கனடாவை 51-ஆவது மாநிலமாக இணைக்கும் கருத்தை மீண்டும் கையில் எடுத்தார் டிரம்ப்: ‘கனடா விற்பனைக்கு அல்ல’ என பிராந்திய முதலமைச்சர்கள் கடும் பதிலடி!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கனடாவை அமெரிக்காவுடன் இணைத்து அதனைத் தங்களின் 51-ஆவது மாநிலமாக மாற்றுவது குறித்த தனது விருப்பத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார். கனடா பொருளாதார மந்தநிலையைச் சந்தித்து வருவதாக வெளியான செய்தி ஒன்றைப் பகிர்ந்து, டிரம்ப் தனது சமூக வலைத்தள பக்கத்தில் “51-ஆவது மாநிலம்!” எனக் குறிப்பிட்டுள்ளார். டிரம்பின் இந்த கருத்துக்குக் கனடாவின் முக்கியப் பிராந்திய தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். டிரம்ப் கருத்தும் கனடாவின் எதிர்வினையும் கனடாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) தொடர்ந்து […]

இணைய மோசடி தொடர்பில் 360 முறைப்பாடுகள் கடந்த மாதம் பதிவு

கடந்த ஒரு மாத காலத்திற்குள் இணையவழி நிதி மோசடிகள் தொடர்பாக 360க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார் நிலை குழு தெரிவித்துள்ளது. அதன் முதன்மை தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவிக்கையில், இணையம் ஊடாக நிதிப் பரிமாற்றங்களை மேற்கொள்ளும் போது அதிக கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தார். கடந்த பண்டிகைக் காலத்தைப் போன்றே வெசாக் மற்றும் பொசோன் பண்டிகைக் காலங்களை முன்னிட்டும், பல சந்தர்ப்பங்களில் பிரபல வர்த்தக நாமங்களின் பெயர்களைப் […]

சென்னையில் கோயம்பேடு இலங்கை பெண் கொலை வழக்கு: காயமடைந்த சிறுமி பலி

சென்னை கோயம்பேட்டில் காரில் மோதி இலங்கை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காயமடைந்த சிறுமியும் உயிரிழந்தார். குறித்த சம்பவத்தில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 17 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த 18 வயதான யான்சி என்ற இளம்பெண், இன்ஸ்டாகிராம் மூலம் சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவருடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில், தோழியை பார்ப்பதற்காக சென்னை சென்ற […]

பல பகுதிகளுக்கு 100 மி.மீ மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (3) இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீட்டர் அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேநேரம் நாடு முழுவதும் அவ்வப்போது மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று […]

ஸ்க்வாமிஷ் பிரவுனிங் ஏரியில் நீரில் மூழ்கி இருவர் பலி: உடல்கள் மீட்பு

கனடாவின் ஸ்க்வாமிஷ் பகுதியில் உள்ள பிரவுனிங் ஏரியில் (Browning Lake) துடுப்புப் பலகையில் (Paddleboard) இருந்து தவறி விழுந்து மாயமான இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். ராயல் கனடியன் மவுண்டட் போலீசாரின் (RCMP) நீருக்கடியிலான மீட்புக் குழுவினர் செவ்வாய்க்கிழமை அன்று இருவரின் உடல்களையும் மீட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மே 30-ஆம் தேதி மதியம் 3 மணி அளவில், முரின் மாகாணப் பூங்காவில் (Murrin Provincial Park) உள்ள பிரவுனிங் ஏரியில் துடுப்புப் பலகையில் […]

பொருளாதார நெருக்கடியைக் காரணம்காட்டி பொசன் பௌர்ணமி உற்சவத்தைக் குறைத்து மதிப்பிடக் கூடாது – வலவாஹாங்குனவெவே தம்மரத்ன தேரர்

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளையும் எரிபொருள் விலையேற்றத்தையும் சாட்டாகக் கொண்டு, பௌத்த வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த பொசன் பௌர்ணமி உற்சவத்தைக் குறைத்து மதிப்பிடவோ அல்லது முடக்கிவிடவோ முடியாது என மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கலாநிதி வலவாஹாங்குனவெவே தம்மரத்ன தேரர் தெரிவித்துள்ளார். மிஹிந்தலை ரஜமஹா விகாரை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சர்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்பண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், இம்முறை பொசன் வாரமானது ஜூன் 26 ஆம் […]

கனடாவில் புற்றுநோய் விழிப்புணர்வு நடைப்பயணம்; நம்பிக்கைக்காக – வாழ்க்கைக்காக நடப்போம்! உயிர்களைக் காப்போம்!

ஒரு நோயை எதிர்த்து போராடுவது மருத்துவர்களின் கடமை மட்டும் அல்ல… அது ஒவ்வொரு மனிதனின் மனிதநேயப் பொறுப்பும் கூட. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் வலியை உணர்ந்து, அவர்களுக்கு நம்பிக்கையையும் துணிவையும் அளிக்கும் ஒரு மனிதநேய நடைபவனி – “புற்றுநோய் விழிப்புணர்வு நடைபவனி 2026” ஒவ்வொரு அடியும் ஒரு உயிருக்கு நம்பிக்கை… ஒவ்வொரு பங்கேற்பும் ஒரு குடும்பத்திற்கு துணை… ஒன்றாக நடந்தால் மாற்றத்தை உருவாக்கலாம். Behind Me Media, JMFOA Canada மற்றும் Behind Me Foundation இணைந்து நடத்தும் […]

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருந்திருந்தால் நாணய நிதியத்தால் ஏற்படும் நிலைமையைச் சாதுரியமாகக் கையாண்டிருப்பார்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருந்திருந்தால் நாணய நிதியத்தின் அனைத்து நிபந்தனைகளுக்கும் அடிபணியாமல் நிலைமையைச் சாதுரியமாகக் கையாண்டிருப்பார். எனவே நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக முன்னெடுக்க வேண்டுமாயின், ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலுடன், தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் மற்றும் எதிர்க்கட்சியின் அனுபவமிக்க அரசியல் தலைவர்களை உள்ளடக்கிய பல்துறைசார் நிபுணத்துவக் குழுவொன்றை அரசாங்கம் உடனடியாக நியமிக்க வேண்டும் என சுகீஸ்வர பண்டார தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் திங்கட்கிழமை (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே […]

மண்டை ஓட்டுக் குவியல்கள் செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில்…

செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் நேற்று நடந்த அகழ்வின் போது மண்டை ஓட்டுக் குவியல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. குவியல்களாகவும் சில என்புத் தொகுதிகள் தென்பட்டுள்ளன. அவை சுத்தம் செய்யப்பட்ட பின்னரே அது தொடர்பான தகவல்களை கூறக்கூடியதாக இருக்கும். அதில் சில மண்டை ஓடுகள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.