ரொறன்ரோவில் கத்திக்குத்துச் சம்பவம்: 50 வயது மதிக்கத்தக்க நபர் படுகாயம்

ரொறன்ரோ: கனடாவின் ரொறன்ரோ நகரின் கிழக்குப்பகுதியில் சனிக்கிழமை (ஜூன் 13, 2026) இரவு நிகழ்ந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விக்டோரியா பார்க் (Victoria Park) மற்றும் டான்ஃபோர்த் அவென்யூ (Danforth Avenues) சந்திப்புப் பகுதியில் இரவு 7:30 மணியளவில் இக்கத்திக்குத்துச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக ரொறன்ரோ பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், கத்திக் குத்துக் காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நபரைக் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். […]
கனடாவில் கோர விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 சிறுவர்கள் பலி

ஒண்டாரியோ: கனடாவின் ஒண்டாரியோ (Ontario) மாகாணத்தில் நிகழ்ந்த மிக மோசமான வாகன விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணியளவில் மெப்லடன் (Mapleton) நகரின் கொனெஸ்டோகோ ஏரிக்கு அருகே உள்ள வீதிச்சந்தியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 10 பேருடன் பயணித்த வேன் ஒன்றும், எஸ்.யு.வி (SUV) ரக கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் வேனில் பயணித்த 4, 6, 8, 10 […]
சியான்’ விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

தமிழ் திரையலகின் பெருமிதமாக ஜொலிக்கும் சர்வதேச தரத்திலான நட்சத்திர நடிகர் சியான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் விக்ரம், ஊர்வசி, ரியா ஷிபு, எம்.எஸ். பாஸ்கர், வி டி வி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். கொமர்சல் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் […]
நவீன தொழில் நுட்பத்தில் தயாரான பாடலை வெளியிட்ட ‘அங்கீகாரம்’ படக் குழு

அறிமுக நாயகன் கே ஜே ஆர் நடிப்பில் தயாராகி உள்ள ‘அங்கீகாரம்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வெற்றி விழா ஆந்தம்’எனும் பாடல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டு, வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் தென்பாதியான் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அங்கீகாரம்’ திரைப்படத்தில் கே ஜே ஆர், விஜி வெங்கடேஷ், சிந்துரி, ரங்கராஜ் பாண்டே, வசுந்தரா, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ. விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதா இசையமைத்திருக்கிறார். விளையாட்டு வீரரின் வாழ்வியலை தழுவி கொமர்சல் […]
நடிகை சமந்தா நடிக்கும் ‘எங்கள் தங்கம்’

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகையாக திகழும் சமந்தா கதையின் நாயகியாக நடித்திருக்கும் ‘எங்கள் தங்கம்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எங்கள் தங்கம்’ திரைப்படத்தில் சமந்தா, ஆனந்த், கௌதமி, பிரகதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை த்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் நடிகை சமந்தா தயாரித்திருக்கிறார். எதிர்வரும் 19ஆம் […]
இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நூறு சாமி’ திரைப்படம்

மூன்று தசாப்தங்களாக தொடர்ந்து தமிழ்த் திரையுலகில் கவனிக்கத்தக்க படைப்புகளை வழங்கி ரசிகர்களை தொடர்ந்து உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தும் இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நூறு சாமி’ திரைப்படத்தில்… இரண்டாம் பாதியில் தான் நாயகன் விஜய் அண்டனி வருவார். படத்தின் இறுதிக் கட்ட 40 நிமிடங்களில் அவர் தோன்றி ரசிகர்களின் மனதை கவர்வார்’ என அப்படத்தின் இயக்குநர் சசி தெரிவித்திருக்கிறார். இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகி உள்ள ‘நூறு சாமி ‘ திரைப்படத்தில் விஜய் அண்டனி, சுவாசிகா, அஜய் […]
கடல் பகுதிகளுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை!

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கல்பிட்டி வரையான கடல் பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கல்பிட்டி வரையான கடல் பகுதிகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். இப்பகுதிகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீட்டர் (kmph) வரை அதிகரித்து பலத்த வீசக்கூடும். மறு அறிவித்தல் வரும் வரை கடற்படையினரும், மீனவ சமூகத்தினரும் இந்த கடல் பகுதிகளுக்குள் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். திருகோணமலை முதல் காங்கேசன்துறை வரை (முல்லைத்தீவு […]
Behind me சர்வதேச ஊடக வலையமைப்பு வழங்கும் Legends & Icons Awards 2026!

உலகெங்கும் பரந்துவாழும் எமது ஈழத்தமிழ்ச் சமூகத்தை சேர்ந்த மருத்துவத்துறை, சட்டத்துறை, கற்பித்தற்துறை, கலைத்துறை, பாதுகாப்புத்துறை, தொழில் முனைவோர்… எனப் பரந்து பட்ட தனித்துவமிக்கவர்களாகத் திகழும் முக்கியஸ்தர்களைக் கௌரவிக்கும் Legends & Icons Awards 2026 என்ற ஒரு பிரம்மாண்ட நிகழ்வினை Behind me சர்வதேச ஊடக வலையமைப்பு கனடாவில் எதிர்வரும் ஜுன் 20ஆம் திகதி சனிக்கிழமை Brighton Convention Center 2155 MCNICOLL AVE, TORONTO, ON M1V 5P1 இல் மாலை 6.30 மணிக்கு நடாத்தவுள்ளது. […]
இலங்கையில் இடம்பெற்ற இனஅழிப்பு மற்றும் மனித உரிமை மீறல்களின் கொடூர உண்மைகளை செம்மணி புதைகுழி வெளிச்சமிட்டுக் காட்டுகிறது – அருட்தந்தை மா. சத்திவேல்

செம்மணி சமூக புதைகுழி அகழ்வுப் பணிகளில் வெளிவரும் மனித எச்சங்களும், குழந்தைகளின் பாவனை பொருட்களும் இலங்கையில் இடம்பெற்ற இனஅழிப்பு மற்றும் மனித உரிமை மீறல்களின் கொடூர உண்மைகளை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் சனிக்கிழமை (13) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, செம்மணி சமூக புதைகுழியின் அகழ்வுப் பணிகள் தொடர்கையில் தற்போது […]
குற்றவாளிகள் எவராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் – ஐக்கிய மக்கள் சக்தி

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகள் எவராக இருந்தாலும், அவர்கள் அனைவருக்கும் தகுந்த தண்டனை வழங்கப்படும் வரை ஐக்கிய மக்கள் சக்தி அதற்காக தொடர்ந்தும் குரல் கொடுக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளில், குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவதற்கு முன்னின்று உழைக்கும் எந்தவொரு பாதுகாப்புப் பிரிவுக்கும் எங்களது முழுமையான […]