“மெஜாரிட்டி இல்லாததால் அமைச்சர் பதவி – இது தவறான முன்னுதாரணம்!” – புதிய தவெக அரசு குறித்து பிரேமலதா விஜயகாந்த் அதிரடி விமரிசனம்!

விருத்தாசலம்: “தமிழகத்தில் தவெக அரசுக்கு முழு மெஜாரிட்டி இல்லாததால், தங்களைக் காப்பாற்றிக் கொள்ள ஆதரவு கொடுக்கும் கட்சிகளுக்கெல்லாம் அமைச்சர் பதவிகளை வாரி வழங்கி வருவது தவறான முன்னுதாரணம்; இது குதிரை பேரத்திற்கு வழிவகுத்துவிடக் கூடாது” என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மிகக் காரசாரமாகக் குற்றம் சாட்டியுள்ளார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனைக்கு நேரில் சென்று அங்குள்ள மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் மற்றும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் […]

“அரசு விவகாரங்களில் தவெக தோழர்கள் தலையிடக் கூடாது!” – பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அதிரடி எச்சரிக்கை!

சென்னை: “தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையில் புதிய கூட்டணி ஆட்சி அமைந்துள்ள சூழலில், மக்கள் பிரதிநிதிகள் அல்லாத தவெக தோழர்கள் யாரும் அரசு சார்ந்த விவகாரங்களிலோ அல்லது அரசு அலுவலகங்களிலோ தேவையின்றி தலையிடவோ, ஆய்வுகள் மேற்கொள்ளவோ கூடாது” என்று கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மிகக் கடுமையான அறிவுரைகளை வழங்கியுள்ளார். சமீபத்தில் தென்காசி மற்றும் தாம்பரம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைகளுக்குள் (Government Hospitals) தவெக-வைச் சேர்ந்த சில முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திடீரெனப் […]

அவசர உதவியைக் கோருகின்றார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவரும் தமிழ்த் தேசிய செயல்பாட்டாளரும் வல்வெட்டித்துறை மண்ணின் மைந்தனும் வடமராட்சியின் ஜனநாயக அடையாளமுமான எம்.கே.சிவாஜிலிங்கம் தனது இரண்டு சிறுநீரகங்களும் மாற்று சிகிச்சைக்கான நிதி உதவியை பொதுமக்களிடம் கோரியுள்ளார். தங்களால் இயன்றளவில் நிதியுதவியை தந்து தனது உயிரை காக்க உதவுமாறு உருக்கமான கோரிக்கையை ஊடகங்கள் ஊடாக முன்வைத்துள்ளார். Name:M.K Sivajilinkam Ac no:774688 Bank of Ceylon saving account Bambalapitiya branch Contact: 0777729020

கடந்த காலத்தை விட இலங்கையின் பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பு வலுவாக உள்ளது; சர்வதேச நாணய நிதியம்

இலங்கையின் தற்போதைய பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பு (Economic policy framework) முன்னெப்போதையும் விட மிகவும் உறுதியான மற்றும் வலுவான நிலையில் காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் இவான் பாபகோர்ஜியோ (Evan Papageorgiou) வியாழக்கிழமை (21) தெரிவித்துள்ளார். நாட்டின் ‘விரிவாக்கப்பட்ட நிதி வசதி’ (EFF – Extended Fund Facility) திட்டத்தின் கீழ், ஐந்து மற்றும் ஆறாவது உத்தியோகபூர்வ மறுாய்வுகளை (Fifth and Sixth Reviews) சர்வதேச நாணய நிதியத்தின் நாணயச் சபை […]

“தவெக அரசில் இணைந்த விசிக, ஐயூஎம்எல்!” – அமைச்சர்களாக வன்னியரசு, ஷாஜகான் அதிரடிப் பதவியேற்பு!

