கட்டுமானப் பகுதிக்குள் லாரி புகுந்து வாகனங்கள் மீது மோதியதில் நபர் ஒருவர் பலி: நோவா ஸ்கோடியா ஆர்.சி.எம்.பி (N.S. RCMP)

லுனென்பர்க் கவுண்டியில் (Lunenburg County) கட்டுமானப் பகுதிக்குள் லாரி ஒன்று புகுந்து, பல வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் பெண் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை மதியம் 3:30 மணியளவில் நோவா ஸ்கோடியாவின் கிளியர்லேண்ட் (Clearland, N.S.) பகுதியில் உள்ள நெடுஞ்சாலை 103-ல் (Highway 103) நடந்த இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து ஆர்.சி.எம்.பி மற்றும் பிற அவசரக்கால மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். “போலீசார் […]
அன்று பயங்கரவாத தடுப்புச் சட்டத்தைப் பாதுகாக்க முன்னின்ற தரப்பினரே இன்று சலேவின் தடுப்புக்கு எதிராக குரல் கொடுக்கின்றனர் – தினன தகுன

யங்கரவாத தடுப்புச் சட்டத்தைப் பாதுகாக்க முன்னின்ற தரப்பினரே இன்று சலேவின் தடுப்புக்கு எதிராக குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயை நீண்டகாலம் தடுத்து வைத்து, அவருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அவமதிப்பான மற்றும் அநாகரிகமான நடத்தைகளை வன்மையாக கண்டிப்பதாக தினன தகுன கூட்டிணைவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தினன தகுன கூட்டிணைவு நேற்று (8) திங்கட்கிழமை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், மேஜர் ஜெனரல் சுரேஷ் […]
டொராண்டோவின் மேற்குப் பகுதி வெல்னஸ் கிளினிக்கில் பாலியல் வன்கொடுமை செய்ததாக நபர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது

டொராண்டோவைச் சேர்ந்த 32 வயதான மேத்யூ மோலோனி (Matthew Moloney) என்பவர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. (டொராண்டோ காவல் துறை புகைப்படம்) டொராண்டோவின் ‘ப்ளூர் வெஸ்ட் வில்லேஜ்’ (Bloor West Village) பகுதியில் உள்ள ஒரு வெல்னஸ் கிளினிக்கில் (wellness clinic) நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து, டொராண்டோவைச் சேர்ந்த 32 வயது நபர் ஒருவர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் நடந்த ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து டொராண்டோ […]
கனடாவில் புற்றுநோய் விழிப்புணர்வு நடைப்பயணம்; நம்பிக்கைக்காக – வாழ்க்கைக்காக நடப்போம்! உயிர்களைக் காப்போம்!

ஒரு நோயை எதிர்த்து போராடுவது மருத்துவர்களின் கடமை மட்டும் அல்ல… அது ஒவ்வொரு மனிதனின் மனிதநேயப் பொறுப்பும் கூட. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் வலியை உணர்ந்து, அவர்களுக்கு நம்பிக்கையையும் துணிவையும் அளிக்கும் ஒரு மனிதநேய நடைபவனி – “புற்றுநோய் விழிப்புணர்வு நடைபவனி 2026” ஒவ்வொரு அடியும் ஒரு உயிருக்கு நம்பிக்கை… ஒவ்வொரு பங்கேற்பும் ஒரு குடும்பத்திற்கு துணை… ஒன்றாக நடந்தால் மாற்றத்தை உருவாக்கலாம். Behind Me Media, JMFOA Canada மற்றும் Behind Me Foundation இணைந்து நடத்தும் […]
புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவு சக்திகளின் தேவைகளை நிறைவேற்றவே அரசுசெயற்படுகிறது – இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர்

இந்த அரசாங்கத்துக்குச் செய்யத் தெரிந்த ஒன்றும் இல்லை இவர்கள் முழுமையாக டயஸ்போரா மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவு சக்திகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே செயற்படுகிறார்கள். நாமல் ராஜபக்ஷவை அடுத்த தேர்தலில் இந்த நாட்டின் ஜனாதிபதியாக்கும் வரை நாங்கள் ஓயப்போவதில்லை என பௌத்த தேசியவாத அமைப்பான ‘ராவணா பலய’ அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் சுட்டிக்காட்டினார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கிராமங்கள் தோறும் வேலைத்திட்டத்தின் கீழ், அநுராதபுரம் மாவட்டத்தில் கெக்கிராவை தொகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு, […]
இலங்கை மலையக மக்களின் வாழ்வியலைத் திரைப்படமாக்கத் திட்டம் – இயக்குனர் தங்கர்பச்சான் திட்டவட்டம்

பிரபல தமிழ் சினிமா இயக்குனரும், எழுத்தாளருமான தங்கர்பச்சான் என்னிடம் விளக்கினார். இத்திரைப்படத்தில் மலையக கலைஞர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார். பிரபல தமிழ் சினிமா இயக்குனரும், எழுத்தாளருமான தங்கர்பச்சான், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இடையே திங்கட்கிழமை (08) விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அமைச்சின் காரியாலயத்தில் சந்தித்து கலந்துரையாடிய போதே […]
விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகள் ஒத்திவைப்பு

அமைச்சராகப் பதவி வகித்த காலப்பகுதிக்குள் சட்டவிரோதமாக 75 மில்லியனுக்கும் அதிகமான தொகையைச் சம்பாதித்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகள் ஜூன் 25 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நேற்று திங்கட்கிழமை (08) இந்த வழக்கு கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி முஹம்மத் மிஹால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது வழக்குத் தொடருநரான இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்காகச் சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அசாத் நவாவி […]