“இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கிய புண்ணியவான் தாங்கள் தானே!” – முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் அப்பாவு அசுர வேக அதிரடி நெத்தியடி!

சென்னை: “தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் இளைஞர்களை நச்சுப் போதைப் பழக்கத்திற்கு அடியோடு அடிமையாக்கியது யார்? திரைப்படங்கள் வாயிலாகப் புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்தும் காட்சிகளில் மாஸாக நடித்து, ஒரு ஒட்டுமொத்தத் தலைமுறை இளைஞர்களையே கொடூரப் போதைக்கு அடிமையாக்கிய புண்ணியவான் முதலமைச்சர் விஜய் தாங்கள்தானே?” என்று முன்னாள் சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு உக்கிரம் நிறைந்த மாஸ் அரசியல் கேள்வியை அசுர வேகத்தில் அதிரடியாக எழுப்பியுள்ளார். தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்து, மாநிலத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான […]
“திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இல்லை!” – அண்ணா அறிவாலயத்திற்கு அசுர வேக அதிர்ச்சி கொடுத்து சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் அதிரடி பிரகடனம்!

கோயம்புத்தூர்: “தமிழ்நாட்டில் தற்போதைய அரசியல் சூழலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) தொடர்ந்து நீடிக்க முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது; கடந்த இரண்டு நாட்களாக எங்களது கட்சியின் உயர்மட்டக் குழு நடத்திய தீவிர ஆலோசனையின் முடிவில், திமுக கூட்டணியில் இருந்து முற்றிலும் விலகுவது என 100 விழுக்காடு தார்மீக முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் உக்கிரம் நிறைந்த மாஸ் அரசியல் பிரகடனத்தை அசுர வேகத்தில் அதிரடியாக வெளியிட்டுள்ளார். […]
பாடகர் சங்கீத்சனை விடுதலை செய்யக் கோரி மன்னாரில் போராட்டம்

கைதான பாடகர் சங்கீத்சனை விடுதலை செய்யக் கோரி இன்று மன்னாரில் போராட்டம் நடைபெற்றது.
சங்கீத்சனின் பிணை மனு மீதான கட்டளை 23 ஆம் திகதி அறிவிக்கப்படும் – யாழ்.மேல்நீதிமன்றம்

சொல்லிசை கலைஞர் கணேஷன் சங்கீத்சனின் பிணை மனு மீதான கட்டளை எதிர்வரும் 23 ஆம் திகதி அறிவிக்கப்படும்என யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த பிணை மனு இன்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டதாக சங்கீத்சன் சார்பில் மன்றில் முன்னிலையாகிய சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார். சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கணேஷன் சங்கீத்சனுக்கு பிணை வழங்குமாறு கோரியே குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள […]
யாழில் நிதிக்குழு கூட்டத்தின் நடுவில் வெளியேறிய செயலாளர்

யாழ்ப்பாணம் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் நிதிக்குழு கூட்டம் நேற்றையதினம்(10.06.2026) சபையின் தவிசாளர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, சபையின் செயலாளர் எவ்வித முன்னறிவித்தலுமின்றி திடீரென வெளியேறியுள்ளார். வெளியே சென்ற செயலாளர் நீண்ட நேரமாகியும் மீண்டும் கூட்டத்திற்குச் சமூகமளிக்காததால், கூட்டத்தில் பெரும் அமைதியின்மையும் குழப்பமான சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிருப்தியடைந்த சபை உறுப்பினர்கள் செயலாளரைத் தேடிச் சென்றபோது, அவர் பொறுப்பற்ற முறையில் தனது சொந்த வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. செயலாளரின் இந்த அலட்சியப் […]
புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரித்துக் கொண்டே போகிறது – வைத்திய கலாநிதி நடராஜா ஜெயக்குமாரன்

இலங்கையில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்ற நிலையில் அவர்களுக்கான சிகிச்சை வளங்களில் நோயாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என புற்றுநோய் வைத்திய நிபுணரும், தேசிய புற்றுநோயியல் நிறுவன ஆலோசகரமான வைத்திய கலாநிதி நடராஜா ஜெயக்குமாரன் தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் (10.06.2026) இடம்பெற்ற மறைந்த பேராசிரியர் நாகலிங்கம் சுந்தரலிங்கம் ஞாபகார்த்த நிகழ்வில் பேருரை ஆற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், புற்றுநோய் இலங்கையில் மட்டுமல்ல உலகத்தில் உள்ள […]
இலங்கை போக்குவரத்துச் சபை நஷ்டமடைவதற்குரிய காரணங்கள்
இலங்கை போக்குவரத்துச் சபையின் சில டிப்போக்கள் நஷ்டமடைவதற்கு, அவை பிரதேச அளவில் அமைந்திருப்பதும், அந்த வீதிகளில் அதிகளவிலான பயணிகள் பயணிக்கும் பயணவாரங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதுமே காரணமாகும் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். இதற்காக முறையான நடைமுறையொன்றைப் பின்பற்றுவதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இன்று (11) பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போது அமைச்சர் குறிப்பிட்டார். மேலும், இ.போ.ச. விடம் உள்ள பேருந்து இருப்பில் நிலவும் குறைபாடுகள் காரணமாக, […]
சுரேஷ் சலேயை தினமும் பார்வையிட அனுமதிக்குமாறு மனைவியும் சட்டத்தரணியும் கோரிக்கை

அரசு புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளரான, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரை தினமும் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்குமாறு அவரது மனைவியும் சட்டப் பிரதிநிதியும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கான அனுமதியை மறுத்து நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளருக்கு முகவரியிடப்பட்ட தனித்தனி கடிதங்கள் மூலம் இக்கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்த […]
பாஸ்போர்ட் விவகாரம்: சஷி வீரவங்சவின் மேன்முறையீட்டை நிராகரித்தது நீதிமன்றம்

முறையற்ற வழியில் பெறப்பட்ட கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்) வைத்திருந்த குற்றத்திற்காக தமக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் அபராதத்தை சவாலுக்கு உட்படுத்தி சஷி வீரவங்ச தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன தள்ளுபடி செய்துள்ளார். இந்தத் தீர்ப்பை வழங்கிய நீதிபதி, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இதற்கு முன்னர் விதிக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டு மற்றும் தண்டனையை உறுதி செய்ததுடன், கீழ் நீதிமன்றத்தின் முடிவில் தலையிடுவதற்கு எவ்வித அடிப்படைகளும் இல்லை என்றும் குறிப்பிட்டார். சட்டவிரோதமான […]
வயிற்றில் போதைப்பொருள் பாக்கெட் வெடித்ததாக சந்தேகிக்கப்படும் சம்பவத்தில் பேருந்து நடத்துனர் மரணம்

தங்காலை மற்றும் மாகும்புர இடையே தக்ஷிண அதிவேக நெடுஞ்சாலையில் (Southern Expressway) பயணிக்கும் தனியார் பயணிகள் பேருந்து ஒன்றில் பணிபுரிந்த நடத்துனர் ஒருவர், அவரது வயிற்றுக்குள் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பாக்கெட் ஒன்று வெடித்ததில் உயிரிழந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் மொடரவான, ருக்தென்னகல, கொரட்டுவ பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான பாஸ்நாயக்க குணரத்ன (51 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார். காவற்துறையினரின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்ட நபர் தங்காலை மற்றும் மாகும்புர இடையே பயணிக்கும் தனியார் பேருந்து […]