மிசிசாகா ‘ஹைவே 401’ அதிவேக நெடுஞ்சாலையில் துப்பாக்கிச் சூடு; ஒன்ராறியோ மாகாணப் பொலிஸார் தீவிர விசாரணை!

கனடாவின் மிசிசாகா (Mississauga) நகரில் உள்ள ‘ஹைவே 401’ (Highway 401) அதிவேக நெடுஞ்சாலையில் நள்ளிரவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை அடுத்து, ஒன்ராறியோ மாகாணப் பொலிஸார் (OPP) விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இவ்விசாரணைகள் காரணமாக வின்ஸ்டன் சர்ச்சில் புல்வர்ட் (Winston Churchill Blvd.) மற்றும் மேவிஸ் வீதி (Mavis Rd.) ஆகியவற்றுக்கு இடைப்பட்ட நெடுஞ்சாலையின் அனைத்து சேகரிப்புப் பாதைகளும் (Collector lanes) பல மணித்தியாலங்களாக முழுமையாக மூடப்பட்டிருந்தன. நள்ளிரவு 12:15 மணியளவில் இத் துப்பாக்கிச் சூட்டுச் […]
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட எமது அன்புப் பாலகன் பாலச்சந்திரனின் முகம் என் நினைவலைகளில் அழியாச் சித்திரமாய் வந்து போகிறது – சிறீதரன் எம்.பி

எத்தனையோ சவால்களுக்கும் நெருக்கடிகளுக்கும் மத்தியிலும், கல்வியே எமது சமூகத்தின் ஆகச்சிறந்த ஆயுதம் என்பதனை நிரூபித்து, விடிவை நோக்கிய எமது பயணத்திற்கு புதிய நம்பிக்கையை நாம் கட்டமைக்க வேண்டும்” என கிளி/ கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற புலமைப் பரிசில் பாராட்டு விழா நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சிவஞானம் சிறீதரன் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார். ”ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் வரலாற்றுச் சாதனை படைத்து, இந்த மண்ணிற்கும் நமது சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ள உங்கள் […]
நாடாளுமன்றம் அங்கீகரிக்கும் தேர்தல் முறையின்கீழ் மாகாண சபை தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணைக்குழு தயார்!

நாடாளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்படவுள்ள புதிய தேர்தல் முறையின் கீழ் (Electoral system), மாகாண சபை தேர்தல்களை நடத்துவதற்குத் தான் முழுமையாகத் தயாராக இருப்பதாகத் தேர்தல் ஆணைக்குழு (Election Commission) உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளது. மாகாண சபை தேர்தல்களை நடத்துவது குறித்துப் பொருத்தமான பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு (Parliamentary Select Committee) முன்னிலையில் ஆஜராகிய போதே, தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் பங்கேற்புடன் இக் கலந்துரையாடல் […]
அவுஸ்திரேலியா சென்ற திலித் – முக்கியஸ்தர்களுடன் சந்திப்பு

பாராளுமன்ற உறுப்பினரும் தொழில்முனைவாளர் திலித் ஜயவீர, அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் மேற்கொண்டு அந்நாட்டின் பல முக்கிய அரசியல் பிரதிநிதிகளுடன் விசேட கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளார். இதற்கமைய, விக்டோரியா பாராளுமன்ற உறுப்பினர் எவன் முல்ஹோலண்ட் (Evan Mulholland) மற்றும் மேற்கு விக்டோரியா பிராந்தியத்தின் எதிர்க்கட்சித் தலைவரும் விக்டோரியா பாராளுமன்ற உறுப்பினருமான பெவர்லி மெக்ஆர்தர் (Beverley McArthur) ஆகியோருடன் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போது, இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை வலுப்படுத்துவதற்காக அவுஸ்திரேலியா வழங்கி வரும் […]
ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் கபில சந்திரசேனவின் மரண விசாரணை மீண்டும் ஆரம்பம்!

ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் இதுவரை 10 இற்கும் மேற்பட்டவர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் போது பல டொலர்களை இலஞ்சமாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கபில சந்திரசேனவிற்கு எதிராக விசாரணை இடம்பெற்று வரும் நிலையில், கொள்ளுப்பிட்டியவில் உள்ள வீட்டில் இருந்து (08) திகதி சடலமாக மீட்கப்பட்டிருந்தார். கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான […]
சீரற்ற வானிலை; வௌ்ளத்தால் மூழ்கிய வைத்தியசாலை!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, சிலாபம் பொது வைத்தியசாலையின் 3 சிகிச்சை அறைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக அந்த சிகிச்சை அறைகளில் இருந்த நோயாளர்களை வேறு சிகிச்சை அறைகளுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் தினேஷ் கொக்கல தெரிவித்தார். அத்துடன், நேற்று இரவு முதல் பெய்து வரும் பலத்த மழை காரணமாக புத்தளம் பகுதியின் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், சில வீதிகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. புத்தளம் – மாதம்பை, […]
தர்மபுரம் – பிரமந்தனாறு பகுதியில் மரக் குற்றிகளை கடத்தியவர் கைது

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் சட்ட விரோதமான முறையில் முதிரை மரக் குற்றிகளை கடத்த முற்பட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த பகுதியில் உள்ள ஒதுக்கப்பட்ட அரச வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து சந்தேகநபர் இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைவாக நேற்று (21) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவரை இன்றைய தினம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விரைவாக வாகன இலக்கத் தகடுகளை பெறுமாறு அறிவிப்பு

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் அச்சிடப்பட்டு, வாகன உரிமையாளர்களால் இதுவரை பெற்றுக்கொள்ளப்படாத வாகன இலக்கத் தகடுகளை ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் விரைவாகப் பெற்றுக்கொள்ளுமாறு மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த ஆண்டுகளில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் அச்சிடப்பட்ட நிலையில், இதுவரை வாகன உரிமையாளர்களால் பெற்றுக் கொள்ளப்படாத சுமார் ஒரு இலட்சம் வாகன இலக்கத் தகடுகள் திணைக்கள வளாகங்களில் தேங்கியுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. கொழும்பு மாவட்டம் சார்பாக நாரஹேன்பிட்டியில் உள்ள மோட்டார் […]
உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி வலி. வடக்கில் போராட்டம்!

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி, காணி உரிமையாளர்களால் பிரதி வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வரும் போராட்டம், இன்றும் (22) இராணுவத்தினரின் “கொமாண்டோ” பங்களா முன்பாக ஐந்தாவது நாளாக நடத்தப்பட்டது. வலி. வடக்கில் 249, 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி […]
கொக்கிளாய் – புல்மோட்டை பாலம் அமைக்க கோரிக்கை

ல்லைத்தீவு – கொக்கிளாய் மற்றும் திருகோணமலை – புல்மோட்டை ஆகிய பகுதிகளை இணைக்கும் இணைப்புப் பாலத்தினை அமைப்பதற்கு 2027ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யுமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சர் விமல் ரத்நாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கமைய, எதிர்வரும் வரவுசெலவுத்திட்டத்திற்குள் குறித்த கொக்கிளாய் – புல்மோட்டை இணைப்புப் பாலம் அமைப்பது தொடர்பான ஆரோக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என அமைச்சர் விமல் ரத்நாயக்க பதிலளித்துள்ளார். […]