செம்மணி சித்துபாத்தி இந்து மயானம் தமிழன அழிப்பின் நினைவகமாக பேணும் முன்மொழிவு

செம்மணி சித்துபாத்தி இந்து மயானம் தமிழன அழிப்பின் நினைவகமாக பேணும் முன்மொழிவு நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரன் அவர்களினால் இன்றைய சபை அமர்வில் முன்மொழியப்பட்டது. குறித்த முன்மொழிவினை முன்வைத்து உரையாற்றி தவிசாளர் மயூரன் அவர்கள் தன்னுடைய உரையில் இனஅழிப்பு செய்யப்பட்டு புதைக்கப்பட்ட எமது உறவுகள் இன்று செம்மணி சித்துபாத்தி இந்து மயானத்திலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டு வருகின்றனர். எம்மீது நிகழ்த்தப்பட்ட இனஅழிப்பின் சாட்சியகமாக இவ் மயானம் காணப்படுகின்றது. இந் நிலையில் இன அழிப்பின் சாட்சியங்களை பாதுகாக்க வேண்டியதும் […]

யாழ். இந்துக்கல்லூரியில் சிறப்பாக இடம்பெற்றுவரும் நிலம் 2026 கண்காட்சி

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் ஆக்க இலக்கியக் கழகம் மற்றும் மரபுரிமைக் கழகம் இணைந்து வழங்கும் நிலம் 2026 கண்காட்சி 17.06.2026 நேற்றுக் காலை ஆரம்பமானது. எமது கலை, பண்பாடு, கலாசார மரபுரிமைகளை இளைய தலைமுறை பிள்ளைகளிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் ஆரம்பமான மேற்படி கண்காட்சியை பொதுமக்களும் காங்கேசன்துறை வீதியில் உள்ள இந்துக்கல்லூரியின் வாயிலினூடாக சென்று இன்று 18.06.2026 வியாழக்கிழமை மாலை 4 மணி வரை பார்வையிடலாம். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபர் ரட்ணம் செந்தில்மாறன் தலைமையில், காரைநகர் […]

நாகப்பட்டினம் நோக்கிப் புறப்படவிருந்த பயணிகள் கப்பலில், தங்கக் கட்டிகளை விழுங்கி வினோதமான முறையில் கடத்த முயன்ற 6 பேர் உட்பட இருவர் கைது

யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறைத் துறைமுகத்தில் இருந்து இந்தியாவின் நாகப்பட்டினம் நோக்கிப் புறப்படவிருந்த பயணிகள் கப்பலில், தங்கக் கட்டிகளை விழுங்கி வினோதமான முறையில் கடத்த முயன்ற 6 பேர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் நேற்று (2026 ஜூன் 17, புதன்கிழமை) அரங்கேறியுள்ளது. ‘சிவகங்கை’ பயணிகள் கப்பல் மூலம் இந்தியாவுக்குத் தங்கம் கடத்தப்படுவதாகக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், காங்கேசன்துறைச் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையிலேயே இந்த பாரிய கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை காங்கேசன்துறையிலிருந்து […]

தடுப்புக்காவல் அறை “நரகத்தைப் போல” உள்ளது எனக் கூறும் சுரேஷ் சலே; உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர முடிவு

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) காவலில் வைக்கப்பட்டு, தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலே, தான் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அறிக்கைகளின்படி, மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மருத்துவமனைக்குச் சென்ற தனது தனிப்பட்ட வழக்கறிஞரிடம், சிஐடி தடுப்புக்காவல் அறையை “நரகம்” என்று விவரித்ததுடன், அங்கு திரும்புவதற்குத் தனக்கு விருப்பமில்லை என்றும், […]

குறிகாட்டுவான் சுற்றுவட்டத்தில் நாகபூசணி அம்மன் சிலை: வேலணை பிரதேச சபை அமர்வில் தீர்மானம் நிறைவேற்றம்தேசிய மக்கள் சக்தியினரின் எதிர்ப்பால் சபையில் குழப்பம்

புங்குடுதீவு – குறிகாட்டுவான் இறங்குதுறை சுற்றுவட்டத்தில், தீவகத்தின் பிரதான அடையாளங்களுள் ஒன்றான நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மனின் சிலையை வைப்பதற்கு வேலணை பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனினும், இதற்கு மாற்றாக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் பொதுவான அடையாளம் வைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியமையால் சபை அமர்வில் கடும் குழப்பமும் வாக்குவாதமும் ஏற்பட்டது. வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதன்போது, குறிகாட்டுவான் சுற்றுவட்டத்தில் அம்மன் சிலையை வைப்பது […]

யோஷித ஏன் கடற்படையில் இணைந்தார்? மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் விளக்கம்

