் கோரப்பட்டிருக்கின்றன. […]
லக்ஷ்மன் யாப்பா உள்ளிட்ட இருவருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன உள்ளிட்ட இரு பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (22) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, வழக்கின் சாட்சியாளர்களிடம் சாட்சிப்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, மேலதிக விசாரணைகளை எதிர்வரும் ஜூலை மாதம் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதியரசர் ரஷாந்த கொடவெல உத்தரவிட்டார். கடந்த 2014 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது […]
மொண்ட்ரியல் துப்பாக்கிச் சூடு: பொலிஸ் அதிகாரி, பொதுமக்கள் உட்பட மூவர் உயிரிழப்பு; துப்பாக்கிதாரியும் மரணம்

கனடாவின் மொண்ட்ரியல் (Montreal) நகரின் கோட்-டெஸ்-நெய்ஜஸ் (Côte-des-Neiges) பகுதியில் திங்கட்கிழமை நிகழ்ந்த பயங்கர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் மற்றும் பொதுமக்கள் ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். தாக்குதல் நடத்திய துப்பாக்கிதாரியும் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். திங்கட்கிழமை முற்பகல் 11:35 மணியளவில் கோர்ட்ராய் மற்றும் டிரான்ஸ் ஐலாண்ட் அவென்யூ சந்திப்பிற்கு அருகில் இந்த துப்பாக்கிச் சூடு ஆரம்பமாகியுள்ளது. உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகள் பொலிஸ் அதிகாரி மரணம்: இச்சம்பவத்தில் பொதுமக்களைப் பாதுகாக்க முயன்ற 34 வயதுடைய […]