பாடசாலை பேருந்து விபத்தில் மாணவன் படுகாயம்

டசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற ஒரு தனியார் பேருந்தும், லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் மாணவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று(22.05.2026) காலை இடம்பெற்றுள்ளது. ஹட்டன் – பொககவந்தலாவ பிரதான சாலையில் உள்ள நோர்வூட் வென்சர் தோட்டம் பகுதியிலே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பொகவந்தலாவவிலிருந்து ஹட்டனில் உள்ள பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்துக்கு எதிர் திசையில், ஹட்டனிலிருந்து பொகவந்தலாவ நோக்கிச் சென்று கொண்டிருந்த டிப்பர் லொறி […]
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா போன்று வேற எந்த ஒரு சிங்கள தலைமையும் தமிழ் மக்களுக்கான அதிகார பகிர்வை கொடுப்பதற்கு முன்வராது – காசிலிங்கம் விக்னேஸ்வரன்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தவிர வேற எந்த ஒரு சிங்கள தலைமையும் தமிழ் மக்களுக்கான அதிகார பகிர்வை கொடுப்பதற்கு மனதளவில் கூட விருப்பம் கிடையாது என முன்னாள் வடகிழக்கு இணைந்த மாகாண முதலமைச்சரின் செயலாளர் காசிலிங்கம் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று(21.05.2026) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மாற்றத்தை ஏற்படுத்துகிறோம் என தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த முன்னாள் ஜேவிபியும் […]
பிரிட்டன் வெளிவிவகாரச் செயலருடன் பிரதமர் ஹரிணி சந்திப்பு!

பிரிட்டனுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய, அந்நாட்டின் கல்விச் செயலாளர் பிரிட்ஜெட் பிலிப்சனைச் சந்தித்து இருதரப்புக் கல்வி ஒத்துழைப்புகள் குறித்து கலந்துரையாடியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் நீண்டகாலமாக நிலவி வரும் வரலாற்று ரீதியான உறவுகளை மேலும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவது குறித்து இச்சந்திப்பில் முக்கிய அவதானம் செலுத்தப்பட்டது. இரு நாடுகளின் கல்வி நிறுவனங்களுக்கு இடையே வலுவான கூட்டுறவைப் பேணுதல், உயர்கல்வியின் தரத்தை சர்வதேச மட்டத்தில் உறுதிசெய்தல், மற்றும் […]
இடமாற்றம் என்ற பெயரில் வடக்கு மாகாணக் கல்வி அழிக்கப்படுகின்றது!

வடமாகாணத்தில் சேவையின் தேவை கருதி இடம்மாற்றம் என்ற பெயரில் கல்வியை மோசமாகப் பாதிக்கும் வகையில் செயற்பாடுகள் அமைந்துள்ளன என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று(21) நடைபெற்ற அமர்வின் போது இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் ஒழுங்குவிதிகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய அவர், வட மாகாணத்தில் “சேவையின் தேவை கருதிய இடமாற்றம்” என்ற பெயரில் கல்வி துறையை பாதிக்கும் வகையில் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக குற்றஞ்சாட்டினார். மேலும் தெரிவிக்கையில், இடமாற்றங்கள் பின்வரும் சந்தர்ப்பங்களிலேயே […]
“அதிகாரம் எளியவருக்கு… அதிலென்ன ஆத்திரம்?” – திமுக எம்பி ஆ.ராசாவுக்கு விசிக பொருளாளர் பாலாஜி எக்ஸ் தளத்தில் அதிரடி பதிலடி!

சென்னை: “விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகள் தவெக அமைச்சரவையில் இணைந்ததை விமரிசித்த திமுக எம்பி ஆ.ராசாவின் கருத்து ஆற்றாமையால் அள்ளிவீசப்படும் அவதூறு” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) மாநிலப் பொருளாளர் பாலாஜி தனது எக்ஸ் (X) தளத்தில் மிகக் கடுமையான பதிலடிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் எந்தவொரு தனிக்கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தவெக தலைவர் விஜய் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு தமிழகத்தில் புதிய கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளார். இதில் […]
“என் வீட்டு தென்னை எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால்…” – விசிக, ஐயூஎம்எல் அமைச்சர் பதவிக்கு ஆ.ராசா புதிய கவிதை விமர்சனம்!

சென்னை: தவெக கூட்டணி அமைச்சரவையில் விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) ஆகிய கட்சிகள் நேரடியாகப் பங்கேற்று அமைச்சர் பதவிகளைப் பெற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, “என் வீட்டுத் தென்னை எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால் இலக்கியத்தில் முடத்தெங்கு, அரசியலில் என்ன பெயர்?” என திமுக எம்பி ஆ.ராசா தனது எக்ஸ் (X) தளத்தில் புதிய பரபரப்புப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை மட்டுமே பெற்று தனிப்பெரும்பான்மை இல்லாத […]
இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ள 21 பாதாள உலக உறுப்பினர்கள்

டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்டதாக கூறப்படும் 21 பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் இன்று (22) காலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்த பாதாள உலகக் குழு உறுப்பினர்களில் மஹவத்தே சாமர மற்றும் குடு துமிந்த ஆகியோரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலவும் மோசமான வானிலை காரணமாக, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரவிருந்த பல விமானங்கள் மத்தள விமான நிலையத்திற்குத் திருப்பிவிடப்பட்டுள்ளன. குறித்த விமானங்களில் சிலவற்றிலேயே இந்த சந்தேகநபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மஹவத்தே சாமர மத்திய குற்றப் […]
திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா

பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா நேற்றையதினம்(21) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. நேற்று காலை உற்சவ மூர்த்திகளுக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றதை தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் கொடி கம்பத்திற்கு அருகாமையில் எழுந்தருளியதை தொடர்ந்து கொடி கம்பத்திற்கு அபிஷேகம் இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து கொடியேற்ற பெருவிழா திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு தியாகராஜா கருணாநந்த குருக்கள் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது. இதன்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
வெளிநாட்டிலிருந்து வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சென்ற போது பலி
பக்கமூன – கிரிதலே பிரதான வீதியின் தியபெதும நகரத்திற்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் 40 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்று, வீதியோரத்திலிருந்த வேப்ப மரத்துடன் மோதியமையினால் இந்த விபத்து சம்பவித்துள்ளது. இந்த விபத்தின் போது வேனின் முன் ஆசனத்தில் பயணித்த நபரே உயிரிழந்துள்ளார். அத்துதுடன், […]
“முழு நாடுமே ஒன்றாக” போதைப்பொருள் ஒழிப்புக்கான இளைஞர் மாநாடு

போதைப்பொருள் அபாயத்தை வேரோடு ஒழிப்பதற்கான “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டுக்கு இணையாக, போதைப்பொருள் ஒழிப்புக்கான இளைஞர் மாநாடொன்றை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான முதற்கட்ட ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் வியாழக்கிழமை (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. போதைப்பொருள் பயன்பாட்டிலிருந்து இளந்தலைமுறையினரைப் பாதுகாப்பதற்கும், போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு எதிராக நாட்டின் இளைஞர்களின் எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்காக கிராமிய மட்டத்தில் இளைஞர்களை ஒன்றிணைக்கும் நோக்கிலும் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போதைப் […]