உலக கிண்ண மகளிர்; இலங்கையை வென்றது இங்கிலாந்து

உலக கிண்ண மகளிர் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதல் லீக் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றிப் பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் மோதின. இலங்கை நேரப்படி நேற்றிரவு 11 மணிக்கு ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை மாத்திரம் […]
மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தில் – ஈரான் அறிவிப்பு

ஈரானில் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்காவுடனான ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் செய்ட் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். அதில் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது உள்ளிட்ட விடயங்களும் உள்ளடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஒப்பந்தத்தில் ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் முற்றுகையை நீக்குவதும் அடங்கும் என்றும், ஆனால் ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகள் பின்னர் தொடங்கும் என செய்ட் அப்பாஸ் அராக்சி அரச தொலைக்காட்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். ஈரானுக்கான பொருளாதார நன்மைகள், தெஹ்ரான் […]
நாட்டின் ஆரம்பப் பாடசாலைகளுக்கு பொதுவான மாதிரித் திட்டம்

மாணவர் பாதுகாப்பு, நலன்புரி மற்றும் செயல்வழிக் கல்வி ஆகிய முக்கிய துறைகளை உள்ளடக்கிய பொதுவான மாதிரி ஒன்றின் அடிப்படையில், நாட்டின் ஆரம்பப் பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் ஆலோசனைச் சபைக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அனைத்துப் பிள்ளைகளுக்கும் கல்வியைப் பெறுவதற்கான சம வாய்ப்பை […]
கைது செய்யப்பட்டுள்ள பிள்ளையான் – சுரேஷ் சலேயை விடுவிக்கவே கூடாது

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மைகள் முழுமையாக வெளிவர வேண்டும் என்றும், அதுவரை இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிள்ளையான் மற்றும் சுரேஷ் சலே ஆகியோர் விடுவிக்கப்படக் கூடாது என்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (12.06.2026) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதக் குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் மறைந்துள்ள உண்மையான சூத்திரதாரிகள் […]
மக்களின் ஜனநாயக உரிமையை இல்லாமலாக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொள்கின்றது – முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு

வெளிப்படைத்தன்மை தொடர்பில் கதைத்த இந்த அரசாங்கம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் எரிபொருள் கொள்வனவு செய்துள்ள தகவல்களை கேட்டால், அதனை வழங்குவதில்லை. இதன் மூலம் மூலம் மக்களின் ஜனநாயக உரிமையை இல்லாமலாக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுவருகிறது என எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளி்க்கிழமை (12) இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கி மீளாய்வு அறிக்கை தொடர்பான சபை ஒத்துவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், மத்திய கிழக்கில் […]
கனடாவில் புற்றுநோய் விழிப்புணர்வு நடைப்பயணம்; நம்பிக்கைக்காக – வாழ்க்கைக்காக நடப்போம்! உயிர்களைக் காப்போம்!

ஒரு நோயை எதிர்த்து போராடுவது மருத்துவர்களின் கடமை மட்டும் அல்ல… அது ஒவ்வொரு மனிதனின் மனிதநேயப் பொறுப்பும் கூட. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் வலியை உணர்ந்து, அவர்களுக்கு நம்பிக்கையையும் துணிவையும் அளிக்கும் ஒரு மனிதநேய நடைபவனி – “புற்றுநோய் விழிப்புணர்வு நடைபவனி 2026” ஒவ்வொரு அடியும் ஒரு உயிருக்கு நம்பிக்கை… ஒவ்வொரு பங்கேற்பும் ஒரு குடும்பத்திற்கு துணை… ஒன்றாக நடந்தால் மாற்றத்தை உருவாக்கலாம். Behind Me Media, JMFOA Canada மற்றும் Behind Me Foundation இணைந்து நடத்தும் […]
முன்கூட்டியே தகவல்கள் கிடைத்திருந்தும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்க தவறிய அதிகாரிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் – துமிந்த திஸாநாயக்க

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான துல்லியமான புலனாய்வு தகவல்கள் முன்கூட்டியே கிடைத்திருந்தும் அதனைத் தடுக்க தவறிய பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுக்கு எதிராக முதலில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் வெள்ளிக்கிழமை (12) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பின்னணியில் உள்ள சூத்திரதாரி யார் என்று நேரத்தை வீணடிப்பதை விட […]
உலகக் கோப்பை கால்பந்து: கானா அணி நட்சத்திர வீரர் தாமஸ் பார்ட்டி கனடாவுக்குள் நுழைய தடை!

டொராண்டோ: கானா நாட்டின் முன்னணி கால்பந்து மத்தியக்கள ஆட்டக்காரரான (Midfielder) தாமஸ் பார்ட்டி (Thomas Partey) கனடாவுக்குள் நுழைவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. அவர் மீது பிரிட்டனில் பதிவாகியுள்ள பல பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டுகளே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை தொடரில் பின்னடைவு டொராண்டோ நகரில் அடுத்த வாரம் புதன்கிழமை (ஜூன் 17) நடைபெறவுள்ள பனாமாவுக்கு எதிரான ஃபிஃபா (FIFA) உலகக் கோப்பை தொடக்க ஆட்டத்தில் கானா அணி தாமஸ் பார்ட்டி இன்றி […]
டொராண்டோ மைதானத்தில் பரபரப்பு: காவல்துறை அதிகாரிகளைத் தாக்கிய போஸ்னியா நாட்டு ரசிகர்கள் இருவர் கைது

டொராண்டோ: டொராண்டோ மைதானத்தில் (Toronto Stadium) இன்று மதியம் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மைதானத்தில் மோதல் கனடா மற்றும் போஸ்னியா-ஹெர்சகோவினா (Canada and Bosnia and Herzegovina) அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பிற்பகல் 2 மணி அளவில் மைதானத்தின் பார்வையாளர் பகுதியில் (Stands) திடீரென மோதல் வெடித்தது. இதுகுறித்த தகவல் கிடைத்ததும், டொராண்டோ காவல்துறையினரும் பாதுகாப்புப் பணியாளர்களும் உடனடியாக அந்தப் […]
டொராண்டோ ஓடும் ரயிலில் அரங்கேறிய இனவெறித் தாக்குதல்: பெண் சந்தேக நபரைத் தேடும் காவல்துறை

ஜூன் 12, 2026 டொராண்டோ: கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள ‘கென்சிங்டன் மார்க்கெட்’ (Kensington Market) பகுதிக்கு அருகே, ஓடும் தெருவழிக் காரில் (Streetcar) நடத்தப்பட்ட இனவெறித் தாக்குதல் தொடர்பாகத் தேடப்பட்டு வரும் பெண்ணை அடையாளம் காண பொதுமக்கள் உதவுமாறு டொராண்டோ காவல்துறை கோரியுள்ளது. மார்ச் மாத வன்முறைச் சம்பவம் கடந்த மார்ச் 27 அன்று நண்பகலுக்குச் சற்று முன்னதாக, டண்டாஸ் ஸ்ட்ரீட் வெஸ்ட் (Dundas Street West) மற்றும் ஸ்படைனா அவென்யூ (Spadina Avenue) சந்திப்புப் […]