கனடாவின் ‘CERB’ நிவாரண நிதியில் சைபர் மோசடி: ஒட்டாவா, மொன்றியலைச் சேர்ந்த 8 பேருக்கு எதிராகக் குற்றச்சாட்டு

கனடா வருவாய் முகமையகம் (CRA) மற்றும் கொரோனா பெருந்தொற்று கால அவசரகால நிவாரணக் கொடுப்பனவு (CERB) திட்டத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பாரியளவிலான சைபர் மோசடி விசாரணை ஒன்றினை அடுத்து, ஒட்டாவா, கத்தினோ (Gatineau) மற்றும் மொன்றியல் ஆகிய நகரங்களைச் சேர்ந்த எட்டு பேருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக ராயல் கனடியன் மவுண்டெட் பொலிஸார் (RCMP) தெரிவித்துள்ளனர். கொரோனா பெருந்தொற்றுக்கால நிதியுதவிகள் வழங்கப்பட்ட போது, கனடா வருவாய் முகமையகத்தின் (CRA) இணையக் கணக்குகள் சைபர் தாக்குதலுக்கு உள்ளானதை […]

மொனராகலையில் சிறுவன் செலுத்திய வாகனம் மோதி சிறுமியின் கால் அகற்றம்!

மொனராகலை – சியம்பலாண்டுவ பிரதான வீதியின் சிறிகல, கிரிமண்டல சந்திக்கருகில் இடம்பெற்ற கொடூர விபத்தில் 14 வயதுடைய பாடசாலைச் சிறுமி ஒருவரின் கால் ஒன்று அகற்றப்பட்டுள்ளதுடன், அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். மொனராகலை திசையிலிருந்து ஒப்பேகொட திசையை நோக்கி பயணித்த கெப் ரக வாகனமும், ஒப்பேகொட திசையிலிருந்து மொனராகலை திசையை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த சிறுமியும் அவரது தந்தையும் […]

போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகள் இருவரின் சொத்துக்கள் முடக்கம்

‘வனாதே பொக்கா’ மற்றும் ‘மெதவச்சியே அக்கா’ ஆகியோரின் சொத்துக்கள் முடக்கம் தனுஷ்க புஷ்பகுமார எனப்படும் ‘வனாதே பொக்கா’ மற்றும் பாத்திமா ரெஜினா எனப்படும் ‘மெதவச்சியே அக்கா’ ஆகிய தம்பதியினரின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தைக் கொண்டு இந்த சொத்துக்கள் வாங்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அத்துருகிரிய, சாந்தாலோககம பகுதியில் அமைந்துள்ள சுமார் 4 கோடி ரூபாய் பெறுமதியான வீடு ஒன்றை 7 நாட்களுக்கு முடக்குவதற்கு குற்றப் புலனாய்வுத் […]

நாட்டின் கட்டமைப்புக்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒத்துவராத ஒன்று – காமினி வியன்கொட

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை என்பது எமது நாட்டின் நிறுவனக் கட்டமைப்புக்கு ஒத்துவராத ஒன்று. இந்த நாற்காலியில் அமர்பவர்கள் தங்களின் பழைய கொள்கைகளை மறந்து பேராசை கொள்ளும் நிலைமையே இலங்கையில் தொடர்கிறது என இலக்கியவாதியும் சமூக ஆர்வலருமான காமினி வியன்கொட தெரிவித்துள்ளார். இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் நிறைவேற்று அதிகார […]

திருக்கோவிலில் ஐந்து மோட்டார் குண்டுகள் மீட்பு; யுத்த காலத்தில் பயன்படுத்த மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடியாறு குளத்திற்கு அருகில் புதைக்கப்பட்டிருந்த ஐந்து மோட்டார் குண்டுகள் நேற்று புதன்கிழமை (20) துருப்பிடித்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன. பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக இவை மீட்கப்பட்டுள்ளதுடன், இந்த குண்டுகள் கடந்த யுத்த காலத்தில் பயன்படுத்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது மீட்கப்பட்டுள்ள குண்டுகள் தொடர்பாக திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், மீட்கப்பட்ட குண்டுகளை பாதுகாப்பான முறையில் செயலிழக்கச் செய்வதற்காக விசேட அதிரடிப்படையினருக்கு […]

பொருளாதார நெருக்கடி; எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு ஜனாதிபதி கோரிக்கை

நாடு கடந்த காலத்தைப்போல மீண்டும் ஒருபோதும் ஒரு பொருளாதார நெருக்கடி நிலைக்கு தள்ளப்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார். முழு நாடும் ஒன்றாக எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பில் தற்சமயம் இடம்பெற்று வரும் நிகழ்வில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இலங்கை ரூபாய்க்கு நிகராக அமெரிக்க டொலர் அதிகரித்துள்ளமையினால் எமது பொருளாதாரத்தில் பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது. எமது முக்கிய வருமான வழியாக சுற்றுலாத்துறை காணப்படுகின்றது. கடந்த வருட […]