யோஷித ராஜபக்ஷ தொடர்பான தற்போதைய சட்ட நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள பின்னணியில், அவர் ஸ்ரீலங்கா கடற்படையில் இணைந்தது குறித்தும், அதுசார்ந்த மாறுபட்ட கருத்துக்கள் குறித்தும் புதிய அரசியல் மற்றும் பொது விவாதங்கள் மீண்டும் கவனத்தைப் பெற்றுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளராகச் செயற்படும் சட்டத்தரணி மனோஜ் கமகே, யோஷித ராஜபக்ஷ கடற்படையில் இணைந்த சூழ்நிலைகளை நியாயப்படுத்திப் பேசியுள்ளதுடன், அந்த முடிவானது நாட்டின் யுத்த காலச் சூழலைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட ஒன்று என்றும் வாதிட்டுள்ளார். அவர் […]

டர்ஹாம் பிராந்திய பொலிஸ் சேவை வாரியம் இரண்டு புதிய பிரதிப் பொலிஸ் அதிபர்களைத் தேர்ந்தெடுத்துள்ளதாக அறிவிப்பு

டர்ஹாம் பிராந்திய பொலிஸ் சேவை வாரியம் இரண்டு புதிய பிரதிப் பொலிஸ் அதிபர்களைத் தேர்ந்தெடுத்துள்ளதாக அறிவிப்பு டர்ஹாம் பிராந்திய பொலிஸ் சேவை (DRPS) வாரியமானது, விரிவான தேடல் மற்றும் மதிப்பீட்டு செயல்முறையைத் தொடர்ந்து, டர்ஹாம் பிராந்திய பொலிஸ் சேவையின் தற்காலிகப் பிரதிப் பொலிஸ் அதிபர் ரையான் கான்னலி (Ryan Connolly) மற்றும் யார்க் பிராந்திய பொலிஸின் கண்காணிப்பாளர் (Superintendent) சிராக் பட் (Chirag Bhatt) ஆகியோர் புதிய பிரதிப் பொலிஸ் அதிபர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது. […]

Behind me சர்வதேச ஊடக வலையமைப்பு வழங்கும் Legends & Icons Awards 2026!

உலகெங்கும் பரந்துவாழும் எமது ஈழத்தமிழ்ச் சமூகத்தை சேர்ந்த மருத்துவத்துறை, சட்டத்துறை, கற்பித்தற்துறை, கலைத்துறை, பாதுகாப்புத்துறை, தொழில் முனைவோர்… எனப் பரந்து பட்ட தனித்துவமிக்கவர்களாகத் திகழும் முக்கியஸ்தர்களைக் கௌரவிக்கும் Legends & Icons Awards 2026 என்ற ஒரு பிரம்மாண்ட நிகழ்வினை Behind me சர்வதேச ஊடக வலையமைப்பு கனடாவில் எதிர்வரும் ஜுன் 20ஆம் திகதி சனிக்கிழமை Brighton Convention Center 2155 MCNICOLL AVE, TORONTO, ON M1V 5P1 இல் மாலை 6.30 மணிக்கு நடாத்தவுள்ளது. […]

மூதூரில் 2006ம் ஆண்டு 17 மனிதாபிமான பணியாளர்கள் படுகொலை – இலங்கை அரசாங்கம் புதிய விசாரணைகளை ஆரம்பிக்கவேண்டும் என ஏசிஎவ் வேண்டுகோள்

மூதூரில் மனிதாபிமான பணியாளர்கள் 17 பேர் 2006 ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் அரசாங்கம் புதிய விசாரணைகளை ஆரம்பிக்கவேண்டும் என பிரான்சை தளமாக கொண்ட ஏசிஎவ் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. அறிக்கையில் அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.   இருபது ஆண்டுகளுக்கு முன்பு, 2006 ஆகஸ்ட் 4 அன்று, மனிதாபிமான உதவிகளை வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த ‘ஆக்ஷன் அகெய்ன்ஸ்ட் ஹங்கர்’ (Action Against Hunger) அமைப்பின் 17 பணியாளர்கள், இலங்கையின் மூதூரில் உள்ள எங்களது அலுவலகத்தில் […]

டொனால்ட் டிரம்பிற்கு அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் ஆர்சிஎம்பி (RCMP) அதிகாரி மீது வழக்குப்பதிவு

அல்பெர்ட்டாவில் (Alberta) நடைபெற்ற ஜி7 (G7) உச்சிமாநாட்டுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கியூபெக்கைச் சேர்ந்த ஆர்சிஎம்பி அதிகாரி ஒருவர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு இணையம் வாயிலாகக் கொலை அச்சுறுத்தல் விடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு அல்பெர்ட்டாவில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் பாதுகாப்புப் பணிகளைக் கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த கியூபெக்கை தளமாகக் கொண்ட ராயல் கனடியன் மவுண்டட் போலீஸ் (RCMP) அதிகாரி ஒருவர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு இணையத்தில் அச்சுறுத்தல் விடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு அவர் […]