சென்னை: தமிழகத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய தவெக கூட்டணி அமைச்சரவையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) ஆகியவை முறைப்படி இணைய சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து, அந்த கட்சிகளைச் சேர்ந்த தலா ஒரு சட்டமன்ற உறுப்பினர் இன்று அமைச்சர்களாக அதிரடியாகப் பதவியேற்றுக்கொண்டனர். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையான மக்கள் மாளிகையில் இன்று (மே 22) காலை நடைபெற்ற சிறிய அளவிலான அமைச்சரவை விரிவாக்க விழாவில், […]

லண்டனில் வாழும் இலங்கையர்களைச் சந்தித்தார் பிரதமர் ஹரினி அமரசூரிய!

பிரித்தானியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரினி அமரசூரிய, லண்டனில் வாழும் இலங்கை வம்சாவளியினரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இதன்போது, இயற்கை அனர்த்தங்கள் மற்றும் சர்வதேச நெருக்கடிகளுக்கு மத்தியிலும், மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் அதேவேளையில் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதில் தற்போதைய அரசாங்கம் வெற்றியடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கையின் அரசியல் கலாசாரம் ஒரு நேர்மறையான மற்றும் மாற்றியமைக்க முடியாத மறுசீரமைப்பிற்கு உட்பட்டுள்ளதாக வலியுறுத்தியுள்ள பிரதமர், இது நாட்டின் நல்லாட்சியில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். லண்டனில் வாழும் […]

மோசமான காலநிலை; கட்டுநாயக்கவிற்கு வரவிருந்த 06 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன!

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையப் பகுதியில் (BIA) நிலவும் மோசமான காலநிலை காரணமாக, அங்கு தரையிறங்கவிருந்த பல விமானங்கள் மத்தள ராஜபக்ஷ சர்வதேச சர்வதேச விமான நிலையத்திற்கு (MRIA) திருப்பிவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கட்டுநாயக்க மற்றும் அதனைச் சூழவுள்ள வான்பரப்பில் பெய்து வரும் பலத்த மழை மற்றும் போதியளவற்றVisibility எனப்படும் தெளிவற்ற காலநிலை (Poor visibility) காரணமாகவே, இவ்வாறு வருகை தந்த விமானங்கள் அவசரமாகத் திருப்பிவிடப்பட்டுள்ளன. உத்தியோகபூர்வ தகவல்களின்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை […]

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்ட மீளாய்வுகள்

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டம் தொடர்ந்து முன்னோக்கி நகர்ந்து வரும் நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு, அதன் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான ஐந்தாவது மற்றும் ஆறாவது ஒருங்கிணைந்த மீளாய்வுகளை எதிர்வரும் புதன்கிழமை (27) பரிசீலிக்கவுள்ளது. இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுத் தலைவர் இவான் பாபஜியோர்ஜியோ (Evan Papageorgiou) தெரிவிக்கையில், கடந்த ஆண்டுகளில் இலங்கை ஸ்திரமான பொருளாதார நிலையை மீட்டெடுப்பதிலும், கையிருப்புகளை மீண்டும் கட்டியெழுப்புவதிலும், நம்பிக்கையை வலுப்படுத்துவதிலும் கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகக் கூறினார். இந்த […]

யாழ்.திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை யாழ் மாநகர சபையிடம் ஒப்படைக்க வேண்டும் – சிவஞானம்

இந்திய – இலங்கை அரசாங்கங்கள் செய்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை யாழ் மாநகர சபையிடம் கையளிக்கவேண்டும் என தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மைய விவகாரம் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் வியாழக்கிழமை (21) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், அண்மையில் நடைபெற்ற எமது கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்தும் […]

கொழுந்து ஏற்றிச்சென்ற லொறி விபத்து – இருவர் படுகாயம்!

தலவாக்கலை, பாமஸ்டன் தோட்டத்தில் தேயிலை கொழுந்துகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதியும், அதன் உதவியாளரும் படுகாயம் அடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். பாமஸ்டன் தோட்டத்திலிருந்து ரட்ணகிரி தோட்ட வீதியூடாக தேயிலை கொழுந்துகளை ஏற்றிச் சென்ற லொறியே இவ்வாறு வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. சாரதி நுவரெலியா மாவட்ட பொது வைத்திய சாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக […]